ரயில் உணவகங்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972; சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.1,241 க்கு வாங்கப்பட்டதா?

ரயில் உணவகங்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972; சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.1,241 க்கு வாங்கப்பட்டதா?

ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து, ஏராளமான புகார்கள், ரயில்வே துறைக்கு வந்துள்ளன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில், புதிய, உணவு சப்ளை கொள்கையை ரயில்வே துறை வகுத்து உணவு தயாரித்தல் மற்றும் சப்ளை சேவைகள் அனைத்தும், ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்பட்டதாக் தகவல் வெளியான நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒரு கிலோ தயிரை ரூ.9,720 வாங்கியதாக தவறான விளக்கம் அளித்ததாக 3 ரயில்வே அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

rail may 3

சமூக ஆர்வலர் அஜய் போஸ் , மத்திய ரயில்வே துறையில் என்ன விலைக்கு சமையல் பொருள்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ரயில்வே நிர்வாகம், 1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.1241 -க்கும், 100 கிராம் தயிர் ரூ.972 க்கும், உப்பு பாக்கெட்டுகள் ரூ.49 க்கும் வாங்கப்பட்டுள்ளதாக பதிலளித்தது.

மேலும் அஜய் போஸ்க்கு அளிக்கப்பட்டுள்ள தகவலில், 2016ம் ஆண்டு மார்ச் மாதம், 58 லிட்டர் சமையல் எண்ணைய் வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு லிட்டர் ஆயில் ரூ..1241க்கு வாங்கியதாக ரயில்வே கூறியுள்ளது. இதேபோல், 170 லிட்டர் மினரல் வாட்டரை 1,06,031க்கு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு லிட்டர் குடிநீரை ரூ.59க்கு வாங்கியதாக தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ சிக்கனை ரூ.233 என்ற அளவில் 650 கிலோ சிக்கன் வாங்கியிருப்பதாக ஆர்டிஐ தகவலில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து , தகவல் அளித்த 3 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறான தகவல் என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கணிணியில் டைப் செய்யும் போது தவறுதலாக வந்திருப்பதாக கூறியுள்ளது. மேலும் ஒரு லிட்டர் தயிர் ரூ.9,720 க்கு வாங்கப்பட வில்லை என்றும், 100 கிராம் என்ற அளவில் 108 தயிர் கப்புகள் அடங்கிய அட்டைப்பெட்டிகள் தான் ரூ.970க்குத்தான் வாங்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. இதேபோல் ஒரு லிட்டர் சமையல் எண்ணைய், ரூ.82.70 காசுகளுக்குத்தான் வாங்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில் இப்பிரசனையை வெளி கொண்டு வந்த அஜய் போஸ் என்ற சமூக ஆர்வலரிடம் பேசிய போது, ”ரயில்வே சமையல் பிரிவு, என்ன சமையல் பொருட்களை என்ன தொகைக்கு வாங்கியுள்ளது என்று ஜூலை 2016-ல் தவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டிருந்தேன். ஆனால் எனக்கு பதிலளிக்க ரயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து நான் முறையீடு செய்தேன். மேல்முறையீட்டு அதிகாரி 15 நாட்களுக்குள் எனக்குத் தகவல்களைத் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் எந்த பதிலும் வரவில்லை.

இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முறையீடு செய்தேன். அப்போது ரயில்வே நிர்வாகம் அளித்த தகவல்கள் என்னைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. அதில் ரூ.25 மதிப்புள்ள 100 கிராம் தயிர், ரூ.972-க்கு வாங்கப்பட்டிருந்தது. அதேபோல அனைத்துப் பொருட்களுமே விதிக்கப்பட்டிருந்த உச்ச விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வாங்கப்பட்டிருந்தது. சமையல் பொருட்கள் அனைத்தும் ரயில்வே கேட்டரிங் துறையால் வாங்கப்பட்டுள்ளன. அவை சமையல் கிடங்கு, ஐஆர்சிடிசி மக்கள் உணவகங்ககள், ரயில்வே சமையலறைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

எலும்புத் துண்டுடன் கூடிய சிக்கன், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்டவையும் மிக உயர்ந்த விலைகளில் வாங்கப்பட்டுள்ளன. இதில் கை துடைக்கும் டிஷ்யூ பேப்பரும் அடக்கம். மார்ச் 2016-ல் 58 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ரூ.72,034-க்கும் (1 லி. ரூ.1241), டாட்டா உப்பு 150 பாக்கெட்டுகளை ரூ.2,670க்கும் (அதாவது1 பாக்கெட்டின் விலை ரூ.49, உண்மையான விலை ரூ.15) வாங்கியுள்ளனர்.

அதேபோல, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.59 என்ற வீதத்தில் வாங்கப்பட்டுள்ளன. சமோசாக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு மாதிரியான சில பொருட்கள் மட்டுமே சரியான விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.ரயில்வே அறிக்கைகள் ரயில் உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறியுள்ளன. ஆனால் ஆர்டிஐ மூலம் உண்மையான நிலையும், நஷ்டத்துக்கான காரணமும் தெரிய வந்துள்ளது” என்கிறார்.

Related Posts