தமிழக கவர்னர் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்!

தமிழக கவர்னர் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்!

நாட்டின் 72வது சுதந்திர தின விழாவையொட்டி, கவர்னர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

நாடு முழுவதும் 72-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்த தமிழக கவர்னர் பன்வாரிலால், பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால் உடனிருந்தார். பின்னர் பேசிய பன்வாரிலால், கவர்னர் மாளிகையில் உள்ள குடும்ப உறுப்பினர்களான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சி யடைவதாகத் தெரிவித்தார். பின்னர், ராஜ்பவனில் உள்ள ஊழியர்களின் குழந்தைகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுநர் இனிப்புகளை வழங்கினார்.

இதனிடையே சுதந்திர தின விழாவையொட்டி, கவர்னர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய தேநீர் விருந்தில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமாணி மட்டும் பங்கேற்றார்.

அண்மையில் இந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி பதவியேற்ற நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தே கவர்னர் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி சுதந்திர தினத்தன்று கவர்னர் வழக்கத்துக்கு மாறாக தேசியக் கொடி ஏற்றியதும் அவர் அளித்த தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்து இருப்பதும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பி உள்ளது

Related Posts

error: Content is protected !!