ட்ராமா -விமர்சனம்!

ட்ராமா -விமர்சனம்!

பிரஸ் ஷோக்களில் நம் அருகில் எப்போதும் அமர்ந்து சினிமா பார்க்கும் சீனியர் ஜர்னலிஸ்ட் அடிக்கடி சொல்வது இது: ‘ “சினிமா என்பது அரைத்த மாவை அரைப்பதற்கான இயந்திரமில்லை. கலைகள் என்பது காலம் தோறும் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரக் கூடியவைகள், நகர்த்தப்பட வேண்டியவைகள். ஒரு விசயம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டுமானால் ஒன்று அது தன்னைத் தானே மறு சோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது வெளியிலிருந்து தூண்டும் சக்திகளின் வழி உட்படுத்தப்பட வேண்டும். சோதனைகளுக்கு முயற்சிகள்தானே முதல் படி. முயற்சிகள் எப்போதும் வானிலிருந்து குதித்து வருவது கிடையாது. வெறும் கையில் முழம் போடுவதிலிருந்து தொடங்குகிறது முயற்சிகள். இதன் காரணமாகத்தான் இதற்கு பெயரே சோதனை முயற்சிகள். மற்ற கலைகளைப் போல சினிமா கலையும் சோதனை முயற்சிகளை கடக்கும்போது அது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. அதாவது அரைத்த மாவை அரைக்கும் நபர்களிடமிருந்து நகர்ந்து வெறும் கையில் முழம் போட தெரிந்த ஆக்கப்பூர்வ சக்திகளை நோக்கி.’” என்ற சொல்லாடலுக்கு பலரும் பல அர்த்தம் கொடுப்பது வாடிக்கை. சில மாதங்களுக்கு முன் ‘இரவின் நிழல்’ என்றொரு புதுமைப் படத்தை எடுத்தது நினைவிருக்கலாம்,. அந்த டைப்பில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நைட்டில் நடக்கும் கொலையை கண்டுப்பிடிக்கும் காட்சிகளை ஒரே ஷாட்டில் எடுத்து அசத்தலாம் என்று இயக்குநர் அஜுகிழுமலா முயன்றிருப்பதே ‘ட்ராமா’  என்றொரு படம்.

அதாவது போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு புதிதாக பொறுபேற்கும் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்பாலா விரைப்பாக இருக்கிறார். அங்கு இருக்கும் மற்ற போலீஸாரில் ஹெட் கான்ஸ்டபிள் எல்லோரிடமும் ’நல்லவன்’-னு பேரெடுக்கணும் என்றெல்லாம் அட்வைஸ் செய்கிறார். . அப்போது காதல் ஜோடியொன் றும் அடைக்கலம் கேட்டு வருகிறது. கூடவே சப் இன்ஸ்பெக்டர் காதலி காவ்யா பெல்லு ஸ்டேஷனில் கேக் வெட்டி பிறந்த தினம் கொண்டாடுகிறார். அச்சமயம் திடீரென்று கரன்ட் கட் ஆகிறது. கரன்ட் வந்தவுடன் பார்த்தால் ஒரு போலீஸ் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்கின்றனர். இதை அடுத்து கொலை செய்தது என்பதை விசாரிக்க சுப்பீரீயர் போலீஸ் கிஷோர் வந்து. தன் பாணியில் விசாரண நடத்தி கொலைகாரனையும் , கொலைக்கானக் காரணத்தையும்.கண்டுப் பிடிப்பதே இப்படக் கதை

ஆரம்பத்தில் கலகலப்பாக நகர்கிறது கதை. படத்தில் கிஷோர் உள்ளிட்ட 10 பேர்கள்தான் கேரக்டர்கள். ஆனால் கிஷோர் வந்து விசாரணையை தொடங்கியவுடன் ஓரளவு பரபரப்பும் தொற்றிக்கொள்கிறது. அவரது உருட்டல் மட்டுமல்ல அவருக்கு உதவியாக வரும் திருநங்கையின் மிரட்டலான நடவடிக்கைகளும் காட்சியை ரசிக்க வைக்கிறது. முடிவில் கொலையாளி யார் என்று தெரிய வரும்போது புருவங்கள் உயர்வதென்னவோ நிஜம்..

ஆரம்ப பேராவில் சொன்னது போல் இயக்குனர் அஜூ கிழுமலாவின் சிங்கிள் ஷாட் இயக்கத்திலான இப்படம் பல நாட்கள் எடிட் செய்து உருவாகும் சஸ்பென்ஸ் படங் களுக்கு இணையாக இருப்பதே நிறைவு. .

ஒளிப்பதிவாளர் ஷினோஷ்க் இரவுக் காட்சி – அதுவும் ஒரே ஷாட் என்பதால் கேமராவை தோள் பட்டையிலி ருந்து இறக்காமல் ஓடி ஓடி படமாக்கியிருக்கும் வலியை உணர முடிகிறது.

பிஜிபால் இசை மோசமில்லை.

வழக்கம் போல் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கிளைமாக்ஸ் மூலம் அட சொல்ல வைத்து விடுகிறார்.

மொத்தத்தில் இந்த டிராமா – பாக்கெட் நாவல் ஒன்றின் எபிசோட்

மார்க் 3.5.

Related Posts