சென்னை ஐஐடியில் இடம்பிடித்த பழங்குடியின மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்- முதல்வர் அறிவிப்பு!

சேலம் டிஸ்ட்ரிக், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி (50). இவரது மனைவி கவிதா(45). தையல் தொழிலாளியான ஆண்டி கடந்தாண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி என 3 மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இதை அடுத்து “அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை என்ற ஊரில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வறுமை மற்றும் அடிக்கடி இடம் பெயர்வது உள்ளிட்ட காரணங்களால் அதிகபட்சம் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பார்கள்.இவர்களில் ஒருவர் தான் ஆண்டி. இவர் தையல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய மூன்று மகள்கள், ஸ்ரீகணேஷ் என்ற மகன் என 4 பிள்ளைகள் உள்ளனர். ஆண்டிக்கு தனது மகள்களை நன்றாக படிக்க வைத்து உயர் பதவிக்கு அனுப்ப வேண்டும் என்று ஆசை.அதனால் தையல் வேலை செய்து தனது மகள்களை படிக்க வைத்தார்.இதில் மூத்த மகள் கெஜதீஸ்வரி இளங்கலை பட்டம் பெற்று சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்தசூழலில் 2024ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பின் காரணமாக ஆண்டி இறந்துவிட்டார். எனவே இளங்கலை பட்டதாரியான ஆண்டியின் மகன் ஸ்ரீகணேஷ் தந்தையின் தொழிலான தையல் வேலையை தொடர்ந்தார். அம்மா கவிதா தினகூலிக்கு வேலைக்கு செல்பவர். இரண்டாவது மகள் ராஜேஸ்வரி 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தார். 9 ஆம் வகுப்பில் கருமந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கேயே 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார்.10 ஆம் வகுப்பில் 438 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 521 மதிப்பெண்களும் எடுத்திருந்தார்.ராஜேஸ்வரிக்கு பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை. இந்தநிலையில் பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மெயின் மற்றும் அட்வான்ஸ்டு ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்றார்.ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். சமீபத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் இவருக்கு சென்னை ஐஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் பழங்குடியின சமூகத்தில் இருந்து ஐஐடிக்கு செல்லும் முதல் மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார் ராஜேஸ்வரி.
இதை அடுத்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐஐடியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
அதே சமயம் தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக ஏராளமான பழங்குடி மாணவர்களுக்கு, என்ஐடிக்களில் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது