அமலாக்கத்துறை இயக்குனர் எஸ் கே மிஸ்ரா பதவி நீட்டிப்பிற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ் கே மிஸ்ரா பதவி நீட்டிப்பிற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!

மலாக்கத்துறையில் எஸ்.கே.மிஸ்ரா தவிர மற்ற அதிகாரிகள் திறமையற்றவர்களா?அவரில்லாமல் இத்துறை செயல்பட முடியாதா?என்று சுப்ரீம் கோர்ட் கேள்வியெழுப்பிய நிலையில் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தினை வரும் செப்டம்பர் 15ம்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பலம் வாய்ந்த சிபிஐ மற்றும் விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியமைத்து மத்திய அரசு கடந்தாண்டு அவசர சட்டம் இயற்றியது. இதனால் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை 2023ம் ஆண்டு நவம்பர் 18 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதோடு 3 முறை இவருக்கு மத்தியஅரசு பதவிக்கால நீட்டிப்பினை வழங்கியுள்ளதால், இது சட்டவிரோதம் என்று கூறிய சுப்ரீம் கோர்ட் , இன்னும் 15 நாட்களில் புதிய அமலாக்கத்துறை இயக்குனரை நியமிக்கவேண்டும் என்றுக்கூறி உத்தரவிட்டது.

இந்த நிலையில், , அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் 3.30 மணிக்கு மேல் நீதிபதிகள் பி.ஆர் கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற நிலையில், இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமலாக்கத் துறையில் எஸ்.கே. மிஸ்ராவைத் தவிர மற்ற அனைத்து அதிகாரிகளும் தகுதியற்றவர்களா? எஸ்.கே. மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லை என்றால், ஒட்டுமொத்த அமலாக்கத் துறையும் செயல்பட முடியாதா? என்று மத்திய அரசுக்கு காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தது. மேலும், எஸ்.கே. மிஸ்ராவின் பணிக்காலத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து, அதன் பிறகு அவரது பணிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பான எந்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது என்று உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!