ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள “ காவியன் “ விரைவில் ரிலீஸ்!

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள “ காவியன் “ விரைவில் ரிலீஸ்!

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ”  K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில்   “ காவியன் “  என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.

 ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட்  நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு           –        N.S.ராஜேஷ் குமார்

இசை                    –        ஷ்யாம் மோகன்

பாடல்கள்             –        மோகன்ராஜ்

ஸ்டன்ட்                –        ஸ்டன்ட் சிவா

கலை                    –        T.N கபிலன்

நடனம்                 –        விஷ்ணுதேவா

எடிட்டிங்              –        அருண்தாமஸ்

தயாரிப்பு   –        2M cinemas ”  K.V. சபரீஷ் 

எழுத்து இயக்கம் –  சாரதி

முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம்  இது என்ற பெருமையை காவியன் நிச்சயம் பெரும். சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்றார் தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ்.

error: Content is protected !!