32°C
விளம்பரம்
Advertisement

5வது தமிழக சர்வதேசராட்சத பலூன் திருவிழா நிறைவு!

admin சேலம் Published: January 6, 2019 1 நிமிட வாசிப்பு Updated: January 7, 2019 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




செங்கல்பட்டு அருகே நேற்று நடைபெற்ற 5வது தமிழக சர்வதேசராட்சத பலூன் திருவிழா, திரைநட்சத்திரங்கள் உள்ளிட்டஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள, கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, சர்வதேச பலூன் திருவிழா வருடாந்திரம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5வது சர்வதேச பலூன் திருவிழா செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேல்டு சிட்டியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று, இசைஞானி இளையராஜா, நடிகர் விஷால்,நாசர், நடிகை ஆண்ட்ரியாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த மாதம் இசைஞானி இளையராஜாவுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் விழாவுக்கான டிக்கெட்டுகள் விற்பனை, இந்த நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்பட்டது.இளையராஜா, விஷால், நாசர் ஆகியோர் ராட்சத பலூனில் ஏறி பயணம் செய்தனர்.

இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட வண்ண வண்ண ராட்சத பலூன்கள், வானை அலங்கரித்தன.இந்த நிகழ்ச்சியில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ராட்சத பலூன் திருவிழா அடுத்த வாரம் பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்