32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 39 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 39)
நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்த கக்கன்! Exclusive

நேர்மையின் இலக்கணமாய் வாழ்ந்த கக்கன்!

நம் தமிழ்நாடு அரசியலில் தன்னலமற்ற சேவகன் மாண்புமிகு கக்கன். மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியில் பிறந்த வெள்ளை மனது கொண்ட கருப்பு சிங்கம் கக்கன் அவர்கள் இந்திய விடுதலை போரில் பங்கு கொண்டு 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1957 முதல் 67 வரை பல்வேறு துறை சார்ந்த அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர் கக்கன். அதாவது சுதந்திர இந்தியாவில் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் அமைச்சரவையில் போலீஸ் துறை மட்டும் இல்லாது வேளாண்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், மதுவிலக்கு […]

June 18, 2024 admin
இப்படியுமோர் சந்திப்பு நடக்கிறது! Exclusive

இப்படியுமோர் சந்திப்பு நடக்கிறது!

தேன் மிட்டாயும், கமர்க்கட்டும் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு சாப்பிட்டேன். என்.சி.மோகன்தாஸ் & திருமதி மோகன்தாஸ் சில மாதங்களாக ஒரு சிறப்பான சேவை செய்துவருகிறார்கள். தனக்குத் தெரிந்த / தெரியாத பல துறைகளில் சாதித்த / சாதிக்கப் போகிற 15 நபர்களை தன் இல்லத்திற்கு வாஞ்சையுடன் அழைக்கிறார். இராணுவ கண்டிப்புடன் அவர்களை வரிசைப்’படுத்தி’ நிற்கவைத்து படமெடுத்த பிறகு இல்லம் அழைத்துச் செல்கிறார்.மேஜை முழுதும் தேடித்தேடி வாங்கிய கொறிப்ஸ் அடுக்கிவைத்து சிற்றுண்டி ( நியாயமாக அது பேருண்டிதான்!) வழங்குகிறார்.அதன் பிறகு […]

June 17, 2024 admin
சென்னை அகில இந்திய வானொலி 87வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது!- Exclusive

சென்னை அகில இந்திய வானொலி 87வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது!-

இந்த சென்னை வானொலி நிலையத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சுகள், இசைக் கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள், திரைப்படங்களின் ஒலிச்சித்திரங்கள், கிரிக்கெட் வர்ணனைகள் போன்றவற்றின் ஒலிப்பதிவு நாடாக்கள் சென்னை வானொலி நிலையத்தின் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பேணப்படுகின்றன. கர்நாடக இசையின் மிகப் பெரும் ஆளுமைகள் எல்லாம் வந்து பாடிய பெருமையைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது சென்னை வானொலி நிலையத்தின் இசைக் கூடம். ராஜாஜி, பம்மல் […]

June 16, 2024 admin
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்;பாமக மாநில துணைத் தலைவர் அன்புமணி போட்டி! Exclusive

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்;பாமக மாநில துணைத் தலைவர் அன்புமணி போட்டி!

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.இதனிடையே திமுக சார்பில் இடைத்தேர்தலில் கட்சியின் மாநில விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் வேட்பாளராக போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இதனிடையே பாஜக […]

June 15, 2024 admin
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை! Exclusive

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி இல்லை!

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பலரும் இந்த ஆம்னி பஸ்களையே அதிகம் நாடி செல்கிறார்கள். பண்டிகை நாட்கள், வார இறுதிநாட்களில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்படுவதாக பயணிகள் இந்த ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பாண்டிச்சேரி, […]

June 13, 2024 admin
சட்டசபை கூட்டம் வரும் 20–முதல் 29–வரை நடைபெறும் = சபாநாயகர் அறிவிப்பு! Exclusive

சட்டசபை கூட்டம் வரும் 20–முதல் 29–வரை நடைபெறும் = சபாநாயகர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 15-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை விவாதம் நடைபெற்றது. பின்னர், மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல், […]

June 12, 2024 admin
கோவை கொடிசியா மைதானத்தில்  ஜூன் 15-ல் முப்பெரும் விழா – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!. Exclusive

கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன் 15-ல் முப்பெரும் விழா – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி. நான்கு முனை போட்டி நிலவிய நிலையில், 40க்கு 40 என சொல்லி அடித்துள்ளது திமுக. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளதை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. கோவை, செட்டிபாளையம் எல்என்டி புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் முப்பெரும் விழா நடத்த ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் கொடீசியா […]

June 10, 2024 admin
சென்னை ஏர்போர்ட்டில் முகத்தை அடையாளம் காணும்  டிஜி யாத்ரா ஆப் அமல் Exclusive

சென்னை ஏர்போர்ட்டில் முகத்தை அடையாளம் காணும் டிஜி யாத்ரா ஆப் அமல்

நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அடையாள அட்டை மற்றும் விமான நிலைய நுழைவுச் சீட்டு (போர்டிங் பாஸ்) ஆகிய காகித ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை. விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அங்குள்ள பயணிகளை அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தை காட்டினால் போதும். இதற்காக பயணிகள் தங்கள் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை இந்த நவீன தொழில் நுட்பம் கொண்ட டிஜி யாத்ரா செயலியில் முன்கூட்டியே […]

June 8, 2024 admin
அதிமுக & பாஜக கூட்டணி குறித்து எடப்பாடியார் பேட்டி முழு விபரம்! Exclusive

அதிமுக & பாஜக கூட்டணி குறித்து எடப்பாடியார் பேட்டி முழு விபரம்!

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் வென்ற அதிமுகவுக்கு, இம்முறை ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணி 12 தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மதுரை, கோவை, நெல்லை, தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி 2வது இடத்திற்கு முன்னேறி, அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுக வேட்பாளர்கள் […]

June 8, 2024 admin
எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறாரா கனிமொழி? Exclusive

எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறாரா கனிமொழி?

திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர், பொருளாளர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக கடந்த முறை டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா ஆகியோர் இருந்தனர். எனவே மீண்டும் அவர்களே இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில்., 40 தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் […]

June 8, 2024 admin
உடனடி செய்திகள்