MBA/MCA சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?

அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு அளவில் TANCET எனப்படும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் MBA/MCA படிப்புகளூக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான TANCET தேர்வு மார்ச் 22-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதி கலந்தாய்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?
டான்செட் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https://www.tn-mbamca.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கலந்தாய்விற்கு பதிவு செய்ய வேண்டும். இதற்கு பதிவு கட்டணமாக் ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.400 செலுத்த வேண்டும். ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனைத் தொடர்ந்து, கட்-ஆஃப் அடிப்படையில் தரவரிசை பட்டியல் ஜூலை 14-ம் தேதி வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, தரவரிசை பட்டியல் மீதான புகார்கள், குழப்பங்களுக்கு பதில்கள் ஜூலை 15 முதல் 18 வரை தீர்க்கப்படும். தொடர்ந்து, ஜூலை 21-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
எம்பிசி படிப்பிற்கு பொது கலந்தாய்வு ஜூலை 24 முதல் ஜூலை 29-ம் தேதி வரையும், எம்பிஏ படிப்பிற்கு பொது கலந்தாய்வு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரையும் நடைபெறும். துணை கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 5 முதல் 7 வரை நடைபெறும். 100 முதல் 50-த்திற்கும் குறைவான கட்-ஆஃப் பெற்றவர்கள் துணை கலந்தாய்வில் பங்குபெறலாம்.
கலந்தாய்வு எப்படி நடைபெறும்?
விண்ணப்பதார்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் வழியாக சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, விண்ணப்பதார்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்யப்பட்ட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணை வெளியிடப்படும். தொடர்ந்து, அதனை உறுதி செய்தி கல்லூரியில் நேரடியாக சென்று சேர வேண்டும். கலந்தாய்வில் கலந்துகொள்ள ரூ.5,000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.1,000 செலுத்த வேண்டும்.