32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11701 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1143 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1143)
புன்னகை – நல்லன எல்லாம் தரும்.! Running News

புன்னகை – நல்லன எல்லாம் தரும்.!

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது. ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட “மோனாலிசா’ ஓவியம் புன்னகையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஓவியம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பெண்ணை “புன்னகை […]

November 5, 2013 admin
மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகள்! Running News

மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகள்!

நலவாழ்வில் ஒரு தலையாய பிரச்னை, எதிர்ப்பு மருந்துகளுக்கு (ஆண்டிபயாட்டிக்) கட்டுப்படாத தொற்றுநோய்ப் பெருக்கத்தால் ஏற்படும் உயிர் பலிகள் உலகத்தில் ஆண்டுதோறும் உயர்ந்து செல்வது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 30,000 மனிதர்கள் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம், எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் புதிய ஆய்வுகளோ, புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய முதலீடுகளோ அவ்வளவாக இல்லை. ஐ.நா. உலக நலவாழ்வு அமைப்பு ஏற்கெனவே இதுகுறித்த எச்சரிக்கையில், “கூட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளால்கூட வெல்ல முடியாத சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் […]

November 5, 2013 admin
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி வாய்ப்பு Running News

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி வாய்ப்பு

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன் (இஸ்ரோ)-வில் காலியாக டெக்னீக்கல் உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: டெக்னிக்கல் உடவியாளர் காலியிடங்கள்: 13 கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும். பணி: டெக்னீசியன் கல்வித்தகுதி: பிட்டர், பிளம்பர், எலக்ட்ரீசியன், டர்னர், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 21-க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி […]

November 5, 2013 admin
இலங்கை அருகே புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை பெய்யும்! Running News

இலங்கை அருகே புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் கனமழை பெய்யும்!

இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து 2 நாள்களுக்கு பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: இலங்கை அருகே கடந்த 4 நாள்களுக்கு முன் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து குமரிக்கடலுக்கு சென்றது. அது திங்கள்கிழமை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு […]

November 5, 2013 admin
உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம! Running News

உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம!

தனது மக்களுக்குத் தேவையான அளவு உணவை வழங்காத நாடு எனப் பெயர் பெற்றது இந்தியா. எஃப்.ஏ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாய இயக்கம் தனது 2006-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இந்தியாவில் 21 கோடியே 20 லட்சம் மக்கள் தரமான உணவை பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் பல வருடங்களாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் நடைமுறை இருந்தபோதிலும், அந்த திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால், பல முறைகேடுகள் […]

November 4, 2013 admin
டிகிரி முடித்தவர்களுக்கு கத்தோலிக் சிரியன் வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு Running News

டிகிரி முடித்தவர்களுக்கு கத்தோலிக் சிரியன் வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு

இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை வங்கிகளில் கத்தோலிக் சிரியன் வங்கி முக்கியமான ஒன்று. இது சுதேசி இயக்க காலத்திலேயே கேரளாவின் திருச்சூரை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டது. தற்போது இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருக்கிறது.இந்த வங்கியில் புரொபேஷனரி துணை மேலாளர்கள் பதவியில் உள்ள 300 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. வயது : கத்தோலிக் சிரியன் வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.09.2013 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தகுதிகள் […]

November 4, 2013 admin
மோடி பெயரில் இலவச மிக்சர் பாக்கெட் – அமெரிக்காவில் சப்ளை Running News

மோடி பெயரில் இலவச மிக்சர் பாக்கெட் – அமெரிக்காவில் சப்ளை

அமெரிக்காவில் தீபாவளிக்கு இனிப்பு பேடா, குலாப்ஜாமூன் வாங்கியவர்களுக்கு இலவசமாக ஒரு இனிப்பு, காரம் கலந்த நறுமண சுவையுடன் மிக்சர் பாக்கெட் தரப்பட்டது. அதன் பெயர் என்ன தெரியுமா? மோடி மேஜிக் ‘ நம்கீன் மிக்ஸ் அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சி உட்பட பல இடங்களில் உள்ள இனிப்பு கடை ராஜ்போக் ஸ்வீட்ஸ். இதை நடத்தி வருபவர் குஜராத்தில் இருந்து அமெரிக்கா போன அரவிந்த் படேல் குடும்பம். இவர் இந்த பிசினசை பரப்பி பல கோடிகளை அள்ளி வருகிறார். இவர் […]

November 4, 2013 admin
“தமிழ் சினிமாவும் டபுள் ஆக்ஷன் படங்களும்” Running News

“தமிழ் சினிமாவும் டபுள் ஆக்ஷன் படங்களும்”

தனக்கு பிடித்த நடிகர் இரட்டை வேடம் ஏற்று நடிக்கும் பொழுது ரசிகர்களுக்கு எப்போதும் டபுள் குஷி தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, சிவகுமார், ரஜினி , கமல், சரத்குமார்,விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா இப்படி பல நடிகர்களும் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளனர் . இந்த படங்களும் தாறுமாறாக வெற்றிப் பெற்ற வராலாறு உண்டு. சரி தமிழ் சினிமாவின் டபுள் ஆக்ஷன் படங்கள் என்றால் பல படங்களை கூறலாம். ஆனால் , இப்படங்களின் துவக்கும் எது?? வாங்க ரீவைண்ட் […]

November 3, 2013 admin
ஆன்லைனில் கன்னிதன்மையை  விற்ற இளம்பெண் – ரஷ்யா அதிர்ச்சி Running News

ஆன்லைனில் கன்னிதன்மையை விற்ற இளம்பெண் – ரஷ்யா அதிர்ச்சி

ரஷ்யாவை சேர்ந்த சாதுனிகா என்ற பெண், பொருட்களை ஏலம் விடும் வலை தளம் ஒன்றில் ‘புதியது, முதல் முறையாக விற்பனைக்கானது’ என்ற பிரிவின் கீழ் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே நான் எனது கன்னித்தன்மையை விற்பனை செய்ய தயாராக உள்ளேன். அதிக ஏலத்தில் எடுப்பவர்களுக்கு கன்னித் தன்மையை தர தயாராக இருக்கிறேன். இதற்கான மருத்துவ ஆவணங்களையும் பணத்தை நேரில் கொடுக்கும் போது காட்டுவேன்.ஏலத்தில் எடுப்பவர் என்னை பிரத்மோஸ்னியா சதுக்கத்தில் உள்ள ஒரு […]

November 3, 2013 admin
கருத்து கணிப்புகளுக்கு தடை : தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம்! Running News

கருத்து கணிப்புகளுக்கு தடை : தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம்!

கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டதை மீண்டும் உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளார் மிட்டல் எழுதியுள்ள கடிதத்தில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கருத்துக் கணிப்பு விவகாரத்தில் உள்ள தடையை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசம், […]

November 3, 2013 admin
உடனடி செய்திகள்