32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 193 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 193)
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்..கலாம்…லாம்! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! Running News

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்..கலாம்…லாம்! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

தூத்துக்குடியில் 13 பேர்களின் உயிர் பலி வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,ஆலையை திறக்க தடைவிதித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவும் ரத்தும் செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பபட்ட நிலையில், ஆலையை மூடி தமிழகஅரசு சீல் வைத்தது. இந் நிலையில், ஸ்டெர் லைட் ஆலையின் நிர்வாகம், டி ல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த […]

January 8, 2019 admin
எத்தனை டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி வாங்கியவை? : ஐகோர்ட் கேள்வி Running News

எத்தனை டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி வாங்கியவை? : ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசாங்கத்தின் மெயின் வருவாய் துறையான டாஸ்மாக் கடைகளில் எம் ஆர் பி -யை விட கூடுதல் விலை கொடுத்து சரக்கு வாங்கி அதை நிம்மதியாக குடிக்க டாஸ்மாக் எந்த “பார்’ களிலா வது போதுமான வசதி இருக்கிறதா? உள்ளே நுழைந்தவுடன் குடிக்கும் முன்பே குமட்டி வாந்தி எடுக்கும் நிலையில்தான் டாஸ்மாக் பார்கள் உள்ளன. அடிப்படை வசதி இல்லாமல், எந்தவித வரைமுறையும் இல்லாமல், பார் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. அங்கு விற்கப்படும் பொருட்கள், வெளியில் உள்ள கடைகளின் […]

January 7, 2019 admin
தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை! பதவி பறிப்பு? Running News

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை! பதவி பறிப்பு?

ஏற்கெனவே தமிழக சட்டசபையில் 20 காலி இடங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழக விளை யாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளதை அடுத்து அவர் பதவி பறி போனதாக தெரிகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 1998-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்தாடுவதாகவும், அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் […]

January 7, 2019 admin
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு! Running News

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

பலத்த சலசலப்புக்குகளுக்கிடையே திருவாரூர் தொகுதிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதே சமயம் எம்.எல்.ஏக்கள் தகுதியிழப்பு தீர்ப்பால் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். அதேபோல், கஜா புயல் நிவாரணப் பணிகள் முழுமையாக […]

January 7, 2019 admin
5வது தமிழக சர்வதேசராட்சத பலூன் திருவிழா நிறைவு! Running News

5வது தமிழக சர்வதேசராட்சத பலூன் திருவிழா நிறைவு!

செங்கல்பட்டு அருகே நேற்று நடைபெற்ற 5வது தமிழக சர்வதேசராட்சத பலூன் திருவிழா, திரைநட்சத்திரங்கள் உள்ளிட்டஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள, கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, சர்வதேச பலூன் திருவிழா வருடாந்திரம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5வது சர்வதேச பலூன் திருவிழா செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேல்டு சிட்டியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று, இசைஞானி இளையராஜா, நடிகர் விஷால்,நாசர், நடிகை ஆண்ட்ரியாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் இசைஞானி இளையராஜாவுக்காக […]

January 6, 2019 admin
தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! – வைரமுத்து எச்சரிக்கை! Running News

தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! – வைரமுத்து எச்சரிக்கை!

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொழில் அதிபர் நாகராஜன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கவிஞர் […]

January 6, 2019 admin
திருவாரூர் தேர்தல் கொஞ்சம் நாள் தள்ளி வைங்கப்பூ!- அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்! Running News

திருவாரூர் தேர்தல் கொஞ்சம் நாள் தள்ளி வைங்கப்பூ!- அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!

டெல்டா மாவடங்களை புரட்டிப் போட்ட ஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவடையாததால் அங்குள திருவாரூர் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் […]

January 5, 2019 admin
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்னை? ஐகோர்ட் வேதனை! தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்னை? ஐகோர்ட் வேதனை!

உலகப் புகழ் பெற்ற (அவனியாபுரம்) ஜல்லிக்கட்டில் ஜாதி மதத்தைத் திணித்து, சுய கவுரவம் அடைய நினைப்பது வேதனையாக உள்ளதாக ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி வரும் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருபவர் ஜல்லிக்கட்டு தொடர்பான கணக்குகளை […]

January 4, 2019 admin
சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு! Running News

சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு!

42-வது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார். சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 42-வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வார […]

January 4, 2019 admin
தமிழக சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்! Running News

தமிழக சட்டசபையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல்!

தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்றைய தினம் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், மறைந்த 12 அவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரங்கல் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

January 4, 2019 admin
உடனடி செய்திகள்