டீமன் – விமர்சனம்!

டீமன் – விமர்சனம்!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரு வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை மையமாக வைத்து ஒரு குறும்படம் எடுக்கவே சிரமப்படும் சூழலில் ஒரு முழு நீள சினிமாவாக் கொடுத்துக் கடுபேற்றி விட்டார்கள். தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்லாமல் அதை, காதல், திரைப்பட இயக்கம் அதை சார்ந்த கதாபாத்திரங்கள் போன்ற கமர்ஷியல் விசயங்களோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் டைரக்டர் வசந்தபாலனின் அசிஸ்டெண்ட் ரமேஷ் பழனிவேல்.

இவர் அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ’டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.ஆனால், இப்படத்தில் வைக்கப்பட்டக் காட்சிகள் ஒவ்வொன்றும் திணிக்கப்பட்டவைகளாக இருப்பதோடு கதையோட்டமும் மிகச் சோர்வை தந்து விட்டது.

அதாவது டைரக்டர் ஆக போராடிக் கொண்டிருக்கும் சச்சின் புரொடியூசர் ஒருவரிடம் பேய் கதை சொல்கிறார். அது பிடித்துப் போனதை அடுத்து தயாரிக்க சம்மதிக் கிறார். கதை விவாதம் செய்து ஸ்கிரிப்ட் ரெடி செய்ய அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார் சச்சின். அந்த வீட்டுக்கு சென்றவுடன், பயங்கரமான கனவுகள் மற்றும் சில அமானுஷ்யமான சம்பவங்களால் தூக்கம் இல்லாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். ஒரு கட்டத்தில் பைத்தியம் போல் வீதிகளில் அலைகிறார். இதை அடுத்து தனது நிலை குறித்து டாக்டரிடம் சொல்லி சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் சச்சினின் ஒவ்வொரு நாளும் பேய்த்தனாமாக இருக்கிறது. மேலும் அவர் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றாலும், தன்னை அறியாமல் அந்த வீட்டுக்குள் திரும்ப வந் துவிடுகிறார். இதனால், அந்த வீட்டைப் பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் சச்சினுக்கு, அந்த வீட்டில் அதற்கு முன் வாழ்ந்தவர்கள் தற்கொலை செய்து இறந்தது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் அந்த பேய் குடும்பத்தில் சச்சின் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவரால் மீண்டு வர முடிந்ததா என்பதை சொல்வது தான் ‘டீமான்’ கதை.

ஹீரோ சச்சின் காதல், பயம், கோபம் என அனைத்து உணர்வுகளையும் ஒரு திகில் படத்துக்கு என்னக் காட்ட வேண்டுமோ அதைக் காட்டி தப்பிக்க மெனக்கெட்டிருக்கிறார்,நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதியின் வேடம் திணிக்கப்பட்டது போல் இருக்கிறதே தவிர படத்திற்கு எந்த விதத்திலும் துணையாக இல்லை. நண்பராக வரும் கும்கி அஷ்வின் நடிப்பில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. நாயகனின் உதவி இயக்குநர் பட்டாளம் முழுவதுமே கேமராவைப் பார்த்துப் பேசி இப்படத்தை ட்ராமா ஆக்கி விட்டார்கள்.

மியூசிக் டைரக்டர் ரோனி ரபேல் கைவண்னத்தில் பின்னணி இசை என்ற பெயரில் திடட்ட வைத்து விட்டார். எல்லாக் காட்சிகளுக்கும் ஹெவியான இசை கோர்ப்பு ஏன் என்றே தெரியவில்லை. சாங் எதுவும் ஒட்டவில்லை. கேமராமேன் ஆனந்தகுமார் . இரவுக் காட்சிகளிலும், இரண்டு அறைகள் இருக்கும் வீட்டிற்குள்ளும் கேமரா கோணங்களையும், ஒளியுணர்வையும் சிறப்பாகக் கையாண்டு இப்படத்தை ஒரு கிரேட் உயர்த்த பாடுபட்டுள்ளார்.

ஒரு பேய் அல்லது அச்ச உணர்வு தரும் படத்துக்கு அடிப்படையான ஸ்கீரீன் பிளே-யை இவ்வளவு மட்டமாக வைத்து படம் செய்த அசிஸ்டெண்டையா நேஷனல் அவார்ட் வின்னர் வைத்திருந்தார் என்று கேட்க வைத்து விட்டது!

மார்க் 2/5

error: Content is protected !!