32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

வழிகாட்டி

1441 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 34 / 145
செய்திகள் வரிசை (பக்கம் 34)
செபியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி! Exclusive

செபியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விபரம் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் பொது 62, சட்டம் 5, ஐ.டி., 24, எலக்ட்ரிக்கல் 2, ரிசர்ச் 2, அலுவலக மொழி 2 என மொத்தம் 97 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது: 31.3.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, […]

June 25, 2024 admin
நீட் முறைகேடு:புகாரை விசாரிக்க 7 பேர் கொண்டக்குழு! Exclusive

நீட் முறைகேடு:புகாரை விசாரிக்க 7 பேர் கொண்டக்குழு!

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நீட் தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்தது. சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா, மத்திய அரசின் கல்வித்துறை இணை செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். நடப்பாண்டில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை […]

June 22, 2024 admin
கால்நடை பல்கலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! Exclusive

கால்நடை பல்கலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூன் 21(நாளை) கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 28-ம் தேதி அவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 19-ம் தேதி வரை கால்நடை மருத்துவ இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 13,978 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. adm.tanuvas.ac.in என்ற வாயிலாக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்https://adm.tanuvas.ac.in/ பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கியது. […]

June 20, 2024 admin
உயர்கல்வி இலக்கில் அமெரிக்காவே முதலிடம்! Exclusive

உயர்கல்வி இலக்கில் அமெரிக்காவே முதலிடம்!

உயர் கல்விக்காக அமெரிக்காவை தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த மாணவர் விசாக்களை விட அதிக மாணவர் விசாக்களை 2023-ம் ஆண்டில் இந்தியாவுக்கான‌ அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது.2021 மற்றும் 2023-க்கு இடையில் மற்ற அனைத்து வகை விசாக்களுக்கான தேவை 400 சதவீத உயர்வைச் சந்தித்தபோதும், மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அவர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கும் அமெரிக்க அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை முன்னெப்போதும் கண்டிராத […]

June 14, 2024 admin
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு1 Exclusive

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு1

வங்கிகளில் உள்ள உதவி அலுவலர் பணியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்டுள்ளது. இதற்கு 07.06.2024 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு 27ஆம்  தேதிவரை விண்ணபிக்கக் கேட்டுள்ளது. வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பின் விவரத்தை காணலாம். பணி விவரம் அதிகாரி – குரூப் “A” Officers (Scale-I, II & III) உதவி அலுவலர் ( […]

June 13, 2024 admin
இந்திய பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை! Exclusive

இந்திய பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை!

நம் நாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்த்துக் கொள்ள பல்கலை மானியக் குழு(யுஜிசி) அனுமதி வழங்கி உள்ளது. உலகளவில் பின்பற்றப்படும் நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ’இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், இனி ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை வழங்க அனுமதிக்கப்படும்’ என்று பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) தலைவர் ஜெகதேஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் `கூறியதாவது: இனி உயர்கல்வி நிறுவனங்கள் […]

June 11, 2024 admin
உலகளவிலான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – இந்தியாவின் 46 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்தது! Exclusive

உலகளவிலான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – இந்தியாவின் 46 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்தது!

குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் எனப்படும் க்யூ எஸ், என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கல்வி நிறுவங்களின் சமூக, சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் அதன் நிர்வாகத் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலும், உலக சவால்களை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் வாயிலாகவும் இந்த தரவரிசை பட்டியல் உருவாக்கப்படுகிறது.அந்த வகையில்,உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. ஆகியவை இடம் பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி., 227வது […]

June 7, 2024 admin
ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி! Exclusive

ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி!

ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டு கொடுக்கும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், பயணச் சீட்டு அலுவலகங்கள், தானியங்கி இயந்திரங்கள், மொபைல் போன் செயலிகள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன. தானியங்கி இயந்திரங்கள் மூலம் பயண சீட்டுகள் பெற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இதுவரை இந்த உதவியாளர்களாக ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே செயல்படும் படி இருந்தது. தற்போது பொதுமக்களும் […]

June 4, 2024 admin
வெயில் வாட்டுது:பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! Exclusive

வெயில் வாட்டுது:பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!

தமிழ்நாடு அரசு உள்ளிட்ட எல்லா பள்ளிகளுக்கும் வழக்கமாக மே மாதத்தில் கோடை விடுமுறை அளித்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மே மாதம் தொடக்கத்திலிருந்து வாட்டி வதைத்த வெப்ப அலையால் பள்ளித் திறப்பு தள்ளிப்போகலாம் என சொல்லப் பட்டது. ஆனால், தமிழகத்தில் மே இரண்டாம் வாரத்துக்குப் பின்னர் வானிலை கொஞ்சம் […]

May 31, 2024 admin
சென்னை ஐசிஎஃப்பில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு! Exclusive

சென்னை ஐசிஎஃப்பில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு!

தமிழக தலைநகர் சென்னையிலுள்ள இரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory, Chennai) 10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்குட்பட்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.டி.ஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களூம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியிட விவரங்கள்: கார்பென்டர் (Carpenter) எலக்ட்ரிசியன் (Electrician) ஃபிட்டர் (Fitter) மெக்கானிஸ்ட் (Machinist) பெயிண்ட்டர் (Painter) வெல்டர் (Welder) […]

May 26, 2024 admin
உடனடி செய்திகள்