‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

றம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசைவிழா திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

.

இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் CV குமார் பேசியது…

இயக்குநரை எனக்கு 10 வருடமாக தெரியும் அட்டகத்தி நேரத்தில் என்னிடம் இந்த கதை சொன்னார். அவரிடம் இந்த கதையை படமெடுக்கலாம் என பேசிக்கொண்டிருந்தோம். மிக அழகான காதல் கதை இது. இந்தக் கால இளைஞர்கள் பற்றிய கதை. அனைவரும் படத்தில் அருமையாக செய்துள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் ரவிக்குமார் பேசியது…

CV குமார் கதை தேர்வு செய்வதும் தயாரிப்பில் ஈடுபடுவதும் ஆச்சர்யம் தரும். அவர் புதுமுகங்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழு மிக அழகான திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அருமையாக உழைத்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் ராம்குமார் பேசியது…

CV குமார் ஒரு படத்தில் சம்பந்தப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அந்தப்படம், கதை வித்தியாசமாக இருக்கும். இந்தப்படமும் பார்க்க அழகாக இருக்கிறது படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகர் RK சுரேஷ் பேசியதாவது…
CV குமார் இருப்பதால் கதைக்களம் நன்றாக இருக்கும். காலங்களில் அவள் வசந்தம் டைட்டிலே நன்றாக இருக்கிறது. இன்று தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது. தம்பி விஷ்வா இப்படத்தில் பங்குபெற்றுள்ளார். நாயகன் அழகாக இருக்கிறார். நாம் இருந்த இடத்தை மறக்க கூடாது, அதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் கௌரவ் பேசியது…

CV குமார் ஒரு விஷயத்தில் கை வைக்கிறார் என்றாலே அது பற்றி அனைத்தையும் அலசி விடுவார். லவ் படத்தில் நாயகன் நாயகி அழகாக இருக்க வேண்டும். இப்படத்தில் இருவரும் அழகாக இருக்கிறார்கள். டைட்டிலே பாஸிட்டிவாக நன்றாக இருக்கிறது. படம் அனைவருக்கும் வசந்தம் தரும், வாழ்த்துகள்.

நாயகி அஞ்சலி நாயர் பேசியது…

இந்தப்படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்தற்கு நன்றி. ராதே கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஹரி மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. கௌஷிக், ஹெரோஷினி எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். இப்படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி ஹெரோஷினி பேசியது…

என் டீமுக்கு முதல் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் மிக அழகாக வந்துள்ளது. நாங்கள் அனைவரும் இன்னும் நெடுந்தூரம் பயணப்பட வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. விரைவில் உங்களை திரையில் சந்திக்கிறோம் நன்றி.

இயக்குநர் ராகவ் மிர்தாத் பேசியது…

என் அப்பா அம்மாவுக்கு நன்றி. என் மனைவிக்கு மிக நன்றி அவர்கள் சப்போர்டில் தான் நான் இங்கு இருக்கிறேன். ஸ்போர்ட்ஸில் லவ் ஆல் சொல்லி துவங்குவது போல் தான் இந்தப்படத்தை துவங்கியுள்ளேன். அன்பு தான் இந்தப்படத்தின் அடிப்படை. இந்தப்படத்தில் ஹரி மிக அற்புதமான இசையை தந்துள்ளார். கண்டிப்பாக இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். இந்தப்படம் கல்யாணத்திற்கு பிறகான காதலை சொல்லும் படம் மெச்சூரிட்டியை புரிந்து கௌஷிக் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். அஞ்சலி நாயர், ஹெரோஷினி இருவரும் கண்டிப்பாக பாராட்டை பெறுவார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளார்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

நடிகர் கௌஷிக் பேசியது…

இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. சின்ன வயதிலிருந்தே எனக்கு பொழுதுபோக்கு துறை மீது அதிகம் விருப்பம் இருந்தது. என் குடும்பம் எனக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார்கள் அவர்களுக்கு நன்றி. இயக்குநரின் 15 வருட கனவு இந்தப்படம். இந்தக்கனவை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளோம். உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.

error: Content is protected !!