கட்ஸ் – விமர்சனம்!

கட்ஸ் – விமர்சனம்!

டிகனாக வேண்​டும்​ என்று 25 ஆண்​டுகளாகப்​ போராடிக்​ கொண்​டிருந்தவர் ரங்கராஜ். ஒரு கட்​டத்​துக்​கு மேல் மன உளைச்​சலாகி விலகி விடலாம்​ என தீர்மானித்தார். அப்​போது இவர் நண்​பர்கள் சிலர் ஷார்ட் பிலில் இயக்​கினார்கள். அவர்கள் குறைந்​த பட்​ஜெட்​டில் ஒரு படத்​தைத்​ தயாரிக்​க முடியும்​ என்றார்கள். அந்த வார்த்தைகள் ரங்கராஜூக்கு நம்​பிக்​கையை தந்​தது. இதை அடுத்து இவரே தயாரிக்​கத்​ தொடங்​கினேன். ரங்கராஜூக்​கு சினிமா பின்னணி கிடையாது. கடைக்​கோடி கிராமம்​ ஒன்றில் இட்​லி சுட்​டு விற்பனை செய்​யும்​ அம்​மாவின் மகன் இன்று இரட்டை வேட நடிகனாகி அடிசினலாக இயக்குநராகி பிரொடியூஸூம் செய்து வழங்கியுள்ள படமே ‘கட்ஸ்’ அதிலும் நம் மண், நம் மக்கள், நம் விவசாயம் ஆகியவற்றோடு நமது பெருமைமிகு தமிழ் மொழியையும் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்ற கருத்தியலை சொல்லும் படமிது.

ஒரு ஹானஸ்ட் போலீஸான ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்பட்ட ஒரு திருநங்கையின் வழக்கை விசாரிக்கிறார். அந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் தலைவன் ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் வைக்கிறார். ஆனால் கைது செய்த ஒரே மணி நேரத்தில் தனது அதிகாரத்தை வைத்து நேரத்தில் வில்லன் வெளியே வந்து ரங்கராஜை பழிவாங்க முயல்வதும். அச்சூழலில் நாயகன் ரங்கராஜ் தனது மகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே கட்ஸ் படத்தின் கதை. கூடவே இறந்துபோன தனது தந்தைக்கும் இந்த வில்லன்களுக்கும் என்ன தொடர்பும் என்பதுடன் முன்னரே சொன்ன கொஞ்சம் தமிழுணர்வும் , விவசாயிகளுக்கான மெசேஜும் இணைந்துள்ளது.

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியான விவசாயி பெத்தனசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என இரண்டு ரோல்களில் அதுவும் அப்பா மற்றும் மகன் என முதல் படத்திலேயே நடித்திருக்கும் ரங்கராஜ், காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என சகல ஏரியாவிலும் தன் இருப்பை காட்ட பெரிதும் முனைப்பு காட்டியுள்ளார். குறிப்பிட்டு சொல்வதானால் ‘காக்க காக்க’ சூர்யா போல் லவ் சீன்களில் ரொமான்ஸ் செய்பவர், மனைவியின் சடலம் முன்பு ‘வேட்டையாடு விளையாடு’ கமல் ஸ்டைலில் கதறி அழுகிறார். அப்பாவான விவசாயி ரோலில் பெரிய மீசையோடும், அருவாளோடும் வலம் வந்து சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டுபவர், கள்ளுக்கடையில் குத்தாட்டம் போட்டு ‘பருத்திவீரன்’ கார்த்தியை நினைவுப்படுத்துகிறார். ஒட்டு மொத்தமாக படம் முழுவதுமே தனக்கு தெரிந்த வெள்ளித்திரை நாயகர்களை எக்ஸ்போஸ் செய்கிறார்.

மீசைக்கார அப்பா பெத்தனசாமியின் மனைவி கணவதியம்மாளாக ஸ்ருதி நாராயணன் பக்கா கிராமத்துப் பெண்ணாகவே தோன்றி தனது கேரக்டரின் வலுவை உணர்ந்து தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் ரங்கராஜின் மனைவி அனுவாக நான்ஸி ஃபேமிலி லேடி ரூலில் மலையாளம் கலந்த தமிழ் பேசி கவனம் ஈர்க்கிறார்.வயது முதிர்ந்த டெல்லி கணேஷ் தனது நடிப்பை இயல்பாக வழங்க முயன்றாலும் அவரது தள்ளாத வயதின் தளர்வு வெளிப்படுகிறது. சாய் தீனா, பிர்லா போஸ் ஶ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா ஆஜர் ஆகி இருக்கிறார்கள்..!

கேமராமேன் மனோஜ் கதைக்களத்திற்கு ஏற்றவாறும், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும்ன் பங்களிப்பை அளித்துள்ளார்.

மியூசிக் டைரக்டர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கவன் செலுத்தி இருக்கலாம்.

எடுத்து கொண்ட கதையோ , திரைக்கதையோ கொஞ்சமும் புதிது இல்லை, அதை கையாண்ட விதமும் புதிதில்லை. ஆனால் கமிட் ஆன் நடிகர்களுக்கும் உணர்வுப்பூர்வமாக நடிப்பதற்கான களத்தை இயக்குநர் கொடுத்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது. எமோஷ்னலான காட்சிகளில் நடிகர்கள் எதார்த்தமாக நடிக்க வைக்க இயக்குநர் பெரிதும்முயற்சிகளை எடுத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

என்றாலும் காட்சிகள் கோர்வையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோர்த்திருப்பதாக் சுவாரஸ்யமில்லாமல் போய் விடுகிறது.

மார்க் 2.25/5