32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 191 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 191)
வாயை மூடி பேசவும்!- தெஹல்கா எக்ஸ் எடிட்டர் மேத்யூ-வுக்கு ஐகோர்ட் ஆர்டர்! Running News

வாயை மூடி பேசவும்!- தெஹல்கா எக்ஸ் எடிட்டர் மேத்யூ-வுக்கு ஐகோர்ட் ஆர்டர்!

கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் எதிர்கட்சிகளின் ஹாட் டாபிக்-காக இருந்த கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். அந்த வீடியோ வில் […]

January 23, 2019 admin
‘ஒரு பய மதிக்க மாட்டேங்கறாங்க யுவர் ஆனர்!’ – கோர்ட்டில் பொன் மாணிக்கவேல் புகார்! Running News

‘ஒரு பய மதிக்க மாட்டேங்கறாங்க யுவர் ஆனர்!’ – கோர்ட்டில் பொன் மாணிக்கவேல் புகார்!

தமிழக கோயில்களிலிருந்து பல காலங்களாகக் கடத்தப்பட்டு வந்த சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் இன்று விசாரணை நடந்தது. அதில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆஜராகி, “ இந்த வழக்கு விசாரணைக்கு தனக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அது இன்னும் முழுமை யாக நிறைவேற்றப்படவில்லை. அதேபோல தன்னிடம் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்களையும் இன்னும் ஒப்படைக்கவில்லை. […]

January 21, 2019 admin
விஸ்வாசம் உள்ள அனைவருக்கும் அதிமுகவில் பதவிகள்! – நெல்லையில் எடப்பாடி பேச்சு! Running News

விஸ்வாசம் உள்ள அனைவருக்கும் அதிமுகவில் பதவிகள்! – நெல்லையில் எடப்பாடி பேச்சு!

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கிய பொழுதும், பின்னர் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்த அம்மாவுக்கும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எந்தளவிற்கு துன்பத்தைக் கொடுத்தார்களோ, அதே அளவிற்கு இப்பொழுது நமக்கும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க.வுக்கு கொள்கையோ, கோட்பாடோ கிடையாது, பதவிக்காக நேரத்துக்கு நேரம் மாறுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருநெல்வேலி மாவட்டம் வாகையடி முனை பகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா நேற்று மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட […]

January 20, 2019 admin
சென்னை டூ தூத்துகுடி : எட்டு வழி சாலைக்கு ஒப்புதல்! Running News

சென்னை டூ தூத்துகுடி : எட்டு வழி சாலைக்கு ஒப்புதல்!

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான புதிய 8 வழி சாலை திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த திட்டமானது சுமார் ரூ.13,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்துப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதன் […]

January 19, 2019 admin
கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஒட்டுது என்பதா? – முதல்வர் எடப்பாடி பேச்சு! Running News

கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஒட்டுது என்பதா? – முதல்வர் எடப்பாடி பேச்சு!

கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஒட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை காட்டுப்பாக்கத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி, “மக்கள் மனதிலிருந்து எம்ஜிஆர் மறையவில்லை. தமிழகத்தில் உயர்க்கல்விக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு […]

January 18, 2019 admin
தமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை! Running News

தமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை!

தமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னைப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இந்நாள் அமெட் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான திருவாசகம்,  சுவிட்சர்லாந்துசுரேஷ், தொழிலதிபர் சிங்காரம், சிற்பி தட்சிணா மூர்த்தி, வெற்றித்தமிழர்பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட்ட வெற்றித் தமிழர் பேரவையினர் விழாவில் […]

January 16, 2019 admin
நாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள்! – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்! Running News

நாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள்! – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்!

எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளை தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்படும் உருவப்படத்திற்கு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர், மரியாதை செலுத்துகின்றனர். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. இதனிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் . அனைத்திந்திய […]

January 16, 2019 admin
இனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா நம்பிக்கை!! Running News

இனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா நம்பிக்கை!!

நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’. இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் மற்ற நிறுவனங்களைப் போல அல்லாமல், முதல் தலைமுறை தொழிலதிபர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து துவங்கியிருக்கும் கார் சேவை நிறுவனம் தான் இந்த Ryde. ஓட்டுனர்களுக்கு சிறந்த சலுகைகளை அளிப்பதன் […]

January 16, 2019 admin
கொடநாடு விவகாரத்தில் டெல்லியில் கைதான மனோஜ், சயான் விடுவிப்பு! தமிழகம்

கொடநாடு விவகாரத்தில் டெல்லியில் கைதான மனோஜ், சயான் விடுவிப்பு!

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கொள்ளையடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மனோஜ், சயோன் ஆகியோர் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். கோடநாடு கொலை, கொள்ளையில் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ என்பவர் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக ஆளுநரை சந்தித்து, கோடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தும் படி […]

January 15, 2019 admin
சென்னையில் டிராஃபிக் ரோபோ போலீஸ் அறிமுகம்! Running News

சென்னையில் டிராஃபிக் ரோபோ போலீஸ் அறிமுகம்!

சென்னை மாநகரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப் படுத்த மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து போலீசார் சார்பில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு […]

January 14, 2019 admin
உடனடி செய்திகள்