32°C
விளம்பரம்
Advertisement

பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு ஜாமின்!

admin சேலம் Published: September 4, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவின் ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசை சவுந்த ரராஜனை பார்த்து முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி மாவட்ட நீதி மன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.

சோபியா தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனியில் வசித்து வருகிறார். இவரது தந்தை சாமி, தாயார் மனோகரி. இவரது தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் மனோகரி தலைமை செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர். சோபியா ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்எஸ்சி இயற்பியல் படித்துள்ளார். அதன்பின் கனடாவில் எம்எஸ்சி கணிதம் படித்தார். தற்போது அவர் கனடாவில் முனைவர் பட்டம் பெற, பிஎச்டி படித்துக் கொண்டுள்ளார். கனடாவில்தான் வசித்து வருகிறார். கனடாவில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் சோபியா.

இதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில், நேற்று சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பயணம் செய்தார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.தமிழிசையைப் பார்த்ததும் மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக கோஷமிடப் போவதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துவிட்டு பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்டார்.

சோபியாவின் செயலால் தமிழிசை கடுங்கோபம் அடைந்தார். பின்னர் அந்த மாணவியுடன் விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடி விமான நிலையம் சென்ற பின்னர், தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நேற்று மாலை சோபியாவை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இப்படி மாணவி கைது செய்யப்பட்டதற்கு அரசியல் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியா கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறினர்.

இதனிடையே மாணவி சோபியாவுக்கு ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, குற்றவியல் நீதிபதி தமிழ்ச்செல்வி முன் நடைபெற்றது. சோபியா தரப்பில் வழக்கறிஞர் அதிசயக்குமார் ஆஜராகி வாதிட்டார்.

விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி தமிழ்ச்செல்வி , “நாட்டின்மீது அக்கறை இருப்பது அவசியம்தான். பொது இடங்களில் இனி இது போன்று பேசக்கூடாது” என மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் நீதிமன்றம் அறிவுரை கூறி சோபியாவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்