32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

மறக்க முடியுமா

1496 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 84 / 150
செய்திகள் வரிசை (பக்கம் 84)
சகலகலா வல்லவன் ரிலீஸான தினமின்று🫶 மறக்க முடியுமா

சகலகலா வல்லவன் ரிலீஸான தினமின்று🫶

கொரோனா முடக்கியக் காலக் கட்டத்தில் கோடம்பாக்க தத்துவஞானி விஜய் சேதுபதி ஆன்லைனில் கமலை பேட்டிக் கண்ட போது கமல் சொன்னது ‘சகலகலா வல்லவன்‘ படத்தை எல்லோரும் திட்டுவாய்ங்க. பாலுமகேந்திரா கூட திட்டி இருக்கார். அப்படி ஃப்ரண்ட்ஸ் அம்புட்டு பேரும் திட்டியதில் எனக்கு பப்பி ஷேமா புடுச்சு . அதை சமாளிக்க நானும் சேர்ந்து படத்தைத் திட்டியிருக்கிறேன். அப்புறம் யோசித்துப் பார்த்தேன். நான் அந்த வழியைத் தொடாமல் போயிருந்தால் என்னால் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்திருக்க முடியாது. ஏன்னா, […]

August 14, 2024 admin
வாழ்க வையகம்…வாழ்க வளமுடன் என்றுரைத்த வேதாத்திரி மகரிஷி! Exclusive

வாழ்க வையகம்…வாழ்க வளமுடன் என்றுரைத்த வேதாத்திரி மகரிஷி!

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் (1911) நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் வேதாத்திரி மகரிஷி. . தாயிடம் பக்திக் கதைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். வறுமையால் 3-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தறி நெய்யத் தொடங்கினார். 18 வயதில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அப்போது அறிமுகமான ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணா ராவிடம் தியானம், யோகா கற்றார். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். சுய […]

August 14, 2024 admin
உலக இடதுகை பழக்கமுடையோர் தினம்! Exclusive

உலக இடதுகை பழக்கமுடையோர் தினம்!

இடது கை பழக்கம் உள்ளவர்களின் வேறுபாடுகள் மற்றும் தனித்துவத்தை அங்கீகரிக்க சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 கொண்டாடப்படுகிறது.உலகில் பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடது கை பழக்கம் உள்ளவர்களை அங்கீகரிப்பதற்காக இது ஒரு வழியாகும். உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10-12 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவருகிறது. ஆகவே, இடது கைப்பழக்கத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,இவர்கள் பயன்பாட்டுக்கு தக்கவாறு பொருட்களை […]

August 13, 2024 admin
உலக இளைஞர் தினம்! Exclusive

உலக இளைஞர் தினம்!

அனைத்துலக இளையோர் நாள் (International Youth Day) ஆகஸ்ட் 12ம் நாளில் இளையோருக்காகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாள் இளைஞர்களின் அனைத்துலக மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் இந்நாளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை அந்தந்த நாடுகளின் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடத்தப்படுவது வழக்கம். ஐக்கிய நாடுகள் அவையினால் 1999 இல் இந்நாள் […]

August 12, 2024 admin
தேசிய நூலகர் தினம்! Exclusive

தேசிய நூலகர் தினம்!

இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர். ரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்டு 12-ம் தேதி தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் நூலகரான இவர் இங்கிலாந்து சென்று நூலக அறிவியலில் புதுமையைக் கற்றார்.அக்காலத்தில் தமிழக நூலகங்களில் புத்தகங்களை பராமரிக்கும் ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இல்லை. இந்நிலையில், புத்தகங்களைப் பொருள் வாரியாக அடுக்குவதற்காக “கோலன் பகுப்பு முறை” என்ற முறையை ரங்கநாதன் கண்டுபிடித்தார். இந்த முறை நூலகங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. நூலகவியலுக்கு இவர் ஆற்றிய […]

August 12, 2024 admin
சர்வதேச யானைகள் நாள்! Exclusive

சர்வதேச யானைகள் நாள்!

