June 2, 2023

வங்கி நேரம் குறைகிறது!

நாடே நெருக்கடியான இந்த கொரோனா அச்சத்தால் முடக்கப்பட்டிருக்கும் இச்சூழலில் நம் தமிழ் நாட்டில் உள்ள எல்லா வங்கிகளும் புதன்கிழமை (ஏப்.15) முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு என அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை அறிவித்தாா். அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமில்லாத இடங்களில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் என்றும் அவா் கூறினாா்.

மேலும், வருகிற 20-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் நிபந்தனை களுடன் சில தளர்வுகள் அறிவிக்கப்படும். அதேவேளையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய கடைகள் மற்றும் வங்கிகள் செயல்பட்டு வந்தன. கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், வங்கிகள் முழுநேர சேவையில் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து புதன்கிழமை (ஏப்.15) முதல் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.