32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 4)
காக்கி சர்க்கஸ் விமர்சனம்: சிறைச்சாலைக்குள் ஒரு ‘உண்டியல்’ வேட்டை! Running News

காக்கி சர்க்கஸ் விமர்சனம்: சிறைச்சாலைக்குள் ஒரு ‘உண்டியல்’ வேட்டை!

காவல்துறை என்றாலே சீரியஸான ஆக்ஷன் கதைகள் என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு உண்டியல் திருட்டைச் சுற்றி நகரும் சுவாரஸ்யமான டார்க் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது ‘காக்கி சர்க்கஸ்’. 📖 கதைக்களம்: திருட்டைத் தேடும் போலீஸ்! சிறைச்சாலை என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கும் இடமல்ல, திருத்தும் இடம் என நம்பும் ஒரு வித்தியாசமான சிறை அதிகாரி முனீஷ்காந்த். சிறைக்குள் ஒரு குட்டி நூலகத்தையே நடத்தி வரும் இவர், தன் புத்தகங்கள் மூலமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயல்கிறார். இவரிடம் […]

April 10, 2026 admin
சிறுவர்களுக்கானப் புதிய கேமிங் தளம்: நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் ‘பிளேகிரவுண்ட்’ அறிமுகம்! Running News

சிறுவர்களுக்கானப் புதிய கேமிங் தளம்: நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் ‘பிளேகிரவுண்ட்’ அறிமுகம்!

ஓடிடி தளங்களில் முன்னணியில் இருக்கும் நெட்ஃபிக்ஸ் (Netflix), தற்போது தனது கேமிங் சேவையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், சிறுவர்களுக்கெனப் பிரத்யேகமாக ‘நெட்ஃபிக்ஸ் பிளேகிரவுண்ட்’ (Netflix Playground) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குடும்பங்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவதில் அதிகக் கவனம் செலுத்தி வரும் அந்த நிறுவனம், இந்த புதிய செயலி மூலம் எட்டு வயது மற்றும் அதற்கு உட்பட்ட குழந்தைகளைக் இலக்காகக் கொண்டுள்ளது. விளம்பரங்கள் இல்லாத பாதுகாப்பான விளையாட்டு நெட்ஃபிக்ஸ் பிளேகிரவுண்டின் மிக […]

April 7, 2026 admin
ZEE5-ன் புதிய அதிரடித் தொடர் ‘காக்கி சர்கஸ்’:ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்! Running News

ZEE5-ன் புதிய அதிரடித் தொடர் ‘காக்கி சர்கஸ்’:ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்!

குற்றங்களுக்கு எல்லையோ, மொழியோ கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள ‘காக்கி சர்கஸ்’ (Kaakki Circus) என்ற புதிய ஒரிஜினல் சீரிஸை ZEE5 தளம் அறிவித்துள்ளது. நகைச்சுவை, அதிரடி மற்றும் திரில்லர் எனப் பல அம்சங்கள் கலந்த இந்த 7 எபிசோட்கள் கொண்ட தொடர், ஒரு சப்-ஜெயிலை மையமாக வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ என்று பெயரிடப்பட்டு, தற்போது ‘காக்கி சர்கஸ்’ […]

March 29, 2026 admin
முத்து என்கிற காட்டான்:மர்மம் நிறைந்த ஒரு மனிதனின் ‘காஸ்மிக்’ பயணம்! Running News

முத்து என்கிற காட்டான்:மர்மம் நிறைந்த ஒரு மனிதனின் ‘காஸ்மிக்’ பயணம்!

இயக்குநர்கள் எம். மணிகண்டன் மற்றும் பி. அஜித்குமார் கூட்டணியில், விஜய் சேதுபதி நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் வெளியாகியிருக்கிறது ‘முத்து என்கிற காட்டான்’. ஒரு மெழுகுவர்த்தி மெல்ல எரிந்து வெளிச்சம் தருவது போல, இந்தத் தொடரும் நிதானமாகத் தொடங்கி, ஒரு மனிதனின் விசித்திரமான வாழ்க்கைப் பக்கங்களை ரத்தமும் சதையுமாகப் புரட்டிக் காட்டுகிறது. கதைக்களம்: வெட்டப்பட்ட தலையும்… விலகாத மர்மமும்! ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமான பாறை ஒன்றின் மேல் முத்துவின் (விஜய் சேதுபதி) தலை மட்டும் தனியாகக் […]

March 28, 2026 admin
ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘முத்து என்கிற காட்டான்’:விஜய் சேதுபதியின் புதிய இணையத் தொடர்! Running News

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘முத்து என்கிற காட்டான்’:விஜய் சேதுபதியின் புதிய இணையத் தொடர்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், தேசிய விருது பெற்ற மணிகண்டன் மற்றும் பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர், மார்ச் 27-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. 10 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரின் பிரம்மாண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. தலையில் தொடங்கும் ஒரு வித்தியாசமான கதை! இந்தத் தொடரின் சிறப்பம்சமே அதன் தொடக்கம்தான். ஒரு மாஸ் ஹீரோவின் வெட்டப்பட்ட தலையை […]

