32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 40 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 40)
விதிமீறல் செய்யும் எல்லா வாகனங்களும் பறிமுதல்-ஐகோர்ட் ஆர்டர்! Exclusive

விதிமீறல் செய்யும் எல்லா வாகனங்களும் பறிமுதல்-ஐகோர்ட் ஆர்டர்!

தமிழகத் தலைநகர் சென்னையில் தனியார் வாகனங்களில் போலீஸ், அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அண்மையில் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை […]

June 7, 2024 admin
மின்சாரக் கட்டணம் உயர்வா? -ராமதாஸ் கண்டனம்! Exclusive

மின்சாரக் கட்டணம் உயர்வா? -ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகியுள்ளது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட ஆறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான […]

June 6, 2024 admin
மறுபடியும் எண்ணுங்க – விஜய்காந்த் ஒய்ப் ஆவேசம்! Exclusive

மறுபடியும் எண்ணுங்க – விஜய்காந்த் ஒய்ப் ஆவேசம்!

“பலத்த நம்பிக்கையுடன் இருந்த விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்க வில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ் சாட்டியுள்ளார். மேலும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்த நிலையில் பிரேமலதாவின் பொய் குற்றச்சட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது விஜய பிரபாகரனும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அங்குதான் […]

June 6, 2024 admin
நெல்லை, நாகா்கோவில் சிறப்பு ரயில்கள்:ஜூன் இறுதி வரை நீடிப்பு! Exclusive

நெல்லை, நாகா்கோவில் சிறப்பு ரயில்கள்:ஜூன் இறுதி வரை நீடிப்பு!

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் (எண்: 06070) மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரயிலும் (எண்: 06069) ஜூன் 6 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரைநீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாகா்கோவில் – […]

June 3, 2024 admin
இமயமலையும், கன்னியாகுமரியும் ஒன்று – பிரதமர் மோடி நெகிழ்ச்சி! Exclusive

இமயமலையும், கன்னியாகுமரியும் ஒன்று – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

``கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் தியானத்தில் இருந்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என் எண்ணங்களுக்குப் புதிய உயரங்களைக் கொடுத்தது. கடலின் விசாலம் என் எண்ணங்களை விரிவுபடுத்தியது. அடிவானத்தின் விரிவு பிரபஞ்சத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள ஒற்றுமையை, ஒருமையைத் தொடர்ந்து எனக்கு உணர்த்தியது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இமயமலையில் மேற்கொள்ளப்பட்ட அனுபவங்களும் புத்துயிர் பெறுவதுபோல் உணர்ந்தேன்.“ என்று மோடி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி மக்களவை தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, மே 30ஆம் தேதி முதல் […]

June 3, 2024 admin
வெயில் வாட்டுது:பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! Exclusive

வெயில் வாட்டுது:பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!

தமிழ்நாடு அரசு உள்ளிட்ட எல்லா பள்ளிகளுக்கும் வழக்கமாக மே மாதத்தில் கோடை விடுமுறை அளித்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மே மாதம் தொடக்கத்திலிருந்து வாட்டி வதைத்த வெப்ப அலையால் பள்ளித் திறப்பு தள்ளிப்போகலாம் என சொல்லப் பட்டது. ஆனால், தமிழகத்தில் மே இரண்டாம் வாரத்துக்குப் பின்னர் வானிலை கொஞ்சம் […]

May 31, 2024 admin
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்  வெள்ளதுரை சஸ்பெண்ட்!- ஏன்? யாரிவர்?- முழு விபரம் Exclusive

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை சஸ்பெண்ட்!- ஏன்? யாரிவர்?- முழு விபரம்

2004ல் வனக் கொள்ளையர் வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரியான வெள்ளதுரை, அயோத்திக்குப்பம் வீரமணியை மெரினாவில் என்கவுண்டரில் கொன்றதன் மூலம் கவனம் பெற்றார். வீரப்பனை தேடும் சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்று இருந்தார். உதவி காவல் ஆய்வாளராக பணியைத் தொடங்கிய இவர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (AdSP) உயர்ந்துள்ளார். 2021 மே 7 ஆம் தேதி திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அச்சுறுத்தும் கும்பல்களைக் கண்காணிக்க வெள்ளதுரை […]

May 31, 2024 admin
‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிடுங்கள்- மு.க.ஸ்டாலின் மடல்! Exclusive

‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிடுங்கள்- மு.க.ஸ்டாலின் மடல்!

“‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.”என கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு கழக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். தமிழ் உள்ளவரை தலைவர் கலைஞர் புகழ் ஓங்கட்டும்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞர் கலைஞர் […]

May 26, 2024 admin
சமாதானமாகி கைகுலுக்கிக் கொண்ட போலீஸ் & போக்குவரத்து! Exclusive

சமாதானமாகி கைகுலுக்கிக் கொண்ட போலீஸ் & போக்குவரத்து!

போன 22ம் தேதி, நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி வழியாக தூத்துக்குடி செல்லும் அரசு பஸ்ஸில், நாங்குநேரி நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்த ஸ்டாப்பில் போலீஸ் யூனிபார்முடன் ஒருவர் ஏறினார். அவரிடம் கண்டக்டர் டிக்கெட் கேட்ட பொழுது எடுக்க மறுத்து தான் அரசு ஊழியர் அரசு பணிக்காக செல்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் போலீஸ் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும் என கண்டக்டர் அவரிடம் கூறியுள்ளார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சில நிமிடங்கள் பஸ் […]

May 25, 2024 admin
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி! Exclusive

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மே 6ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி […]

May 24, 2024 admin
உடனடி செய்திகள்