32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11701 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1145 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1145)
அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி Running News

அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.இதனையடுத்து, புறப்பட இருந்த விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் பஸ்களின் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரண்டாவது மற்றும் மூன்றாம் முனையங்களில் இருந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் விமான நிலைய போக்குவரத்து பாதுகாவலர் ஒருவர் பலியானதாகவும் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம […]

November 2, 2013 admin
தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்! Running News

தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

இருளை அகற்றி ஒளி தரும் உன்னத பண்டிகை ‘தீபாவளி’ திருநாள். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள், சமணர்களும் தீபாவளியைக் கொண்டாடுவது இதன் கூடுதல் சிறப்பம்சம். அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆண்டு முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடியிருப்பது, நமது கலாச்சார பெருமையை பறை சாற்றுவதாக உள்ளது.இந்நிலையில் நம் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மனப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறோம். மகிழ்ச்சிகரமான இந்த நன்நாளில் தமிழக மக்களுக்கும், உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் இதய […]

November 2, 2013 admin
ஆரம்பம் – சினிமா விமர்சனம்! By உண்மைத்தமிழன் Running News

ஆரம்பம் – சினிமா விமர்சனம்! By உண்மைத்தமிழன்

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியை அவ்வளவு சுலபத்தில் நாம் மறந்துவிட முடியாது..! அஜ்மல் கசாப் என்ற இளைஞரை உள்ளடக்கிய 10 பாகிஸ்தானிய இளைஞர்கள் இரவு நேரத்தில் கடல் வழியாக மும்பைக்குள் கால் பதித்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளி ருத்ரதாண்டவம் ஆடிய நாள்..! அன்றைய மகாராஷ்டிரா அரசில் தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவராக இருந்தவர் ஹேமந்த் கர்கரே.. மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் மகாராஷ்டிராவில் வெடிக்கப்பட்ட பல குண்டுவெடிப்புச் சம்பவங்களை துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த திறமை மிக்கவர். […]

November 1, 2013 admin
என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்” Running News

என் முன்னிலையில் பள்ளம் தோண்டுங்க::தங்கம் நிச்சயம் கிடைக்கும்”

“புதையல் இருப்பது உறுதி. ஆனால் புதையல் எடுப்பதற்காக தோண்டும் இடத்திற்கு என்னை அனுமதிக்காமல் அதனை கண்டு பிடிக்க முடியாது அதிலும் ராணுவத்தால் தோண்டும் பணி நடத்த வேண்டும். அத்துடன் மீடியாக்கள் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.” சாமியார் சோபன் சர்க்கார் மறுபடியும் கூறியுள்ளார். உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு அடியில் 1,000 டன் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக, சோபன் சர்க்கார் என்ற பிரபல சாமியார் கனவு கண்டார். அவர் கொடுத்த […]

November 1, 2013 admin
இசைப்பிரியா  கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம் Running News

இசைப்பிரியா கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஆனால் இசைப் பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக சானல் -4 தொலைக்காட்சி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இசைபிரியாவை இலங்கை ராணுவத்தினர் அழைத்துச் செல்லும் காட்சியுடன் அவரை மிரட்டும் காட்சிகளும் உள்ளதால் பெரும் அதிர்ச்சி அலை கிளம்பியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவை இலங்கை […]

November 1, 2013 admin
ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் Running News

ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 63 பணி: இயக்குநர் -01 கல்வித்தகுதி: பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பத்து ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,600 – 39.100 + கிரேடு சம்பளம் ரூ.7,600 வயதுவரம்பு: 55-க்குள் […]

November 1, 2013 admin
ஒற்றை தலைவலிக்கான காரணிகளும்:தீர்வுகளும்! Running News

ஒற்றை தலைவலிக்கான காரணிகளும்:தீர்வுகளும்!

காலையில் எழுந்தவுடனே நமக்கு ஒரு சுறுசுறுப்பு இருந்தாதான் அன்றைய வேலைகள் எல்லாம் சிறப்பா முடியும். அப்படி இல்லாமால் ஒரு அயர்ச்சியுடன் எழுந்திருக்கணுமான்னு நினைச்சோம்னா அன்றைக்கு முழுக்கவே மந்தமா தான் இருக்கும். பொதுவா சிலர்கிட்ட ஏன் டல்லா இருக்கன்னு கேட்டா ஒரே தலைவலின்னு சொல்வாங்க.ஆன காலம் மாறிட்டு வருது அதனால இப்பல்லாம் தலைவலின்னு சொல்லமாட்டாங்க. ஒற்றைத் தலைவலின்னுதான் சொல்வாங்க. ஏன் அப்படி? பொதுவா டாக்டர்கள் சொல்வது தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே 90 சதவீதம் நோய்கள் வராது. அதோட […]

November 1, 2013 admin
குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே! Running News

குமரி மாவட்டத்திற்கு இன்று ஹேப்பி பர்த் டே!

தமிழ்நாடு எல்லைப் போராட்டம்’ என்பதும், பெயர் சூட்டுகின்ற வரலாறு என்பதும் சட்டமன்ற பதிவேடுகளோடு அடங்கிவிடவில்லை. அதற்கப்பாலும் அதுபற்றிய சில உண்மைகள் உண்டு.வடவேங்கடம் முதல் குமரி வரையில் தமிழ் பேசப்பட்டது. அதுதான் தமிழ்நாடு என்று தொல்காப்பியர் காலம் முதல் நிறைய ஆதாரங்கள் உண்டு.தமிழகத்தின் வரலாறு என்பது, மொழி வழியாக மாநிலம் அமைந்தது என்பது மிகப்பெரிய பின்னணியைக் கொண்டது. எல்லைப்போராட்டம் நடந்தபோது அன்றைக்கு ம.பொ.சி மட்டுமே குரல் கொடுத்தார். வடக்கெல்லைப் போராட்டத்தை அவருடைய தமிழரசுக் கழகம் முன்னின்று நடத்தியது. அவருடன், […]

November 1, 2013 admin
படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!. Running News

படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.

இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது.”படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்’ என்று மோடி பேசியிருப்பது இன்றைய அரசியல் சூட்டில் புதிதாக மிளிர்கிறதே தவிர, இது 1950 களிலேயே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா உள்பட பலர் கூறிய கருத்துதான். அதேயே இப்போது நரேந்திர மோடியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய அரசியல் மேடையில் அது மதிப்பூட்டல் பெறுகிறது. இந்த வார்த்தைகளை நரேந்திர மோடி வேறு ஏதேனும் ஒரு மேடையில் […]

November 1, 2013 admin
மங்கள்யான் செயற்கைக்கோள் : ஒத்திகை துவங்கியது! Running News

மங்கள்யான் செயற்கைக்கோள் : ஒத்திகை துவங்கியது!

செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி– சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை வருகிற 5–ந் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஏவுகிறது.அப்போது அனுப்புவதற்கான ஒத்திகைகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று துவங்கியுள்ளன. சத்தீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வரும் இந்த ஒத்திகையில் ஏராளமான விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். அங்குள்ள முதலாவது […]

October 31, 2013 admin
உடனடி செய்திகள்