32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 194 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 194)
பொங்கலை சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய்!  – கவர்னர் அறிவிப்பு! Running News

பொங்கலை சிறப்பாக கொண்டாட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய்! – கவர்னர் அறிவிப்பு!

”பொங்கல் திருநாளை தமிழர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்டபொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது. இது தவிர திருவாருர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாவட்டத்தில் நடைமுறை யில் உள்ள தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவாருர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங் களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாக […]

January 2, 2019 admin
வானம் கலைவிழா -வை  தொடர்ந்து நடத்துவோம்! – பா.இரஞ்சித் Running News2

வானம் கலைவிழா -வை தொடர்ந்து நடத்துவோம்! – பா.இரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல், தெருக்கூத்து, தனி யிசைக்கலைஞர்கள் பாடல்கள், புத்தக கண்காட்சி, சிலைகள் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, சிலம்பாட்டம், இதுவரை மேடையேற்றப்படாத பல கலைஞர்கள் கலந்துகொண்ட பல கலைகள் என மறக்கப்பட்ட நம் கலைகள் பல நிகழ்த்தப்பட்டன, மூன்று நாட்கள் நடந்த […]

January 1, 2019 admin
புத்தாண்டு பரிசு : மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து? தமிழகம்

புத்தாண்டு பரிசு : மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து?

நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது சென்னைப் போக்குவரத்து காவல் துறை. புத்தாண்டு தினத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை காவல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் மூலமாக மக்கள் மது போதையில் விபத்துகளில் சிக்குவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. “குற்றம் செய்தவரின் தகவல்கள் குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்படும். இதனால் […]

January 1, 2019 admin
டிக் டாக்(TikTok) மொபைல் செயலியை தடை செய்! – ராமதாஸ் வலியுறுத்தல்! Running News

டிக் டாக்(TikTok) மொபைல் செயலியை தடை செய்! – ராமதாஸ் வலியுறுத்தல்!

லேட்டஸ்ட் டிரெண்டிங் உருவாக்கும் போக்கு சாதனமாக மாறி விட்டது டிக் டாக் செயலி. இது நாள் வரை கோலோச்சி வந்த பேஸ்புக் , வாட்ஸாப் செயலிகளை விட குறைந்த நாட்களில் அதிகப்படி யான பாலோவர்ஸை பெற்று விட்டது டிக் டாக் . அதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு வயதினரும் பங்கேற்று அதை பகிர்ந்து வரும் சூழலில் நம்மூர் மாணவர்களிடம் கவனச் சிதறலை ஏற்படுத்தும் டிக் டாக்(TikTok) மொபைல் செயலியை தடை செய்ய வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]

January 1, 2019 admin
கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு! Running News

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தை பெரும் பாதிப்புக்குளாக்கிய கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.1146 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சமீபத்தில் தாக்கிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்தன. ஏராளமான வீடுகள், தென்னை மரங்கள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமாறு […]

December 31, 2018 admin
ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்! Running News

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல்!

தி.மு.கழக தலைவர் மு.கருணாநிதி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அவர் மறைவு காரணமாக 2019, ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடந்த 5 மாநில தேர்தலுடன் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருடைய தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கன மழைக்கான ரெட் அலர்ட் […]

December 31, 2018 admin
கூட்டணியோ கூட்டணி !- பாமக முடிவு!. Running News

கூட்டணியோ கூட்டணி !- பாமக முடிவு!.

கோவை சிங்காநல்லூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் பா.ம.கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில்   `நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க., மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை தலைவர் ராமதாஸுக்கு வழங்குவது, மேகதாது அணை குறித்த ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்களின் விவரம் […]

December 30, 2018 admin
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்! Running News

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்!

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த கீதா லட்சுமி கடந்த 27-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய துணைவேந்தராக மருத்துவர் சுதா சேஷய்யனை நியமித்து, அதற்கான ஆணையை வழங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. துணை வேந்தரை தேர்வு செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதையொட்டி இந்த […]

December 29, 2018 admin
இந்திய அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்ற விருதுநகர் ; நிதி ஆயோக் தகவல்! Running News

இந்திய அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்ற விருதுநகர் ; நிதி ஆயோக் தகவல்!

ஜெ. மறைவுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய எடப்பாடி & கோ மீது தமிழக மக்களுக்கு போதிய நம்பகத்தன்மை இன்னும் ஏற்படவில்லை என்று ஊடகங்களில் சில சொல்லி வரும் சூழ்நிலையில் சுகாதாரம், ஆரோக்கியம், விவசாயம், நீராதாரம், நிதி, திறன் மேம்பாடு அடிப்படை உள் கட்டமைப்புகள் போன்றவற்றில் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் நிதி ஆயோக்கின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி […]

December 28, 2018 admin
பள்ளி மாணவ, மாணவியர் மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வரக் கூடாது! Running News

பள்ளி மாணவ, மாணவியர் மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வரக் கூடாது!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஜனவரி 1 முதல், செயல்வழி கற்றலுக்கு தெர்மா கோல் பயன்படுத்தக் கூடாது. மதிய உணவை பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் மீதான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கேற்ப அரசு அலுவலகங் கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன், மறுசுழற்சியில் […]

December 24, 2018 admin
உடனடி செய்திகள்