கடந்த 5 ஆண்டுகளில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை – மத்திய கல்வித்துறை தகவல்.

கடந்த 5 ஆண்டுகளில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை – மத்திய கல்வித்துறை தகவல்.

ம் நாட்டில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர் தற்கொலைகள் நிகழ்வதும், பட்டியலின, பழங்குடி மாணவர்கள் உயிர் பறிபோவதும் பற்றி மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 98 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, ஐ.ஐ.டி.களில்தான் 39 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆவர். தனிமை உணர்வு, வன்முறை, குடும்ப பிரச்சினை, மனநல பிரச்சினை ஆகியவைதான் தற்கொலைக்கான காரணங்கள் ஆகும் என தெரிவித்தார்.

ஆனால் இது போன்ற இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT)-களில் தொடரும் சாதியப் பாகுபாடு, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஜாதீய திமீரை அடக்காமல் இப்பிரச்சினை தீராது என்று சொல்வோருமுண்டு..

சாதியை நேராக சொல்லி தீட்டித்தான் ஒடுக்க வேண்டும் என்பதல்ல. உயர்சாதியினரின் அணுகுமுறை, பழக்கவழக்கம், அன்றாட நடவடிக்கை இவைகளே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மாணவ / மாணவிகளை மன உளச்சலுக்கு ஆளாக்கும். தான் ஏதோ ஒரு வகையில் தனிமைப்படுத்தப்படுகிறோம் ஒதுக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொண்டு இப்படி வாழ்வதற்கு தற்கொலையே செய்துகொள்ளலலாம் என முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இங்கு அதிகம். இப்படியான உயர்சாதியினர் மனநிலை கொண்டோர் தவிர யாரும் படிக்கமுடியாத, படிக்கக் கூடாத இடமாக இந்த தொழில்நுட்ப கழகங்கள் திகழ்ந்து வருகின்றன. இவற்றையெல்லாம் பேசாமல் வெறும் மாணவர்களின் இறப்பை மட்டும் பேசி கடந்துபோவதென்பது நமக்கு எந்த ஒரு இறுதி முடிவையும் தராது என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது..

உண்மையில் கடந்த 2014 முதல் 2021 வரை ஐஐடிகள், ஐஐஎம்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற மத்திய நிதியுதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றொரு தகவலுமுண்டு. இப்படி தற்கொலை செய்து கொண்ட 122 மாணவர்களில் 24 பேர் தாழ்த்தப்பட்ட பட்டியல் வகுப்பினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 3 பேர் பட்டியல் பழங்குடியின மாணவர்கள். மேலும் 10-க்கு மேற்ப்பட்டவர்கள் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஒரு பாதி பிரிவினரையே கொன்று விட்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு மேலும் பல கொலைகளை அரங்கேற்றி கொண்டு இருக்கிறது ஒரு ஜாதி கும்பல் என்பதுதான் சோகம்

Related Posts