32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 91 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 91)
பன்னாட்டுக் குடும்ப நாள்! Exclusive

பன்னாட்டுக் குடும்ப நாள்!

நவீனமயமாகிக் கொண்டே இந்த உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் ‘விரிசல்’ உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் குடும்ப கட்டமைப்புகளை பின்பற்றுவதில் முதன்மையான இடம் வகிப்பது மனிதன். குழுக்களாக வாழத் தொடங்கி இன்று குடும்பம் என்ற அமைப்பில் தொடர்கிறது. குடுமபம் […]

May 15, 2024 admin
இண்டர்நேஷனல் நர்ஸ் டே! Exclusive

இண்டர்நேஷனல் நர்ஸ் டே!

சர்வதேசமெங்கும் கோடிக்கணக்கான செவிலியர்கள் இருக்கிறார்கள். நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு பக்கபலமாக பணியாற்றும், இவர்களது சேவை போற்றத்தக்கது. இவர்களது சவாலான பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் […]

May 12, 2024 admin
ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் ஜெயந்தி திருநாள்! Exclusive

ஸ்ரீ அன்னமாச்சார்யாவின் ஜெயந்தி திருநாள்!

ஆந்திராவில் கடப்பா மாவட்டத்திலுள்ள தளபாகம் என்னும் கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். இவர் பசியால் வாடிய போது, பத்மாவதி தாயாரே நேரில் காட்சியளித்து உணவளித்தாராம். அதற்கு நன்றிக்கடனாக தன் 16வது வயது முதல் 80 வயது வரை திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் 32 ஆயிரம் பாடல்களை பாடி மக்களிடையே பக்தியை பரப்பினார். தெலுங்கில் உள்ள இவரது பாடல்கள் செப்பு தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.தென்னிந்திய இசையின் மரபுகள் பல அன்னமாச்சாரியாரால்தான் தோற்றுவிக்கப்பட்டது. ஒரு பாடலை […]

May 9, 2024 admin
உலக கழுதை தினமின்று Exclusive

உலக கழுதை தினமின்று

இன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு, மாடு, குதிரை, நாய், பூனையைபோல, சில வீடுகளில் கழுதையும் வீட்டு விலங்காக இருந்தது. குறிப்பாக, சலவைத் தொழிலாளர்களின் வீடுகளில் 5-க்கும் மேற்பட்ட கழுதைகள் காணப்படும். துணிகளை சலவை செய்ய ஆற்றுக்கு கொண்டுசெல்லவும், வெளுத்த துணிகளை திரும்ப எடுத்து வரவும் கழுதைகளைப் பயன்படுத்தினர். மொத்தத்தில் தமிழர்கள் வளர்க்கும் கால்நடைகளில் கழுதைக்கு முக்கியப் பங்குண்டு. சங்க இலக்கியங்களில் இவ்விலங்கு […]

May 8, 2024 admin
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்! Exclusive

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்!

மனிதநேய முத்திரையோடு உலகளாவிய ரீதியில் பல அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவதுதான் செஞ்சிலுவைச் சங்கம். ஒரு மனிதனிடம் நாடு, இனம், மொழி, மதம், ஜாதி, நிறம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உயிர் என்பது சமம். அப்படிப்பட்ட உயிர்களை காக்க உருவாக்கப்பட்ட இயக்கமே செஞ்சிலுவை சங்கம். ஒரு நாடு இன்னொரு நாடுடன் போர் செய்யும் போது அதில் ஏற்படும் இழப்புகளை மீட்க வேண்டும். முதலில் உயிர்களை மீட்டால் தான் அவர்களுக்கு தேவையான உடமைகளை தர […]

May 8, 2024 admin
இந்தியக் கல்விச் சூழல் குறித்து கவலைக் கொண்ட தாகூர் பிறந்த தின பகிர்வு! Exclusive

இந்தியக் கல்விச் சூழல் குறித்து கவலைக் கொண்ட தாகூர் பிறந்த தின பகிர்வு!

சர்வதேச அளவில் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொடுத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள் இன்று. கவியரசர் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வங்க கவி ரவீந்தரநாத் தாகூர் ஆவார். ஆங்கிலத்தில் புலமை கொண்டவரான ரவீந்திராத் தாகூர் 1861 ஆம் வருடம் இதே மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 13 பேர். வீட்டின் கடைசிப் பிள்ளையாக பிறந்திருந்தாலும் […]

May 7, 2024 admin
குட்டீஸ்கள் கல்வி கற்க புது ரூட் போட்டு ஜெயித்த மரியா மான்டிசோரி! Exclusive

குட்டீஸ்கள் கல்வி கற்க புது ரூட் போட்டு ஜெயித்த மரியா மான்டிசோரி!

மரியா மான்டிசோரி,. இத்தாலியில் உள்ள மார்ச்சே எனும் இடத்தில், 1870 ஆக., 31ம் தேதி பிறந்தவர், அந்நாட்டிலேயே மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் இவர் தான்.ரோம் நகரில் இவர் நடத்திய சிறார் பள்ளியில் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கினார். இதற்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. குட்டீஸை பெரிதும் கவர்ந்து விட்ட இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள், சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். […]

May 6, 2024 admin
கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்- பிறந்த தின பகிர்வு! Exclusive

கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்- பிறந்த தின பகிர்வு!

வரலாற்றில் சிலர் இடம் பிடிக்கிறார்கள்;சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். உலக வரலாறு நூறு பக்கங்களில் எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் சிலபல பக்கங்கள் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பெருவாரியான உழைப்பாளிகள் தங்களின் வாழ்க்கையை முதலாளிகளின் வர்க்கத்திற்காகவே தொலைத்திருந்தார்கள். சோகம் என்னவெனில், அவர்கள் தொலைத்தது அவர்களுக்கே தெரியவில்லை. ஒரு உழைக்கும் […]

May 5, 2024 admin
பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் தினம்! Exclusive

பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் தினம்!

ஆண்டு தோறும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் நாள் தேசிய தீயணைப்பு படையினர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை தீ விபத்து உள்ளிட்ட இடர்பாடுகளில் இருந்தும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே மாதம் 4ம் தேதி சர்வதேச […]

May 4, 2024 admin
உலக பத்திரிகை சுதந்திர தினம்! Exclusive

உலக பத்திரிகை சுதந்திர தினம்!

கடந்த 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் கொலம்பியப் பத்திரிகையாளரான கிலெர்மோ கானோ இசாசா அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்து உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் மே 3-ஆம் தேதி பத்திரிகை சுதந்திர நாள் […]

May 3, 2024 admin
உடனடி செய்திகள்