ஏசி எனப்படும் குளிரூட்டி மூலம் கொரோனா பரவாமல் இருக்க வழிகாட்டி!

ஏசி எனப்படும் குளிரூட்டி மூலம் கொரோனா பரவாமல் இருக்க வழிகாட்டி!

ஏ.சி எனக் கூறப்படும் குளிரூட்டி பெரும்பாலான மக்களின் வாழ்வில் அத்தியவசியமான ஒரு சாதனம் ஆகிவிட்டது. முக்கியமாக ஏசி இல்லாத தனியார் அலுவலகங்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அலுவலகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் ஏசி குறைக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும் என்ற வாக்குவாதங்கள் ஏற்படுவது வழக்கம். பெண்கள் ஏசி அதிகமாக உள்ளது என்று குறைக்க சொல்வதும், ஆண்கள் அதை மறுப்பதும், பெரும்பாலான அலுவலகங்களில் தினந்தோறும் நடைப்பெறுகிறது. ஒரே அளவான வெப்ப நிலை வெளிப்படும் போது , சிலர் குளிர்ச்சியாகவும், சிலர் சூடாகவும் உணர்வது ஏன் என்பதை நெதர்லாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஏர் கண்டிஷனர் பொருத்தப்பட்டுள்ள வீடுகளில் அவை எப்படி இயக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிகளை மத்திய பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை இந்திய வெப்பம் ஊட்டுதல். குளிர் பதனம் செய்தல் .ஏர்கண்டிஷனிங் எஞ்சினியர்கள் சங்கம் தயாரித்துள்ளது.

எதிர்வரும் மே மாதத்தில் இருந்து கோடை காலம் ஆரம்ப மாகிறது. நாட்டின் பல பகுதிகளில் 40 டிகிரி வெயில் சுட்டெரிக்கும். இதனால் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் ஏசி உள்ளிட்ட குளிர் சாதனங்களை பயன்படுத்தத் தொடங்குவர். இதனால் மின் நுகர்வு அதிகரிக்கும். இதை எவ்விதம் எதிர்கொள்வது என்ற சிக்கலில் மின் நிறுவனங்கள் உள்ளன. அதே சமயம் வீடுகளிலும் பணியிடங்களிலும் ஏர் கண்டிஷனர்களை இயக்குவதற் கான குறிப்பான வழிகாட்டு நெறிகளை இன்ஜினியர்கள் சங்கம் வெளியிட்டது. இந்த விதி களை ஆய்வு செய்து இறுதியான வழிகாட்டு நெறிகளை மத்திய பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி வீடுகளில் உள்ள ஏர் கண்டிஷனர்களை 24 முதல் 30 டிகிரி அளவுக்குள் இருக்கும்படி செட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்கண்டிசன் அறையில் உருவாக்கப்படுகின்ற ஈரப்பதம் 40 முதல் 70 சதவீத அளவுக்குள் இருக்க வேண்டும்

அறைக் கதவுகள் ஜன்னல் கதவுகள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டால் வெளிக்காற்று அறைக்குள் இருக்கும் காற்றை வெளியே அனுப்பி புது காற்று நிரப்ப வகைசெய்யும். ஆனாலும் அவ்வாறு உள்ளே வரும் காற்றை வடிகட்ட வகை இல்லை.

ஏர்கண்டிஷன் வெளியிலிருந்து உள்ளே வரும் காற்றை வடிகட்டி அனுப்புவதால் சுத்தமான காற்று அறையில் வசிப்பவர்களுக்கு கிடைக்கிறது.

ஏசி இயங்கிக் கொண்டிருந்தால் அறையில் கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். ஏசி இயங்காத நேரத்தில் ஜன்னல் கதவுகளும் அறைக்கதவுகளும் திறந்து வைத்திருத்தல் பொருத்தமானதாகும் .ஆனால் இவ்வாறு அறைக் கதவையும் ஜன்னல்களையும் திறப்பதன் மூலம் வெளியிலிருந்து ஈரமான காற்று உள்ளே வரவும் அதன் மூலமாக ஈரப்பதம் அறைக்குள் வரவும் அனுமதிக்க கூடாது.

aஅளவுக்கு அதிகமான ஈரப்பதம் காற்றோடு கலந்து வந்தால் அவை தூசுகளை படிய வைத்து சிறு கட்டிகளாக மற்றும் .அவற்றின் காளான்கள் வளர வாய்ப்பு ஏற்படும். காளான்கள் மற்றும் பாக்டீரியா வகைகள் இவற்றில் தங்கி சுவாசம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும் .ஆஸ்துமா ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

அறைக்குள் மேற்கூரையில் இருந்து தொங்க விடப்பட்டுள்ள ஃபேன்கள் இயங்கும் பொழுது ஜன்னல் கதவுகளை ஓரளவு திறந்து வைக்க வேண்டும் .அறைக்குள் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்தப்பட்டு இருந்தால். சீலிங் ஃபேன் ஓடும் பொழுது அந்த கருவிகள் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

அறைக்குள் காற்றை வெளியேற்றும் கருவிகள் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது சுத்தமான காற்று 70 முதல் 80 சதவீதம் அறைக்குள் கிடைக்கும். இந்த அளவு சுத்தமான காற்று எப்பொழுதும் அறைக்குள் கிடைக்கும்வகையில் ஃபேன்கள் அமைக்கப்பட வேண்டும்.இந்த அளவுகளை பராமரிக்க உதவும் வகையில் காற்று வெளியேற்றும் ஃபேன்கள் இயங்கும் வகையில் அமைக்க வேண்டும்.

முழு ஊரடங்கு காலத்தில் வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும்.ஊரடங்கு தளர்த்தப் படும் பொழுது அந்த வர்த்தக நிறுவனங்களில் உள்ள ஏசி மெஷின்களை அப்படியே உடனே இயக்கிவிடக்கூடாது .அறையை தூய்மைப்படுத்தி காளான், தூசிப்படை, பாக்டீரியா தொற்றுக்கள் இருக்கக்கூடிய பகுதிகள் ஆகியவற்றை எல்லாம் சுத்தப்படுத்த வேண்டும். ஏர் கண்டிஷனிங் மெஷின்களின் குழாய்களையும் ஆகியவற்றையும் சுத்தப்படுத்த வேண்டும். அறைக்குள் வெப்பநிலை ஈரப்பதம் ஆகியவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் 40 முதல் 70 சதவீத அளவுக்கு இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பறவைகள், எலி, பல்லி, வண்டுகள் ஆகியவற்றின் கழிவுகள் ஏர் கண்டிஷனிங் எந்திரத்துக்கு தூய்மையான காற்று கிடைப்பதைத் தடுத்துவிடாமல் தூய்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஏர் கண்டிஷனிங் தொடர்பான மத்திய பொதுப்பணித்துறை வழிகாட்டு நெறிகளில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!