அனிருத்தின் புதிய அவதாரம்:’அல்புகர்க்கி ரெக்கார்ட்ஸ்’ இசை நிறுவனம் தொடக்கம்!

அனிருத்தின் புதிய அவதாரம்:’அல்புகர்க்கி ரெக்கார்ட்ஸ்’ இசை நிறுவனம் தொடக்கம்!

ந்தியத் திரையிசை உலகில் தனது அதிரடி இசையால் இளைஞர்களின் இதயங்களைக் கட்டிப்போட்டிருக்கும் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். வெறும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் மட்டுமே தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், இசைத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கத் துணிந்துள்ள அவரது புதிய முயற்சி குறித்த  ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ:

இந்தியத் திரையிசையைத் தனது பின்னணி இசை மற்றும் வைரல் பாடல்கள் மூலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் புரட்டிப் போட்டு வருபவர் அனிருத் ரவிச்சந்தர். ‘கொலவெறி’ பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற அவர், தற்போது ‘அல்புகர்க்கி ரெக்கார்ட்ஸ்’ (Albuquerque Records) எனும் சொந்த இசை நிறுவனத்தைத் தொடங்கி, இசைத் துறையில் ஒரு பிசினஸ் மேக்னட்டாகத் தடம் பதிக்கிறார்.

கலைஞர்களுக்கான புதிய களம்

திரைப்பட இசை மட்டுமல்லாது, சுயாதீன இசை (POP) மற்றும் பிராந்திய மொழிப் பாடல்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அனிருத்தின் சொந்தப் படங்களின் இசைத் தொகுப்புகள் (OSTs) மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட ஆல்பங்கள் மற்றும் புதிய திறமையாளர்களின் குரல்களும் இந்த லேபிள் மூலம் இனி உலகெங்கும் ஒலிக்கும்.

அனுபவமிக்கத் தலைமை

இந்த நிறுவனத்தின் பிசினஸ் மற்றும் செயல்பாட்டுத் தலைவராக (COO) பி. கௌசிக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகத் தென்னிந்திய இசைத்துறையில் சோனி மியூசிக் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அனிருத்தின் இசைப் பயணத்தை அதன் ஆரம்ப காலத்திலிருந்தே கவனித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத்தின் மனவோட்டம்

இது குறித்து அனிருத் கூறும்போது, “இது எனது படைப்பு மற்றும் வணிக ரீதியான அடுத்த கட்ட நடவடிக்கை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்குச் சுயாதீன இசையில் அதிக ஆர்வம் உண்டு. எனது படைப்புகளுக்குச் சொந்தக்காரனாக இருப்பதோடு, தகுதியுள்ள புதிய கலைஞர்களுக்கு ஒரு பாலமாக இருக்கவே இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

புதியவர்களுக்கு வாய்ப்பு

திறமையான புதிய இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களைக் கண்டறிந்து அவர்களை அடையாளப்படுத்துவதே இந்த நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். உங்களின் முழுமையாக உருவாக்கப்பட்ட இசை மாதிரிகளை (Demos) demos@alburecords.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி அனிருத்தின் அல்புகர்க்கி குடும்பத்தில் இணையலாம்.

திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வரும் அனிருத், இப்போது ஒரு புதிய இசை சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பத் தயாராகிவிட்டார். இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, புதிய கலைஞர்களுக்கும் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாகும்.

error: Content is protected !!