32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 208 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 208)
நான், கலைஞரல்ல…கலைஞரின் மகன் -சவால்களை வெல்வேன்!- ஸ்டாலின் கடிதம்! Running News

நான், கலைஞரல்ல…கலைஞரின் மகன் -சவால்களை வெல்வேன்!- ஸ்டாலின் கடிதம்!

தலைவரை இழந்த கழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட ‘அக்கறை’ காட்டு கிறார்கள் அரசியல் எதிரிகள். ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாமா என நப்பாசை கொண்டிருக் கிறார்கள்.நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்பு களுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன் என்று மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.   மு.க.ஸ்டாலின் இன்று தன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் இதோ சூரியன் இல்லாத வானமாக, சொற்கள் தொலைத்த மொழியாக, மாலுமி […]

August 15, 2018 admin
தமிழக கவர்னர் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்! Running News

தமிழக கவர்னர் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்!

நாட்டின் 72வது சுதந்திர தின விழாவையொட்டி, கவர்னர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது நாடு முழுவதும் 72-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்த தமிழக கவர்னர் பன்வாரிலால், பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில், கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால் உடனிருந்தார். […]

August 15, 2018 admin
வெட்கத்தை விட்டு சொல்கிறேன் – திமுக செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு முழு விபரம்! Running News

வெட்கத்தை விட்டு சொல்கிறேன் – திமுக செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு முழு விபரம்!

தமிழகத்தின் தனி பெரும் இயக்கமான திமுகவின் தலைவரான மு.கருணாநிதி கடந்த 7 ம் தேதி காலமானார். அதற்கு அடுத்த நாள் அவரது உடல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு இன்று திமுக செயற்குழு கூடியது.இந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் க.அன்பழகன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரிய சாமி, வி.பி.துரைசாமி, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த அவசர […]

August 14, 2018 admin
பாலாறு பெண்ணையாறு இணைப்புத் திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல்! Running News

பாலாறு பெண்ணையாறு இணைப்புத் திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல்!

தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள், கிழக்கு பக்கமாக ஓடி கடலில் கலக்கின்றன.ஆறுகள் எப் போதும் நீரோட்டம் உள்ளவை, எப்போதாவது நீரோட்டம் உள்ளவை, அவ்வப்போது நீரோட்டம் உள்ளவை என, மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள் மூன்றாவது வகையை சேர்ந்தவை.பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கே இந்த ஆறுகளின் நீர்வள ஆதாரம். இவற்றில் பாலாறு, பெண்ணையாறு முக்கியமானவை.தமிழகத்தின் மணல் தேவையை இந்த இரு ஆறுகளும் பூர்த்தி செய்கின்றன. அதிகளவில் மணல் அள்ளப்பட்ட தால், ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகள், அவற்றை ஒட்டிய […]

August 14, 2018 admin
அரம்பிச்சிட்டாய்ங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க ! – மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த அழகிரி! Running News

அரம்பிச்சிட்டாய்ங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க ! – மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த அழகிரி!

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அக்கட்சியில் என்ன நடக்க வேண்டுமோ அக் காட்சிகள் அரங்கேறி விட்டது என்றே சொல்லலாம். இன்று கலைஞரின் மூத்த வாரிசான மு.க. அழகிரி ஒரு பிரைவேட் சேனலுக்கு அளித்த பேட்டியில், திமுகவுக்கு தாம் திரும்புவதை மு.க. ஸ்டாலின் விரும்ப வில்லை என்றும், திமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்படுகின்றன எனவும் கூறினார். பெரும்பாலான திமுக தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்பில் உள்ள னர் என்று குற்றம்சாட்டிய அழகிரி, தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள், […]

August 13, 2018 admin
தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும்! Running News

தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும்!

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 -ம் தேதி நடைபெறும் என, அக்கட்சி தலைமைக் அலுவலகம் அறிவித்துள்ளது. அதே சமயம் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 27 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக தீவிர […]

August 10, 2018 admin
ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க அனுமதி! – ஆனால் உற்பத்திக்கு நோ பர்மிஷன்! Running News

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க அனுமதி! – ஆனால் உற்பத்திக்கு நோ பர்மிஷன்!

தூத்துக்குடி ஆட்சியரால் மூடி சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் நிர்வாக பணி களை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டது. அதே சமயம் ஆலையில் உற்பத்தியை துவக்க அனுமதி அளிக்க முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் […]

August 9, 2018 admin
அண்ணாவின் சமாதி அருகே அமைதியாக அடக்கம் ஆனார் கருணாநிதி!! Running News

அண்ணாவின் சமாதி அருகே அமைதியாக அடக்கம் ஆனார் கருணாநிதி!!

தமிழகத்தின்  தனி பெரும் சக்தியாக விளங்கிய திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணாவின் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார்.இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதியின் […]

August 8, 2018 admin
கலைஞர் கருணாநிதி என்னும் கழக விருட்சம் சாய்ந்தது! Running News

கலைஞர் கருணாநிதி என்னும் கழக விருட்சம் சாய்ந்தது!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க் கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவையடுத்து, தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி […]

August 7, 2018 admin
கருணாநிதி ஹெல்த் கண்டீசன்: 24 மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியுமாம்! Running News

கருணாநிதி ஹெல்த் கண்டீசன்: 24 மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியுமாம்!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் 24 மணி தாண்டிய பிறகு தான் நிலைமையை சொல்ல முடியும் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் கருணாநிதி மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜனை செலுத்தும் டிரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காவேரி மருத்துவ மனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கருணாநிதி யின் உடல்நிலையில் […]

August 6, 2018 admin
உடனடி செய்திகள்