32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 205 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 205)
ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை தெரிவிக்க ஐகோர்ட் ஆர்டர்! Running News

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை தெரிவிக்க ஐகோர்ட் ஆர்டர்!

தமிழக அரசியலில் தனி ஒரு மனுஷியாக பலரை மிரட்டி அடிபணிய வைத்து வாழ்ந்து காட்டிய ஜெயலலிதாவின் மரணத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. கூடவே ஜெயலலிதாவின் சொத்துக்கள் அடுத்து என்ன ஆகும் என்பதும் அவரின் வாரிசுகள் குறித்து இன்னும் தெளிவான பதில் கிடைக்காத நிலையில் சொத்து வரி கணக்கு தொடர்பான வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதா, கடந்த 1997-98-ம் ஆண்டு தனக்கு […]

September 10, 2018 admin
ஏழு பேர் விடுதலைக்கு பரிந்துரை! – தமிழக அமைச்சரவை தீர்மானம்! Running News

ஏழு பேர் விடுதலைக்கு பரிந்துரை! – தமிழக அமைச்சரவை தீர்மானம்!

பேரறிவாளன், சாந்தன் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7பேரும் 26 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்துவருகின்றனர். ஏழு பேரின் விடுதலை தொடர்பாக கடந்த 6ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும், இதுகுறித்து ஆளுநருக்கு தமிழக […]

September 9, 2018 admin
எட்டு வழிச் சாலை பிரச்னையை அறிய தமிழகம் வந்த யோகேந்திர யாதவ் கைது! Running News

எட்டு வழிச் சாலை பிரச்னையை அறிய தமிழகம் வந்த யோகேந்திர யாதவ் கைது!

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படப்போவதாக கூறியுள்ள விவசாயி களை நேரில் சந்திக்க, டெல்லியில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த ஜெய் கிசான் அந்தோலன் என்ற விவசாயிகளுக்கான அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவலும், ”’யோகேந்திர யாதவ் மற்றும் பிற நபர்களை கிராமங் களுக்குள் செல்ல அனுமதித்தால் மக்களிடம் அமைதியின்மை(social unrest) ஏற்படும் என்று எண்ணு கிறோம். அதனால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளோம்,” என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

September 8, 2018 admin
அ.தி.மு.க. சார்பிலான புத்கிய சேனல் ‘நியூஸ் ஜெ’ – 12ம் தேதி தொடக்க விழா! Running News

அ.தி.மு.க. சார்பிலான புத்கிய சேனல் ‘நியூஸ் ஜெ’ – 12ம் தேதி தொடக்க விழா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. அதையடுத்து நடந்த அரசியல் சடு குடு ஆட்டத்திலிருந்து சசிகலா & தினகரன் குடும்பம் அ.தி.மு.க-வை விட்டு விரட்டப்பட்டது. அத்துடன் முதல்வர் பழனி சாமி, ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வசம் அ.தி.மு.க சென்றதுடன் அதன் ஒருங்கிணைப்பாளர் களாக அவர்கள் நியமிக்கப்பட்டனர். அதே சமயம் அ.தி.மு.க-வின் செய்தித்தாளாக இருந்துவந்த […]

September 7, 2018 admin
அளவுக்கு அதிகமான வலி என் இதயத்தில் உள்ளது! – குட்கா விவகாரம் குறித்து ஜார்ஜ்!! Running News

அளவுக்கு அதிகமான வலி என் இதயத்தில் உள்ளது! – குட்கா விவகாரம் குறித்து ஜார்ஜ்!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள குட்கா விவகாரத்தில் அதன் உற்பத்தி யாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும், விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குட்கா உற்பத்தியாளர் மாதவராவ் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், ஜார்ஜ் பெயரும் இருந்ததால் சிபிஐ நேற்று முன்தினம் அவர் வீட்டில் ரெய்டு நடத்தினர்.ஜார்ஜ் வீடு மட்டுமின்றி தற்போதைய காவல் ஆணையர், சுகாதார துறை அமைச்சர், காவல்துறை உயர் […]

September 7, 2018 admin
ராஜீவ் கொலை வழக்கால் சிறையிலுள்ள 7 பேரை தமிழக அரசே விடுவிக்கலாம்! – சுப்ரீம் கோர்ட் Running News

ராஜீவ் கொலை வழக்கால் சிறையிலுள்ள 7 பேரை தமிழக அரசே விடுவிக்கலாம்! – சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளாக சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என  சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்தது. அது மட்டுமின்றி, இந்த வழக்கில் […]

September 6, 2018 admin
குட்கா ஊழல் புகார்: அமைச்சர் & டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை! Running News

குட்கா ஊழல் புகார்: அமைச்சர் & டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை!

தமிழகத்தில் தடை செய்யப்பட்டாலும் இன்றளவும் தாராளமாக கிடைக்கும் குட்கா ஊழல் மற்றும் முறைகேடு விவகாரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி டிகேஆர், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. விசாரணை மேலும் தொடரும் என்றும் சிபிஐ ரெய்டுக்குப் பிறகு தெரிவித்துள்ளது. கடந்த 27.06.2017 அன்று டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சி, தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பான், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சுதந்திரமாக உலவுவதன் காரணத்தை […]

September 5, 2018 admin
பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகிட்டாங்க – மு.க. அழகிரி பெருமிதம் Running News

பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகிட்டாங்க – மு.க. அழகிரி பெருமிதம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகம் முக அழகிரியின் தலைமையில் அமைதி பேரணி என்ற பெயரில் கொஞ்சம் கூட்டத்தினருடன் நடந்து சென்று அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களை அழகிரி சந்தித்த போது ”பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி. இது முழுக்க முழுக்க அஞ்சலி பேரணிதான், அரசியலுக்கான பேரணி இல்லை என்று அவர் தெரிவித் தார். அத்துடன் இந்த பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி. இதில் சுமார் ஒன்றரை லட்சம் […]

September 5, 2018 admin
விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறை! – தமிழக அரசு தகவல்! Running News

விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறை! – தமிழக அரசு தகவல்!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த வகுக்கப் பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்தும், பழைய முறைப்படி அனுமதி வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறைப்படி அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்து வதற்கு […]

September 4, 2018 admin
பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு  ஜாமின்! Running News

பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு ஜாமின்!

மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவின் ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசை சவுந்த ரராஜனை பார்த்து முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி மாவட்ட நீதி மன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. சோபியா தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியில் வசித்து வருகிறார். இவரது தந்தை சாமி, தாயார் மனோகரி. இவரது தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர். சோபியா ஜெர்மனியில் உள்ள […]

September 4, 2018 admin
உடனடி செய்திகள்