32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 209 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 209)
சிலைக்கடத்தல் விசாரணை : ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் Vs இந்து அற நிலையத்துறை! Running News

சிலைக்கடத்தல் விசாரணை : ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் Vs இந்து அற நிலையத்துறை!

“இந்தியாவிலேயே எந்த ஐஜியும் நேரடியாக சென்று விசாரணை செய்து சிலையை மீட்டது கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் நான் மட்டும் சிலை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேரடியாக விசாரணை செய்து ஒவ்வொரு சிலைகளாக மீட்டு வருகிறேன். சிலை திருடு போனால் அற நிலையத் துறைதான் புகார் தர வேண்டும். ஆனால், அவர்கள் புகார் தரவில்லை. புகார் தர மறுக்கின்றனர். ஒரு கட்டத்தில், எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் உள்ள சிலை இல்லை என்று கூறி வருகின்றனர்.” என்றெல்லாம் போலீஸ் ஐ. […]

August 6, 2018 admin
கருணாநிதி உடல் குறித்து நேரில் விசாரித்தார் ஜனாதிபதி! Running News

கருணாநிதி உடல் குறித்து நேரில் விசாரித்தார் ஜனாதிபதி!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்து விசாரித்து விட்டு போனார். வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதைய டுத்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணா நிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் […]

August 5, 2018 admin
இந்தி கற்பதில் அதிக ஆர்வம் காட்டும் தமிழர்கள்! Running News

இந்தி கற்பதில் அதிக ஆர்வம் காட்டும் தமிழர்கள்!

நம் நாட்டின் வரலாறுப் பக்கத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இன்றளவும் தனிக்கவனம் பெற்றுள்ளது . அதாவது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக் கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால் ஜனநாயக வழியில் நடத்தப் பட்டது தான் அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் […]

August 2, 2018 admin
சிலை கடத்தல் வழக்குகள்: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு! Running News

சிலை கடத்தல் வழக்குகள்: சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு!

கடந்த நாலைந்து மாதங்களாக அதிரடி காட்டி வந்த ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் சிலை கடத்தல் சிறப்பு நீதிபதியாக அமர்த்தப்பட்டார். அதன்பிறகு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து நீதிபதி […]

August 1, 2018 admin
கண்டேன் கலைஞர் கருணாநிதியை! – முதல்வர் எடப்பாடி பேட்டி Running News

கண்டேன் கலைஞர் கருணாநிதியை! – முதல்வர் எடப்பாடி பேட்டி

நேற்றிரவே வருவதாக  சொன்ன தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை குறித்து கேட்டறிந்து கருணாநிதி நலம் என்று தெரிவித்தனர்.. உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று இரவு மீண்டும் தகவல் பரவியது. அதனால் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனை […]

July 30, 2018 admin
கருணாநிதி உடல் நலம்: வெங்கய்ய நாயுடு நேரில் விசாரித்தார்! Running News

கருணாநிதி உடல் நலம்: வெங்கய்ய நாயுடு நேரில் விசாரித்தார்!

கடந்த வெள்ளிக்கிழமை நளிரவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி யின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார் ஜனாதிபதி வெங்கையா நாயுடு. இதையொட்டி கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேரில் பார்க்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெங்கையா நாயுடுவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் காவேரி […]

July 29, 2018 admin
கருணாநிதி மேலும் இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனையிலேயே இருப்பார்! Running News

கருணாநிதி மேலும் இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனையிலேயே இருப்பார்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி மேலும் இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனையிலேயே இருப்பார் என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன், நேற்று முன்தினம் இரவு திடீரென கருணாநிதிக்கு உடல் நலம் குன்றியது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்தால் உடல்நிலையை சீர் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்தே அன்றைய தினம் நள்ளிரவு கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர்கள் கூறியபடியே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த சிறிது […]

July 28, 2018 admin
கருணாநிதி உடல்நிலை  ; விஷமிகள் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் -ஸ்டாலின்! Running News

கருணாநிதி உடல்நிலை ; விஷமிகள் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் -ஸ்டாலின்!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு முதல் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறார். இடையில் மூச்சுத்திணறல் காரணமாக அவரது தொண்டையில் துளையிட்டு ட்ரக்யோஸ்டமி குழாய் பதிக்கப்பட்டது. அதன் பின்னர் உடல நலம் பாதிக்கப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று […]

July 27, 2018 admin
ரமேஷ் வினாயகம் தற்போது புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ! Running News2

ரமேஷ் வினாயகம் தற்போது புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி !

இன்றைய திரை இசையமைப்பாளர்களில் குறிப்பிடும்படியான ஒரு சிறந்த இடத்தில் இருப்பவர் ரமேஷ் வினாயகம் அவர்கள். பிரபல இயக்குனர் திரு மௌலி அவர்களுடைய சில தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், இயக்குனர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து நள தமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, மொசக்குட்டி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் ஞான ராஜசேகர் அவர்களின் அற்புதப் படைப்பான ‘ராமானுஜன்’ […]

July 26, 2018 admin
பொன்விழா நாயகர் கருணாநிதி புகழைப் பாடிப் பூரிப்படைவோம் – ஸ்டாலின் கடிதாசு! Running News

பொன்விழா நாயகர் கருணாநிதி புகழைப் பாடிப் பூரிப்படைவோம் – ஸ்டாலின் கடிதாசு!

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மாபெரும் கட்சியாக இருக்கும் திமுக தலைவராக பொறுப்பேற்று கருணாநிதி பொறுப்பேற்று 50 -வது ஆண்டான பொன்விழாவை தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இத்தனைக்கும்  அண்ணாவே தி.மு.க.வின் தலைவராக இருக்கவில்லை. பொதுச்செயலாளராகத்தான் இருந்தார். அண்ணாவே வகிக்காத தலைவர் பதவி, கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது தெரியுமா? அதற்கான பதில் இந்த ரிப்போர்ட்டின் கீழ் பகுதியில் உள்ளது.. தொடர்ந்து படியுங்கள். இது […]

July 26, 2018 admin
உடனடி செய்திகள்