உங்க ஸ்மார்ட் போனில் என்ன ஆப்ஸ் இருக்கு? அல்லது என்ன சேவை வோணும்? -மாறும் மார்க்கெட் டார்க்கெட்!
சுமார் ஐந்தாறு வருஷங்களுக்கு முன்னாடி கொஞ்சுண்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்த ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில், தற்போது இந்திய நிறுவனங்கள், சீன நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் என எக்கச்சக்கமான நிறுவனங்கள் ஈடுபட ஆரம்பித்து விட்டதால் ஸ்மார்ட் போன் சந்தை கோயம் பேடு ரேஞ்சுக்கு போய் விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் போட்டி காரணமாக நிறுவனங்களின் லாப வரம்பு மிகவும் குறைந்து போய் விட்டது.<

/p>
இதற்குக் காரணம் மொபைலில் இனி மாபெரும் மாற்றங்கள் எதுவும் பெரிய அளவில் செய்து விட முடியாது. ஆப்பரேட்டிங் சிஸ்டம், மெமரி, கேமரா என அனைத்து விதங்களிலும் புதுமைகள் வந்துவிட்டன. அதனால் இது புதுசாக்கும் என்று சொல்லி மொபைலை விற்க முடியாது, இதனால் மொபைலில் மட்டுமே கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களை கவர முடியாது என்பதைப் புரிந்து கொண்டு பல வகைகளில் பல நிறுவனங்கள் யோசிக்கின்றன.குறிப்பாக சேவை மற்றும் செயலி உருவாக்குவதில்தான் ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்து அதில் லாபம் சம்பாதித்த காலம் முடிந்துவிட்டது. சேவைகளில் மூலமே இனி லாபம் ஈட்ட முடியும் என்று லீஇகோ இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அதுல் ஜெயின் கூறியிருக்கிறார்.இதற்காக இந்த நிறுவனம் செயலி மற்றும் இதர சேவைகளுக்காக பெங்களூ ரூவில் 1000 பணியாளர்களை பணிய மர்த்தி உள்ளது. தவிர யப் டிவியுடன் (yupp tv) இணைந்து 200-க்கும் மேற் பட்ட சேனல்களை மொபைலில் நேரடியாக பார்க்கும் வசதியை வழங்குகிறது.
அதேபோல ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் படங்களையும் மொபை லில் பார்க்க முடிகிற வசதியையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. இதை தாண்டியும் இந்தியாவுக்கென பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு பணியாற்றி வருகிறது. இதற்காக ஒரு கோடி டாலர் முதலீட்டையும் இந்த நிறுவனம் செய்திருக்கிறது.
மேலும் ஜியோமி நிறுவனமும் மொபைலில் கன்டென்ட் வழங்கும் நடவடிக்கையில் இருக்கிறது. புதிய செயலி உருவாக்கம் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் நிறுவனங்களுடன் இந்த நிறுவனம் பேசி வருவதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.இதனிடையே தற்போது இந்தியாவில் 4ஜி சேவை அதிகரித்து வருவதும் இந்த நிறுவனங்கள் வீடியோவில் கவனம் செலுத்துவதற்கு இன்னொரு காரணமாகும்.
இதையெல்லாம் கணக்கிட்டு உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸும், இசை தொடர்பான செயலியான கானா, விலை ஒப்பீட்டு செயலி, சுற்றுலா சம்பந்தமான செயலி உள்ளிட்ட சில செயலிகளில் முதலீடு செய்துள்ளது. தவிர மேலும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இந்த நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை மிகப்பெரிய சேவை நிறுவனமாக உயர்த்த வேண்டும் என்றும் அதற்காக புதிய மைக்ரோமேக்ஸ் 3.0 உத்தியை வகுத்துள்ளோம் என்று அதன் நிறுவனர் ராகுல் சர்மா தெரிவித்திருக்கிறார்.
அது சரி உங்க மொபைல்லே ஆந்தை ரிப்போர்ட்டர் ஆப் இருக்கா?


