32°C
விளம்பரம்
Advertisement

வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப் உடை சர்ச்சையைக் கிளப்பிய பாஜக் முகவர்! – வீடியோ

admin சேலம் Published: February 19, 2022 1 நிமிட வாசிப்பு Updated: February 20, 2022 Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாப் உடை சர்ச்சையைக் கிளப்பி காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக முகவர் கிரிநந்தனை , மார்ச் 4 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எட்டாவது வார்டு வாக்கு பதிவு மையத்தில் ஹிஜாப் உடை அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப் உடையை அகற்ற கூறிய விவகாரத்தில் மேலூர் காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக முகவரி கிரிநந்தனை மேலூர் காவல் துறையினர் , மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர்.

அவரிடம் நீதிமன்ற நடுவர் ஜெயந்தி நடந்த விவரங்களை விசாரித்தார், அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாஜக முகவர் கிரிநந்தனை வருகின்ற நான்காம் தேதி வரை நீதிமன்ற காவலில் மேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை மேலூர் சிறையில் அடைத்தனர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்