32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1007 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1007)
பேமிலி டாக்டரை கண்டு பிடியுங்கள்! Running News

பேமிலி டாக்டரை கண்டு பிடியுங்கள்!

பழைய கருப்பு – வெள்ளைப் படங்களில் நீங்கள் அவர்களைப் பார்த்து இருக்கலாம். கையில் பெட்டி யுடன் வீட்டுக்கு வந்து செல்லும் டாக்டர்கள். தாத்தா முதல் பேரக்குழந்தை வரை ஒரு வீட்டின் அத்தனை பேரின் உடல்நிலையையும் விரல் நுனியில் வைத்திருந்தவர்கள். வயிற்று வலி என்று போனால், சிரித்துக்கொண்டே ”வீட்டுல பலகாரம் தூள் பறக்குதோ… வயிறு கல்லாட்டம் இருக்கு. ரெண்டு வேளை பட்டினி போடு. சரியாயிடும்” என்று பட்டினியையும் வைத்தியமாகச் சொல்லிக்கொடுத்தவர்கள். ”எப்பவும் வேலை, வேலைனு போய்க்கிட்டு இருந்தீன்னா, உடம்பை […]

May 5, 2014 admin
360 டிகிரி HD கேமரா வெறும் 24,000 ரூபாய்க்கு அறிமுகம்! Running News

360 டிகிரி HD கேமரா வெறும் 24,000 ரூபாய்க்கு அறிமுகம்!

வீடியோ பதிவு செய்யும் கேமராக்கள் பொதுவாக குறிப்பிட்ட கோணங்களில் காணும் காட்சிகளை மட்டுமே பதிவு செய்யக் கூடியனவாக இருக்கின்றன. இந்நிலையில் இப்போது வந்துள்ள புது கேமரா கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 360 டிகிரி கோணத்தில் படம் எடுக்கும் அதிசயத்தை நிகழ்த்த வெறும் 24 ஆயிரம்தான் செலவாகும் கோப்ரோ என்னும் கேமரா நிறுவனம் தயாரித்துள்ள கையடைக்கமாக 720 டிபி ஸ்டான்டர்ட் ஹெச் டி கேமராவான இதன் மூலம் நீங்கள் 360 டிகிரி கோணத்தில் படம் தொடர்ந்து பதிவாகி கொண்டே […]

May 5, 2014 admin
காஷ்மீரின் தலைநகரமாகிறது ஸ்ரீநகர்! Running News

காஷ்மீரின் தலைநகரமாகிறது ஸ்ரீநகர்!

காஷ்மீரில் 6 மாத கோடைகால தலைநகராக நாளை முதல் ஸ்ரீநகர் மாறுகிறது.இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்த அரசு அதிகாரிகள் ஸ்ரீநகருக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்கள் ஜம்மு-காஷ்மீரின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் அறிவித்தனர்.இப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தலைநகரத்தை மாற்றும் நிகழ்வு ’தர்பார் மாற்றம்’ என்று அழைக்கப்பட்டது. நேற்று வரை குளிர்கால தலைநகர் ஜம்முவில் இயங்கி […]

May 4, 2014 admin
தற்கொலை செய்பவர் கடிதத்தில் குறிப்பிடும் நபர்களை குற்றம்சாட்ட முடியாது!- ஹைகோர்ட் Running News

தற்கொலை செய்பவர் கடிதத்தில் குறிப்பிடும் நபர்களை குற்றம்சாட்ட முடியாது!- ஹைகோர்ட்

பல்வேறு சினிமாக்களிலும் டிவித் தொடர்களிலும் காதலி அல்லது மனைவி சண்டையின் போது “உன் பெயரை எழுதி வைத்து விட்டு செத்து விடுவேன்” என்று மிரட்டுவதைப் பார்த்திருக்கலாம்.இனி அது மிரட்டடல்களெல்லாம் செல்லுபடியாகாது. காரணம்,”தற்கொலை செய்து கொள்பவர்கள் எழுதிய கடைசி கடிதத்தில்,தற்கொலைக்கு காரணமாக ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இருப்பதாலேயே அவர் தான் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தார் என்று குற்றம் சாட்டிவிடக் கூடாது” என்று ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பவித்ரா 9–ம் வகுப்பு படித்து […]

May 4, 2014 admin
‘லிங்கா’ ஷூட்டிங்கை கர்நாடகாவில் நடத்த கடும் எதிர்ப்பு!அப்செட்டில் ரஜினி & டீம் Running News

‘லிங்கா’ ஷூட்டிங்கை கர்நாடகாவில் நடத்த கடும் எதிர்ப்பு!அப்செட்டில் ரஜினி & டீம்

”தன்னை கன்னடராக சொல்லிக்கொள்ளும் ரஜினி, இதுவரை கர்நாடக மக்களுக்காக ஒன்றுமே செய்ததில்லை. அவர் எங்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவையும் ஆறு கோடி கன்னடர்களையும் கடுமையாக‌ தாக்கி பேசியிருக்கிறார். அதுமட்டு மில்லாமல் காவிரி, ஒகேனேக்கல் விவகாரங்களின் போதெல்லாம் கர்நாடகாவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டு தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். இப்படி கன்னட மக்களுக்கும் கர்நாடகாவிற்கும் எதிராக கருத்து தெரிவித்த ரஜினியை கடுமையாகக் கண்டிக்கிறோம்.அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மைசூர், மண்டியாவில் […]

May 4, 2014 admin
டுவிட்டர் மக்களின் ஆதரவை இழந்து வருவதால் பல கோடி நஷ்டமாம்! Running News

டுவிட்டர் மக்களின் ஆதரவை இழந்து வருவதால் பல கோடி நஷ்டமாம்!