March 26, 2026 admin
பிரைம் வீடியோவின் அதிரடி ‘2026’ ஸ்லேட்: 55-க்கும் மேற்பட்ட புதிய படைப்புகள் அறிவிப்பு! Running News

பிரைம் வீடியோவின் அதிரடி ‘2026’ ஸ்லேட்: 55-க்கும் மேற்பட்ட புதிய படைப்புகள் அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது முதலீட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் 55-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் தொகுப்பு, ஸ்ட்ரீமிங் முதல் திரையரங்கு வெளியீடு வரை அனைத்து தளங்களிலும் ரசிகர்களைக் கவரத் தயாராக உள்ளது. திரையுலக ஜாம்பவான்களுடன் புதிய கூட்டணி இந்த அறிவிப்பின் சிறப்பம்சமாக, ஹிருத்திக் ரோஷனின் HRX Films மற்றும் ஆலியா பாட்டின் […]

March 23, 2026 admin
100 மில்லியன் சாதனை: ‘தடயம்’ டீமின் நெகிழ்ச்சியான நன்றித் திருவிழா! Running News

100 மில்லியன் சாதனை: ‘தடயம்’ டீமின் நெகிழ்ச்சியான நன்றித் திருவிழா!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-இல் வெளியாகி, குறுகிய காலத்திலேயே 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து ‘தடயம்’ ஒரிஜினல் சீரிஸ் மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தங்களது நன்றிகளைப் பகிர்ந்துகொண்டனர். வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் பேசியதிலிருந்து: ZEE5 கௌஷிக் நரசிம்மன்: “பொதுவாக ஒரு சீரிஸின் வெற்றியைத் தெரிந்துகொள்ள வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால், ‘தடயம்’ வெளியான சில நாட்களிலேயே, அதுவும் ஒரு வாரத்திற்கு முன்பே 100 மில்லியன் […]

March 8, 2026 admin
தடயம் – வெப் சிரீஸ் – விமர்சனம்! Running News

தடயம் – வெப் சிரீஸ் – விமர்சனம்!

தலைப்பிலேயே ஒரு தேடல் இருக்கிறது; கதையிலோ அதிர வைக்கும் உண்மை இருக்கிறது. 1999-களில் தமிழக-ஆந்திர எல்லைக் கிராமங்களை உலுக்கிய ஒரு தொடர் கொலைச் சம்பவத்தை, அதன் பின்னணியில் இருந்த மர்மத்தை ஆறு அத்தியாயங்களில் ரத்தமும் சதையுமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது இந்த ‘தடயம்’ இணையத் தொடர். கதைக்கரு: மர்மக் கொலைகளும்… மாறுபட்ட திரைக்கதையும்! பொதுவாக த்ரில்லர் கதைகளில் “கொலையாளி யார்?” (Whodunit) என்பதுதான் க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸாக இருக்கும். ஆனால், இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் இத்தொடரின் இரண்டாவது அத்தியாயத்திலேயே கொலையாளியைத் […]

March 6, 2026 admin
ஆணவம் மடியும்.. ஆசைகள் துளிர்க்கும்..-‘லிட்டில் விங்ஸ்’ பிரஸ்மீட் நியூஸ் & விமர்சனம்! Running News

ஆணவம் மடியும்.. ஆசைகள் துளிர்க்கும்..-‘லிட்டில் விங்ஸ்’ பிரஸ்மீட் நியூஸ் & விமர்சனம்!

71-வது தேசிய விருதை வென்று ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ‘லிட்டில் விங்ஸ்’ (Little Wings) குறும்படம், வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை 5 மணி முதல் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ யூடியூப் தளத்தில் வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்களின் தொகுப்பு இதோ: கொரோனா தந்த கரு: இயக்குநர் நவீன் பகிர்வு இயக்குநர் நவீன் பேசுகையில், “இந்தக் கதை கொரோனா காலத்தில் உருவானது. மரணங்கள் […]

February 26, 2026 admin
அனிருத்தின் புதிய அவதாரம்:’அல்புகர்க்கி ரெக்கார்ட்ஸ்’ இசை நிறுவனம் தொடக்கம்! Running News

அனிருத்தின் புதிய அவதாரம்:’அல்புகர்க்கி ரெக்கார்ட்ஸ்’ இசை நிறுவனம் தொடக்கம்!

இந்தியத் திரையிசை உலகில் தனது அதிரடி இசையால் இளைஞர்களின் இதயங்களைக் கட்டிப்போட்டிருக்கும் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். வெறும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் மட்டுமே தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், இசைத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கத் துணிந்துள்ள அவரது புதிய முயற்சி குறித்த  ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ: இந்தியத் திரையிசையைத் தனது பின்னணி இசை மற்றும் வைரல் பாடல்கள் மூலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் புரட்டிப் போட்டு […]

February 16, 2026 admin
உடனடி செய்திகள்