32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 109 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 109)
அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை : முதல்வர் தொடங்கி வைத்தார்! Exclusive

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை : முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11–ந் தேதி) சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின்கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு 24 மணி நேரமும் செயல்படக்கூடியவர். எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்கக் கூடியவர். அவர் சேகர்பாபு அல்ல. ‘செயல்பாபு’ என்று அமைச்சர் சேகர்பாபுவின் விரைவான செயல்பாட்டுக்கு முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். கொரோனா […]

September 11, 2021 admin
வாணியம்பாடியில் நடு ரோட்டில் முஸ்லீம் இளைஞர் வெட்டி படுகொலை!- வீடியோ! Exclusive

வாணியம்பாடியில் நடு ரோட்டில் முஸ்லீம் இளைஞர் வெட்டி படுகொலை!- வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராகவும் இருந்து வந்தார். அத்துடன் வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நேற்று (அக்டோபர் 10) ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் வசீம் அக்ரம், தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சாலையில் ஓட […]

September 11, 2021 admin
தமிழகத்தின் புதுக் கவர்னர் ஆர்.என்.ரவி : யார்? எப்படி- முழு விபரம்! Exclusive

தமிழகத்தின் புதுக் கவர்னர் ஆர்.என்.ரவி : யார்? எப்படி- முழு விபரம்!

தமிழ்நாட்டின் புதிய கவர்னராக நாகாலாந்து மாநில கவர்னராக இருக்கும், ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் பகுதி நேர கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித்தை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல தமிழ்நாட்டின் புதிய கவர்னராக […]

September 10, 2021 admin
குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேறியது! Exclusive

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேறியது!

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது.இந்திய நாட்டின் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் போற்றி பாதுகாக்க ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய சட்டப்பேரவை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்துசெய்யக்கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். முன்னதாக இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், […]

September 8, 2021 admin
கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்! Exclusive

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் புலவர் புலமைப்பித்தன், தமிழக சட்டமன்றத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார். மேலும், எம்.ஜி.ஆரால் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது 85 வயதாக கவிஞர் புலமைப்பித்தன், கடந்த 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் […]

September 8, 2021 admin
ஊழியர்கள் அமர இருக்கை கட்டாயம்: பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்! Exclusive

ஊழியர்கள் அமர இருக்கை கட்டாயம்: பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்!

கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அமர்வதற்கு இருக்கை கட்டாயம் வழங்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் தொழிலாளர் நலநிதிய சட்டத் திருத்த முன் வடிவு தாக்கல் செய்தார் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன். இதனால் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பெரிதும் பயன்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றம் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட […]

September 6, 2021 admin
பெரியார் பிறந்த செப்.17 சமூகநீதி நாள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Exclusive

பெரியார் பிறந்த செப்.17 சமூகநீதி நாள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று பேரவையில் இன்று பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு முழு விபரம், மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். ஆறாவது […]

September 6, 2021 admin
மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்! Exclusive

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 […]

September 5, 2021 admin
கோயிலில் மொட்டை போட இனி காசு வேண்டாம் – தமிழக அரசு!- முழு விபரம்! Exclusive

கோயிலில் மொட்டை போட இனி காசு வேண்டாம் – தமிழக அரசு!- முழு விபரம்!

தமிழ்நாடு அரசின் இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் மொட்டை போடுவதற்கு இனிமேல் கட்டணமில்லை. திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது, அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகமே வழக்கும் என அமைச்சர் பி.கே. சேகர் பாபு சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை கிட்டத்தட்ட 30,000திற்கும் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கியமான கோயில்களில் பக்தர்கள் மொட்டை […]

September 4, 2021 admin
திராவிடக் களஞ்சியம் தொகுப்பு நூல் விவகாரம் : தங்கம் தென்னரசு விளக்கம்! Exclusive

திராவிடக் களஞ்சியம் தொகுப்பு நூல் விவகாரம் : தங்கம் தென்னரசு விளக்கம்!

தமிழக சட்டமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் திராவிட என்ற சொல்லே கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். அது போல் தமிழ் இன உணர்வும், தமிழ்த் தேசியமும் வளர்ந்து வரும் இக்காலத்தில் தமிழ் -தமிழினப் பெருமிதங்களை திராவிட மாயையில் மறைக்கும் செயலை திமுக கைவிட்டால் நல்லது எனவும் வலியுறுத்தியுள்ளார். […]

September 3, 2021 admin
உடனடி செய்திகள்