சவரக்கத்தி – திரை விமர்சனம் – இதுதான் ரியல் பிளாக் காமெடி படம்.. !
நம் உலகச் சினிமாவோ, இந்திய சினிமா அல்லது தமிழ் சினிமாவோ பல பரிட்சார்த்தங்களை கடந்து, பல தடைகளைக் கடந்துதான் வளந்து இருக்கிறது. ஆனாலும் பெரும்பாலான சினிமாக்கள் காதல், பாசம், குரோதம் அல்லது கோபம் ஆகியவற்ரில் எதாவது ஒன்று அல்லது இரண்டு அம்சத்தைக் கொண்டு உருவாகுவதுதான் வழக்கம். ஆனால் கோலிவுட்-டின் தனி ட்ராக்கில் பயணிக்கும் இயக்குநர் மிஷ்கின் எழுத்தில் அவர் தம்பி இயக்கிய ’சவரக் கத்தி’ படத்தில் இன்பம்,,நகை,,கருணை,கோபம், வீரம், பயம், அருவருப்பு,அற்புதம், சாந்தம் என்ற நவரசங்களை யும் காட்டி அசத்தி இருக்கிறார்கள் என்பதுதான் விசேஷம்.
பார்பர் தொழில் செய்யும் பிச்சை என்ற நாமகரணத்தில் உள்ள ராம் தான் பேசுவதன் ஆழம் தெரியாமலேயே உண்மையை மறைத்து அல்லது மறந்து பேசுவது வாடிக்கை. இவனுக்கு ஒரு ரெண்டு குழந்தையுடன் வாயும் வயிறுமாக அதே சமயம் காது கேளாத ஒரு அழகான ராட்சரி மனைவி.அதே சமயம் பரோலில் வெளியில் வந்து மறுபடியும் ஜெயிலுக்கு போய் பப்ளிக் டாய்லெட் போக வேண்டிய மங்கா என்ற பெயருடைய மிஷ்கின். இந்த இருவரும் ஒரு ரெட் சிக்னலில் சந்தித்த போது நடந்த களேபரத்தில் மிஷ்கின் வாய் உடைந்து ரத்தம் கொப்பளிக்கிறது . இதற்குக் காரணம் ராம் &கோ தான் என்ற முடிவுக்கு வந்த மிஷ்கின் &கோ டென்ஷனாகி.. டென்ஷனாகி,, டென்ஷனாகி.. போய் எங்கே போய் எப்படி முடிகிறது என்பதுதான் சவரக்கத்தி.
சவரக் கத்தி என்பதால் பார்பர் ஷாப் கதை என்றோ கத்தி என்பதால் படம் முழுக்க ரத்தம் சிந்தும் என்றோ நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். கத்தியையும் கையிலும் பொய்யை வாயிலும் வைத்தப்படி கோபத்தைக் காட்டி கொண்டு முழு நீள காமெடி படம் கொடுத்து அசத்தி இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும் . ஆம்.. இதுதான் ரியல் பிளாக் காமெடி படம்.. நம் தமிழில் இந்த டைப்-பில் நிறைய பேர் படமெடுக்க முயன்று தோல்வி அடைந்த சூழலில் மேற்படி பிளாக் காமெடி என்றால் என்ன என்பதை எழுதி, நடித்து தயாரித்தும் பிரமிக்க வைத்து விட்டார் மிஷ்கின்,
சில பல நேரங்களில் டைட்டிலுக்கேற்ற மாதிரி ‘கத்தி’ கொண்டே இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் நம் மனதை டச் பண்ணி வாய் விட்டு சிரிக்க வைப்பதில் ஜெயித்துள்ளார் இயக்குநர் ஆதித்யா. அதிலும் வாய் பேச முடியாத ஒரு டீ காரர் ராமிடம் சைகை மூலம் சொல்லும் மெசெஜை தியேட்டரே புரிந்து கை தட்டி ஆர்ப்பரிக்கும் போக்கு தமிழ் சினிமாவுக்கு புதுசு.. அத்துடன் தன் ஆரம்பகால படத்தில் ‘வாளைமீனுக்கு விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ பண்ணி வைத்த மிஷ்கின் புது டைப்பில் பெத்தப்பா , ஷேக்பியர் கொடேஷன்களை அநாயசமாக சொல்லும் மனநலன் பாதிக்கப்பட்டவர் , மிஷ்கின் உதவியாளர்கள் – குறிப்பாக அந்த மோதிரம், செயினைப் பரிசாகப் பெறும் நபர் என்று ஒவ்வொருவரின் பாத்திர படைப்பை நச் என்று வெளிச்சமிட்டு காட்டி உள்ளார்கள். அதே சமயம் ராம் மற்றும் பூர்ணா-வின் நடிப்பின் அளவை இன்னும் மெருக்கேற்றி இருக்கலாம் என்று குறை சொன்னாலும் மிஷ்கின் என்ற படைப்பாளி ராட்சஷனுகாகவது இந்த படத்தை பார்த்து விடுங்கள்..