32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 23 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 23)
பார்வையாளர்களுக்கு ஒரு புதிய & தனித்துவமான அனுபவம் கொடுக்க வரும் ‘போத்தனூர் தபால்  நிலையம்’! Exclusive

பார்வையாளர்களுக்கு ஒரு புதிய & தனித்துவமான அனுபவம் கொடுக்க வரும் ‘போத்தனூர் தபால் நிலையம்’!

Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோர் சிறந்த உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். அவர்களது அடுத்த வெளியீடாக மே 27, 2022 முதல் ஆஹா தமிழில் ஓடிடி உலகளாவிய வெளியீடாக “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘போத்தனூர் தபால் நிலையம்’ என்ற தலைப்பில் வரும்போதே, இது ஒரு மென்மையான மெலோடிராமாடிக் டிராமாவாக இருக்கும் என்று நினைக்கையில், ஃபர்ஸ்ட் […]

May 25, 2022 admin
மாலை நேர மல்லிப்பூ படத்தைப் பாராட்டும் பிரபலங்கள்! Exclusive

மாலை நேர மல்லிப்பூ படத்தைப் பாராட்டும் பிரபலங்கள்!

21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப் படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் […]

May 25, 2022 admin
ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட ‘மாலைநேர மல்லிப்பூ’ ! Exclusive

ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட ‘மாலைநேர மல்லிப்பூ’ !

21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார். மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் […]

May 19, 2022 admin
நயன்தாரா நடிப்பில் உருவான ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர்…! Exclusive

நயன்தாரா நடிப்பில் உருவான ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர்…!

நயன்தாரா, ரித்விக் உள்பட பலரது நடிப்பில் ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘O2′ . இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. உயிர்கள் வாழ அடிப்படை தேவையான ஆக்ஸிஜனை குறிக்கும் O2 அறிவியல் பெயரில் தயாராகி இருக்கும் இதில் பதட்டப்படாமல், அமைதியாக சண்டை போடாமல் இருந்தால் 12 மணி நேரம் உயிரோடு இருக்கலாம் என நயன்தாரா ஒரு குழந்தையை கையில் வைத்து […]

May 16, 2022 admin
நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன் – ”சாணி காயிதம்’ அனுபவம் குறித்து செல்வராகவன் Exclusive

நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன் – ”சாணி காயிதம்’ அனுபவம் குறித்து செல்வராகவன்

பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ் சித்திரமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கும் வெற்றி இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் ஒரு நடிகராக மீண்டும் வருவதைக் காண்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான செல்வராகவன் இப்படத்தில் […]

May 2, 2022 admin
பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்! Exclusive

பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்!

நம் மக்கள் தொகையை விட அதிகமானோர் புழங்குவது சமூக வலைத் தளங்கள்.. ஃபேஸ்புக். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்டின் மற்றும் வாட்ஸ் அப்., அது, இது என்று ஏதேதோ புது வடிவில் சகலரின் வாழ்க்கை நேரத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் ரயிலிலும், பஸ்களிலும் ஒருவரையொருவர் பார்த்தால், புன்முறுவல் செய்ய நேரம் இல்லாத அளவுக்கு ஒவ்வொருவரும் தத்தம் செல்போன்களில் மூழ்கிவிடுகின்றனர் என்பது கூட பரவாயில்லை.. ஒரே வீட்டில் இருக்கும் அப்பா & மகன் அல்லது மகள் கூட வாட்ஸ் அப்பில் […]

April 28, 2022 admin
‘ஓ மை டாக்’ – படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..!? Exclusive

‘ஓ மை டாக்’ – படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..!?

அமேசான் ஒரிஜினல்ஸின் ‘ஓ மை டாக்’- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்’ என குறிப்பிட்டு, ‘ஓ மை டாக்’ படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள். ‘ஓ மை டாக்’ திரைப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான அழகான கதையாக உருவாகி இருக்கிறது. இதனை […]

April 26, 2022 admin
நேர்நிலையான அதிர்வலையை ஏற்படுத்திய ‘ ஹே சஹோ’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாத் துளிகள்! Exclusive

நேர்நிலையான அதிர்வலையை ஏற்படுத்திய ‘ ஹே சஹோ’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாத் துளிகள்!

யோகேஸ்வரன் என்ற நாமகரணம் கொண்ட ஒரு சிறுவன் பாடி நடித்து உருவாகியுள்ள ‘ஹே சகோ ‘ இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் கோலாகலமாக நடந்தது. விழாவில் இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர். இவ்விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் […]

April 23, 2022 admin
கீர்த்தி சுரேஷ் & செல்வராகவன் நடிப்பில் தயாரான “சாணிக்காயிதம்”  மே 6இல் ரிலீஸ்! Running News

கீர்த்தி சுரேஷ் & செல்வராகவன் நடிப்பில் தயாரான “சாணிக்காயிதம்” மே 6இல் ரிலீஸ்!

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர்  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.   இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான “சாணிக்காயிதம்”  திரைப்படத்தின் உலகளாவிய திரை வெளியீட்டை ப்ரைம் வீடியோ தளம் இன்று […]

April 22, 2022 admin
ஓ மை டாக் – விமர்சனம்! Exclusive

ஓ மை டாக் – விமர்சனம்!

சினிமாவின் பல வகைகள் இருக்கிறது. அதாவது கலைப்படம், காதல்,காப்பியம், பேய், மசாலா, வரலாறு, மற்றும் நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட் என்று ஏகப்பட்ட வகைகள் இருக்கிறது. இவற்றில் அரிதாக இடம் பெறுவது குழந்தைகள் சினிமா. ஆனால் எழுத்தாளர் எஸ் ரா குறிப்பிட்டது போல், ‘குழந்தைகள் சினிமா என்பதை நாம் குழந்தைகள் நடிக்கும் சினிமா எனத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம், குழந்தைகள் சினிமாவில் குழந்தைகள் நடிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, அது குழந்தைகளின் மனஉலகை, […]

April 21, 2022 admin
உடனடி செய்திகள்