எலான் மஸ்க் புதிய சமூக வலைத் தளம் உருவாக்க முடிவு?

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் ‘ புதிய சமூக வலைதளம் ஒன்றை உருவாக்குவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அவரிடம் சோசியல் மீடியாவில் ஒருவர், “புதிய சமூக வலைதளம் ஒன்றை உருவாக்குவது குறித்து எண்ணி இருக்கிறீர்களா? பேச்சு சுதந்திரத்திற்கும் அதனை பின்பற்றுதலுக்கும் முன்னுரிமை அளிக்கும் சமூக வலைதளம், பிரசாரங்கள் குறைவாக உள்ள சமூக வலைதளம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்தையும் வெளிப்படையாக கொண்ட சமூக வலைதளம். அம்மாதிரியான சமூக வலைதளம் தேவை என நினைக்கிறேன் என கேள்வி எழுப்பியிருந்தார். அதர்குதான் மேற்படி பதில் சொல்லி இருந்தார்
ட்விட்டரில் மிக பிரபலமாக உள்ள எலான் மஸ்க், அண்மை காலமாகவே ட்விட்டரையும் அதன் கொள்கைகளையும் கடுமையாக விமரிசித்து வந்துள்ளார். பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளை நிலைநாட்ட தவறிய ட்விட்டர் ஜனநாயகத்தை பலவீனமடைய செய்திருக்கிறது என சாடியிருந்தார். பேச்சு சுதந்திரத்தை ட்விட்டர் நிலைநாட்டுகிறதா? என ட்விட்டரில் வாக்கெடுப்பும் நடத்தினார். இந்த வாக்கெடுப்பின் விளைவுகள் முக்கியமாக இருக்க போகிறது. எனவே, கவனமாக வாக்களியுங்கள் என அவர் பதிவிட்டிருந்தார். அதில், 70 சதவிகிதம் பேர், பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டவில்லை என்றே பதில் அளித்துள்ளனர்.
இந்நிலையில்தான், புதிய சமூக வலைதளம் ஒன்றை உருவாக்குவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டர், மெட்டாவின் பேஸ்புக், ஆல்பா பெட்டின் யூடியூப் ஆகிய சமூகவலை தளங்கள், பேச்சு சுதந்திரத்தை முடக்குகிறது என நினைக்கும் மக்கள், புதிய சமூக வலைதளம் ஒன்றை எலான் மஸ்க் உருவாக்கும் பட்சத்தில், அதற்கு மாறுவதற்கு வாய்ப்புண்டு.