32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 195 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 195)
கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான்- வைரமுத்து! Running News

கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான்- வைரமுத்து!

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூன்றி ஆயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 20ஆம் ஆளுமையாக சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் விழாவுக்குத் தலைமை தாங்கினார். முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது : இயற்கை என்ற பெரும்பொருளை […]

December 23, 2018 admin
லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..! தமிழகம்

லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா..!

திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி நடந்தது. சிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன், மற்றொரு பிரபல […]

December 23, 2018 admin
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். Running News

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று காலமானார். புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவருக்கு வயது 73. இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமியின் விருதை பெற்றவர்.தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர். கடந்த ஓராண்டுக்கு முன் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மதகடிப்பட்டில் உள்ள தனியார் […]

December 21, 2018 admin
ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை! Running News

ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்திற்குள் திறக்க நடவடிக்கை!

இந்தியாவின் தாமிர தேவையில் 36 சத வீதத்தை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய் கிறது. இந்த ஆலை மூடப்பட்டதால், தாமிர விலை உயர்ந்தது. கோவையில் உள்ள மோட்டார் உற்பத்தி தொழிற் சாலைகள், பல்வேறு மின்சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப் பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள அனைவருக் கும் வீடு திட்டம், தாமிரம் இன்றி சாத்திய மாகாது. மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் காற்று, சூரியஒளி மின்சாரத்துக்கும் அதிக அளவில் தாமிரம் தேவை. […]

December 20, 2018 admin
பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்து நடத்தும் ‘வானம் கலைத்திருவிழா’!. Running News

பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்து நடத்தும் ‘வானம் கலைத்திருவிழா’!.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத் தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் “வானம் கலைத்திருவிழா” நடக்க இருக்கிறது. வானம் கலைத்திருவிழா பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” […]

December 19, 2018 admin
தமிழகத்தில் பேனர்கள் வைக்கத் தடை !- சென்னை ஐகோர்ட் உத்தரவு! Running News

தமிழகத்தில் பேனர்கள் வைக்கத் தடை !- சென்னை ஐகோர்ட் உத்தரவு!

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர் அல்லது மாநகராட்சி அதிகாரியின் முறையான உரிமம் / அனுமதி பெறாமல் எந்தவொரு நபரும் எந்தவொரு இடத்திலும் விளம்பரப் பலகைகள் / மின்னணு அச்சு விளம்பர பட்டிகை மற்றும் அட்டைகளை வைக்கக் கூடாது. இச்சட்ட விதிகளை மீறி, விளம்பரப் பலகைகளை வைப்போர் மீதும், இச்சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை தடுப்போர் மீதும், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க அல்லது இந்த […]

December 19, 2018 admin
குழந்தைகள் திருமணம் நடப்பதில் சென்னை முதலிடம்! Running News

குழந்தைகள் திருமணம் நடப்பதில் சென்னை முதலிடம்!

நம் நாட்டில் 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இந்தச் சட்டங்கள் இருந்த போதும், 50 சதவீதத் துக்கு மேல் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடப்பது வழக்கமாகிப் போன நிலையில் 2017ஆம் ஆண்டில் மட்டும் 1,636 குழந்தைத் திருமணங்கள் அரசால் தடுத்துநிறுத்தப்பட்டதாகவும் தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் நடப்பதில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 5,480 […]

December 18, 2018 admin
சிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்!- டிஜிபி தகவல்!! Running News

சிலைக் கடத்தல் விசாரணை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதே புகார்!- டிஜிபி தகவல்!!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிதாக 60 அதிகாரிகளை நியமிக்கக் கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ள நிலையில் பொன்.மாணிக்கவேல் மீது ஒரு புகார் மனு வந்திருப்பதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என டிஜிபி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதாவது சிலைக் […]

December 18, 2018 admin
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முழு விபரம்! Running News

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முழு விபரம்!

இந்தியா முழுவதும் புதிதாக 6 எய்ம்ஸ் கிளைகளை உருவாக்குவதற்காக 2012ம் ஆண்டில் நாடாளு மன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் போபால், ஒடிஷா மாநிலத்தில் புவனேஸ்வர்,  சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், ராஜஸ்தானின் ஜோத்பூர், பீகாரின் பாட்னா மற்றும் ரிஷிகேஷ் என ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கிளைகள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக,தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆகிய 4 மாநிலங் களில் மேலும் 4 எய்ம்ஸ் கிளைகளை தொடங்க உள்ளதாக, கடந்த 2014ம் […]

December 17, 2018 admin
சாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்! – மு.க.ஸ்டாலின் ஆவேசம்! Running News

சாடிஸ்ட் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்! – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி, மெரினா கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்திலும் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதை அடுத்து கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடந்தது. அவ் விழா மேடை அண்ணா அறிவாலயம் போன்று வடிவமைக்கப் பட்டு இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் […]

December 17, 2018 admin
உடனடி செய்திகள்