32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 30 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 30)
பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது ஏன்? Exclusive

பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது ஏன்?

தமிழ்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய பா.ஜ.க அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்த்ய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயில் ஒரு ரூபாய் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை.இதேபோல் 2023-ம் ஆண்டு அடுத்தடுத்து 2 இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்த நிலையில், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரத்து 986 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் 276 கோடி ரூபாயை […]

September 27, 2024 admin
10 கோடிப் பார்வைகள்-‘தமிழ் மின் நூலகம்’ சாதனை! Exclusive

10 கோடிப் பார்வைகள்-‘தமிழ் மின் நூலகம்’ சாதனை!

நூலகங்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது. மெசபடோமியர்கள் என்றழைக்கப்படும் இன்றைய ஈராக்கியர்களே முதன்முதலில் நூலகத்தை உருவாக்கியவர்கள். இவர்கள் களிமண் பலகைகளில் எழுதி அவற்றை நெருப்பில் சுட்டு அரண்மனைகளிலும் கோவில்களிலும் பாதுகாத்து வைத்திருந்தனர். துறைவாரியாகப் பகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மெசபடோமியர்களின் முயற்சியை நூலகங்களுக்கான முன்னோடி முயற்சி எனலாம். பின்னாளில் எகிப்தியர்கள், பாப்பிரஸ் என்ற தாளில் எழுதத் தொடங்கினர். கி.மு. 300-ஆம் ஆண்டு வாக்கில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பாப்பிரஸ் உருளைகள் கொண்ட கருவூலம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் இவ்வகைக் கருவூலங்களே தற்போதைய […]

September 27, 2024 admin
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு தங்க தரச்சான்று! Exclusive

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு தங்க தரச்சான்று!

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கான அறிவிப்பினை, தமிழ்நாடு முதலமைச்சர் 03.06.2021 அன்று வெளியிட்டார். இக்கட்டடம், பொதுப்பணித்துறையால் 6,03,409 சதுர அடி பரப்பளவில் ரூ.240.54 கோடி மதிப்பீட்டில், மருத்துவமனை கட்டடமானது 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவின் முதற்கட்டடமாக 15.06.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டட பணியானது தமிழ்நாடு முதலமைச்சர் தொடர் […]

September 24, 2024 admin
வேலூரில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, குணமடைந்து  வீடு திரும்பினார்! Exclusive

வேலூரில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, குணமடைந்து வீடு திரும்பினார்!

மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் 14-ம் […]

September 24, 2024 admin
சர்.ஜான் மார்ஷல் – நினைவலைகள்! Exclusive

சர்.ஜான் மார்ஷல் – நினைவலைகள்!

சிந்து சமவெளி நாகரிகம் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜான் மார்ஷலால் கண்டறியப்பட்டது. ஜான் மார்ஷலுக்கு நன்றி கூறுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாரே – டீடெய்ல் ப்ளீஸ் என்று கேட்போர் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகும் சூழலில் இதோ முழுத் தகவல் : இந்தியத் தொல்லியல் அகழாய்வின் ஆதவனாக விளங்கியவர் சர் ஜான் மார்ஷல். இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களின் துணைகொண்டு சிந்துவெளி நாகரிகத்தைக் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியவர். சுமேரிய நாகரிகம் போன்று இந்தியாவில் […]

September 20, 2024 admin
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் & ஷீத்தலுக்கு  சென்னையில் வரவேற்பு! Exclusive

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் & ஷீத்தலுக்கு சென்னையில் வரவேற்பு!

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் பள்ளியான வேலம்மாள் பள்ளி பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.அத்துடன் அப்பள்ளியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களை எதிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஒலிம்பிக் பதக்க வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவர்களுடன் […]

September 18, 2024 admin
அடுத்தடுத்து வரப் போகும் தேர்தல்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம்- ஸ்டாலின் நம்பிக்கை! Exclusive

அடுத்தடுத்து வரப் போகும் தேர்தல்களிலும் நாம்தான் வெற்றி பெறுவோம்- ஸ்டாலின் நம்பிக்கை!

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் தி.மு.க-வின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று  வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கலைஞர் கருணாநிதி AI தொழில்நுட்பம் மூலம் தோன்றி வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர், பேராசிரியர் மற்றும் ஸ்டாலின் விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.அதையடுத்து, தலைமையுரையாற்றிய துரைமுருகன், தி.மு.க தனது வீரியத்தைக் காட்டவேண்டிய காலகட்டம் வந்துவிட்டதாகவும், அதற்காக இளைஞர் பட்டாளங்களை உதயநிதி திரட்டிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து […]

September 17, 2024 admin
சென்னையில் உள்ள பொது நீச்சல் குளங்களின் பட்டியல்! Exclusive

சென்னையில் உள்ள பொது நீச்சல் குளங்களின் பட்டியல்!

பரந்து விரிந்த நீர் நிலைகளில் மகிழ்ந்து குளித்த மாபெரும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகிய நமக்கு, இன்று குளிக்க ‘பக்கெட்’ தண்ணீர், குடிக்க ‘பாக்கெட்’ தண்ணீர் என்கிற நகர வாழ்க்கை பழகிப் போனது விந்தைதான். நம் மீது திணிக்கப்பட்ட அல்லது நாமே விரும்பி ஏற்றுக் கொண்ட இந்த நகரத்துச் சூழலிலும், நீர் நிலைகள் நமது நினைவுகளை விட்டு அகலவில்லை. நகரத்து வீடுகளில் பரந்து விரிந்து கிடக்கும் நீச்சல் குளங்களே இதற்குச் சாட்சி.முன்னெல்லாம் ஆறு, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளுடனான நமது உறவு […]

September 17, 2024 admin
திமுகவை விட்டு விலகுகிறார் திருமாவளவன்!? Exclusive

திமுகவை விட்டு விலகுகிறார் திருமாவளவன்!?

திமுக வுடன் கூட்டணி வைத்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ குறித்து அவர் பேசும் வீடியோ இன்று (செப்.14) காலை பகிரப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், அந்த வீடியோ மீண்டும் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ இணைப்புக்கு மேல், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! – என 1999-ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே […]

September 14, 2024 admin
சாதிச்சிட்டோமில்லே – முதல்வர் பெருமிதம்! Exclusive

சாதிச்சிட்டோமில்லே – முதல்வர் பெருமிதம்!

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்.சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 17 பயணத்தை முடித்து கொண்டு, நேற்று(செப்.,13) அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட முதல்வர் துபாய் வழியாக, இன்று(செப்.,14) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக-வினர் சார்பிலும் பலத்த வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேள்விகளுக்கு அளித்த பதில்கள்: முதலீடுகள் தொடர்பாகவும், அமெரிக்க பயணம் […]

September 14, 2024 admin
உடனடி செய்திகள்