ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரப்பர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
nov 1 - vazhikatti rubber
மொத்த காலியிடங்கள்: 63

பணி
: இயக்குநர் -01

கல்வித்தகுதி: பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் பத்து ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,600 – 39.100 + கிரேடு சம்பளம் ரூ.7,600

வயதுவரம்பு: 55-க்குள் இருத்தல் வேண்டும்.

பணி: உதவி கணக்காளர் -02

சம்பளம்: ரூ.9,300 – 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4600

வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: எம்.காம் முடித்து சம்மந்தப்பட்ட துறையில் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: புள்ளியியல் உதவியாளர் – 01

சம்பளம்: ரூ.9,300 -34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200

கல்வித்தகுதி: புள்ளியியல், விவசாய புள்ளியில், பொருளாதாரம் உள்ளிட்ட எதாவதொரு துறையில் பட்டத்தும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientific உதவியாளர் – 03

சம்பளம்: ரூ.5200 – 20200 + கிரேடு சம்பளம் ரூ.2,900

வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: தாவரவியல், வேதியியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஃபார்ம் உதவியாளர் – 07

சம்பளம்: ரூ.5200-20200 + கிரேடு சம்பளம் ரூ.2400

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் விவசாயத்துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: இளநிலை உதவியாளர் – 27

சம்பளம்: ரூ.5200 – 20200 + கிரேடு சம்பளம் ரூ.1900

வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளுக்கு குறையாமல் தட்டச்சு செய்யும் திறனும், கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் குறையாமலும் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rubberboard.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
: 12.11.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rubberboard.org.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

error: Content is protected !!