ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மற்றம்!

ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மற்றம்!

Facebook , Inc. என இருந்த ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா‘ என மாற்றுவதாக வருடாந்திர ‘ஃபேஸ்புக் கனெக்ட்’ நிகழ்வில் அறிவித்தார் மார்க் சக்கர்பெர்க். அதே சமயம் சமூக வலைதள சேவையின் பெயர் ஃபேஸ்புக் என்றே தொடரும் எனவும் அறிவித்துள்ளார். மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது. ஆங்கிலத்தில் (Beyond) என்ற வார்த்தையைக் குறிக்கும். கடந்த 1992ம் ஆண்டு நீல் ஸ்டீபென்சன் என்ற ஆங்கில எழுத்தாளர் தனது ‘ஸ்னோ கிராஷ்’ நாவலில் மக்கள் அனைவரும் மெய்நிகர்(விர்ச்சுவல்) ஹெட்செட், கண்ணாடி போன்றவற்றை அணிந்து இணைந்திருத்தலையும், உரையாடுவதையும், விளையாடுவதையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது 1992ம் ஆண்டிலேயே டிஜிட்டல் உலகத்தை விரிவாக எழுதியிருந்தார். அதைத் தழுவியே மெட்டாவெர்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் விரைவில் மாற்றப்படஉள்ளது அதாவது ரீபிராண்ட் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மாநாட்டில் இதற்கான அறிவிப்பை ஜூகர்பெர்க் நேற்று வெளியிட்டார். அதேசமயம், ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளின் பெயர்கள் மாற்றப்படாது. தற்போதிருக்கும் பெயரிலையே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் காணொலியில் நடந்த மாநாட்டில் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகெர்ப்ர்க பேசியது:

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ரீபிராண்ட் செய்யப்பட்டு, மெட்டா பிளாட்ஃபார்ம் என்று அழைக்கப்படும் அதாவது சுருக்கமாக மெட்டா என்று அழைக்கப்படும். அதிவேகமாக டிஜிட்டல் உலகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மெட்டாவர்ஸ் உருவாக்கும். மெட்டா எனும் புதிய பெயர் சமூக ஊடக சேவையை விட மெட்டாவர்ஸில் முதலீடு செய்வதைதான் பிரதிபலிக்கிறது. நெருக்கமான தளங்களில் வாழ்ந்து, சமூகப் பிரச்சினைகளுடன் போராடி நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், இப்போது நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்கவும் உதவவும் நேரம் வந்திருக்கிறது.

நம்முடைய நிறுவனம் மெட்டா என்று இன்றிலிருந்து அழைக்கப்படும் என்று பெருமையுடன் தெரிவிக்கிறேன்., மக்களை ஒன்றாக இணைத்தல் எனும் நம்முடைய இலக்குகள் ஒரே மாதிரியானவைதான். நம்முடைய நிறுவனத்தின் செயலிகள், அதன் பிராண்ட்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்படாது. ஃபேஸ்புக் நிறுவனத்தை இன்று சமூக ஊடக நிறுவனமாக நாம் அனைவரும் பார்க்கிறோம். ஆனால், நம்முடைய டிஎன்ஏ என்பது, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மக்களை இணைப்பதாகும்.

மெட்டாவெர்ஸ் என்பது மெய்நிகர் சூழல். அதற்குள் நீங்கள் சென்று வெறும் திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக மெய்நிகர் உபகரணங்களான ஹெட்மசெட், ரியாலிட்டி கிளாஸ், ஸ்மார்ட்ஃபோன் ஆப், உள்ளிட்ட பல உபகரணங்கள் மூலம் மக்களுடன் சந்திக்கலாம், உரையாடலாம், விளையாடலாம். அடுத்த 10 ஆண்டுகளில் மெட்டாவெர்ஸ் 100 கோடி மக்களைச் சென்றடையும்.இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என நம்புகிறேன்.” என்று மார்க் தெரிவித்தார்

அதேசமயத்தில் ஃபேஸ்புக் செயலி தனது பெயரை மாற்றவில்லை, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் ஆகியவற்றின் பெயர்களும் மாறவில்லை. டிசம்பர் 1 ம்தேதி முதல் புதிய டிக்கர் சிம்பளான எம்பிஆர்எஸ் என்ற எழுத்துடன் செயல்படத் தொடங்கும்.

Related Posts

error: Content is protected !!