யானைகளில் இருந்து மருவிய விநாயகரை நாம் வணங்குவது போல் அல்லாமல், யானைகளின் உருவச் சிலைகளையே மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் காணி பழங்குடியினர் வணங்குவதை பார்த்திருக்கலாம். இந்த உலகத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக இருக்க யானையின் பங்கு இன்றியமையாதது. ஆனால் உலகில் வாழ்ந்த 24 வகை யானைகளில், 22 வகை இனங்கள் அழிந்து தற்போது உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. […]

August 12, 2024 admin
‘மீண்டும் பிறப்பேன்’…- வீரத்தியாகி குதிராம் போஸ்! Exclusive

‘மீண்டும் பிறப்பேன்’…- வீரத்தியாகி குதிராம் போஸ்!

1908 ஆகஸ்ட் 10….முசாஃபர்பூர் சிறைச்சாலை…தனிக் கொட்டடியில் அந்தக் கல்லூரி மாணவன் குதிராம் போஸ்… அப்போது அவனுக்கு வயது 17 தான்… தூக்குக் கயிற்றில் தொங்கப் போகிறான். ஆனால் எந்தக் கவலையுமின்றி அவன் ஒரு புத்தகத்தைக் கவனத்துடன் படித்துக் கொண்டிருக்கிறான்… இந்த மாணவன் எதற்காக இந்தச் சிறையில் வாழ்கிறான்? எதற்காக அவனுக்குத் தூக்குத் தண்டனை? வங்காளத்தில் மிதனப்பூர் மாவட்டத்தில் ‘ஹபிப்பூர்’ என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் அந்த மாணவன் பிறந்தான். அவனுக்கு 13 வயது நடந்து கொண்டிருந்தபோது வங்கத்தில் சுதந்திரப் […]

August 11, 2024 admin
சர்வதேச சிங்கம் தினம்! Exclusive

சர்வதேச சிங்கம் தினம்!

காட்டின் ராஜா என்றழைக்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கை வன அழிப்பு, வேட்டை உள்ளிட்ட காரணங்களால் வெகுவாக குறைந்து வருகிறது. அவற்றை பாதுகாக்கும் நோக்குடனும், சிங்கங்களால் வனத்தின் உயிர் சங்கிலி எப்படி இயங்குகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் ஆகஸ்டு 10ம் தேதி உலக சிங்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகில், 15 நாடுகள், சிங்கத்தை தேசிய விலங்காக பெருமை கொண்டாடுகின்றன. வனவிலங்குகளில் அச்சமூட்டக்கூடிய ஒரு படைப்பாக விளங்குகிற சிங்கத்திற்கு மரியாதையை செலுத்தும் இந்த நிகழ்வினை, ‘பிக் […]

August 10, 2024 admin
“வாட்டர் கேட்” 💥ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று👀 Exclusive

“வாட்டர் கேட்” 💥ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று👀

அமெரிக்காவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளே. ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55_வது வயதில் 1968_ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972_ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) தலைமையகம் இயங்கும் “வாட்டர் கேட்” மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் […]

August 8, 2024 admin
🦉சர்வதேச பூனைகள் தினமின்று!🐈 Exclusive

🦉சர்வதேச பூனைகள் தினமின்று!🐈

“யானைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்” என்பது ஒரு தமிழ் பழமொழி. அதற்கேற்ப, பூனைகளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதியை உலக பூனைகள் தினமாக உலகெங்கும் கொண்டாடுகிறார்கள். கடந்த 2002-ம் ஆண்டு முதல் விலங்குகள் நலனுக்கான பன்னாட்டு நிதியத்தால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் பிப்ரவரி 17-ந் தேதியும், ரஷியாவில் மார்ச் 1-ந் தேதியும் பூனை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் பூனைகளை வீட்டில் […]

August 8, 2024 admin
உடனடி செய்திகள்