சமூக இணையதளங்களில் முன்னிலையான வளைதளமான டுவிட்டரில் நமக்குத் தெரிந்த எல்லா பிரபலங்களும் கணக்கு தொடங்கி குறுஞ்செய்தியை வழங்கி வந்தாலும் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ. 750 கோடி நஷ்டமடைந்துள்ளதாக ஒரு தகவலும் 2013ன் கடைசி காலாண்டில் டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கு ரூ.3000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகும் என்று இன்னொரு தகவலும் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் டிவிட்டரைப் பயன்படுத்துவோர் இந்த 3 மாத காலத்தில் 25 கோடி பேராக அதிகரித்த நிலையில், அதன் […]

May 4, 2014 admin
தமிழகம்-புதுவையில் கன மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல் Running News

தமிழகம்-புதுவையில் கன மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

”தென்மேற்கு வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தமிழகத்துக்கு வெகு அருகில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.கோடையில் கடுமையான வெயிலால் மக்கள் அவதிப்படும் நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.” என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார். ஏற்கனவே வெப்பச் சலனம் காரணமாக கடந்த 24 மணி […]

May 4, 2014 admin
அக்னி ஆரம்பிச்சாச்சு? இப்போது எதை செய்ய /சாப்பிடக் கூடாது தெரியுமா? Running News

அக்னி ஆரம்பிச்சாச்சு? இப்போது எதை செய்ய /சாப்பிடக் கூடாது தெரியுமா?

மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று(4–ந் தேதி) தொடங்கி வருகிற 28–ந் தேதி வரை 24 நாட்கள் நீடிக்கிறது.கோடை காலம் தொடங்கி விட்டாலே அனைவரும் வெயில் உஷ்ணத்தினால் அவதிப்பட்டு வரும் நிலையில் அக்னி நட்சத்திர காலங்களில் வெளியில் செல்வோர் வீட்டுக்கு வரும் வரை கடும் அவதிப்படுவது வழக்கம். அதிலும் கோடை வெயிலின் தாக்கம் உடலை மட்டும் பாதிப்பதில்லை. தோலையும் பெரிய அளவில் பாதிக்கிறது.இதனால் பகலில் வெளியில் செல்வதையே பலர் தவிர்ப்பதுண்டு. ஆனால் […]

May 4, 2014 admin
புல்லட் பாபா கோயில் – ராஜஸ்தானில் வினோதம் Running News

புல்லட் பாபா கோயில் – ராஜஸ்தானில் வினோதம்

இந்தியாவை நோக்கி வெளிநாட்டவரை இழுக்கச்செய்வதிலும், அவர்கள் நம் நாட்டை குறித்து பெருமையாக கருதுவதற்கும் இந்தியாவில் உள்ள கோயில்களும், அவற்றின் கட்டிடக் கலைகளும் பெரிதும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எண்ணற்ற கோயில்கள் ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றும் நம் கலாச்சாரத்துக்கும், கலைக்கும் எடுத்துக்காட்டாக நின்றுகொண்டிருக்கின்றன. அப்படி கட்டிடக்கலைக்கு பெயர்போன கோயில்கள் இருக்கும் இதே மண்ணில் சில வினோதமான கோயில்களும் இருக்கின்றன.அந்த வரிசையில் நம் இந்தியாவில் சோனியா மற்றும் மோடிக்கு கோயில் கட்டியதெல்லாம் தெரிந்த நிலையில் மோட்டார் […]

May 3, 2014 admin
கொடநாட்டில் போய் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்பதா? -கருணாநிதி காட்டம்! Running News

கொடநாட்டில் போய் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்பதா? -கருணாநிதி காட்டம்!

நான் ஏதோ சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, எதையும் தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் கருத்துகளைக் கூறுவதாக தனது அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சாலை வழியாகவே வேனிலே சென்று மக்களை யெல்லாம் நேரில் சந்தித்து வந்த நான் சுகவாசியாம்! சொல்வது யார் தெரியுமா?ஒவ்வொரு ஊரிலும் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து ஹெலிகாப்டர் தளம் அமைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா விமானத்திலும், கெலிகாப்டரிலும் பயணம் செய்து, வேட்பாளர்களை வாக்கு கேட்கக் கூட […]

May 3, 2014 admin
உடனடி செய்திகள்