டாஸ்மாக் எலைட் சரக்கு விலை அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் எலைட் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம். இதில், குவார்ட்டருக்கு ரூ.10, பாட்டிலுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது சம்பந்தமான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கிடையே தான் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே தான் இன்று அதிரடியாக டாஸ்மாக் நிர்வாகம் எலைட் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலை குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ள
இந்த விலை உயர்வின்படி 330 மில்லி வெட்மென் பில்சென்னர் பீர் ரூ.280ல் இருந்து ரூ.290 ஆகவும், 500 மில்லி ஜெர்மணியா பில்ஸ்நர் பீர் (கேன்) ரூ.250ல் இருந்து ரூ.27 ஆகவும், 300 மில்லி ஹாவெர்லி விட் பீர் ரூ.290ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 750 மில்லி ஸ்காட்ஸ் கிரே பிளென்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.2000ல் இருந்து ரூ.2240 ஆகவும், 750 மில்லி பிபிடர் ஜின் ரூ.2220 முதல் ரூ.2460 ஆகவும், 750 மில்லி ஜேமிசன் ஐரிஸ் விஸ்கி ரூ.3030 முதல் ரூ.3270 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரம் இந்த மது வகைகள் எலைட் மதுபானக் கடைகளில் மட்டுமே கிடைப்பவை எனவும் உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


