32°C
விளம்பரம்
Advertisement

மகளிர் ஐ.பி.எல். தொடர் : மார்ச் மாதம் நடத்த பிசிசிஐ முடிவு?

admin சேலம் Published: October 14, 2022 1 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



5 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 5 அணிகளிலும் தலா 18 வீராங்கனைகளும், அதில் 6 பேர் வெளிநாட்டு வீராங்கனைகளும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும் நிலையில், லீக் சுற்றின் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும்.

மேலும் 2 மற்றும் 3 ஆவது இடங்களில் உள்ள அணிகள் மோதி, அதில் வெல்லும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். மகளிர் ஐ.பி.எல்.லில் மொத்தம் 22 போட்டிகளை நடத்தவும், தற்போது ஊர் பெயரில் அல்லாமல் தெற்கு, வடக்கு என பிராந்திய அடிப்படையில் அணிகளை உருவாக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்