32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 206 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 206)
உப்பளத் தொழிலாளர்களின் உப்புக்கரிக்கும் வாழ்க்கை.! Running News

உப்பளத் தொழிலாளர்களின் உப்புக்கரிக்கும் வாழ்க்கை.!

நேற்றைக்கு நண்பர்களோடு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பயணித்தபோது முள்ளக்காடு அருகே உப்பளப் பணிகளுக்காகச் செல்லும் மக்களைக் காணமுடிந்தது. அதிகாலையிலே பணிக்குச் செல்லும் இந்த மக்களின் வாழ்வின் துயரங்கள் எல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் இந்த உப்பளப் பணிகளில் ஆண் பெண் என இருசாரர்களும் ஈடுபட்டாலும், கோடு போடுவது, உப்பு வாருவது, வரப்புகளில் உப்பைச் சுமந்து வந்து ஒன்றுகுவிப்பதென்று எல்லா பணிகளிலும் எண்ணிக்கையில் அதிக அளவில் உழைப்பவர்கள் பெண்களே. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உப்பள […]

July 13, 2015 admin
ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி பரவி வரும் செய்தியின் பின்னணி!? Running News

ஜெயலலிதா உடல்நிலைப் பற்றி பரவி வரும் செய்தியின் பின்னணி!?

“உடல் நலக்குறைவு என்று இப்போது ஜெயலலிதா ஆடி வரும் இந்த நாடகம், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் சதித் திட்டமேயன்றி வேறு இல்லை. கடந்த வருடம் செப்டம்பர் 27ல் தண்டிக்கப்பட்டபோது இருந்த அனுதாப அலை, இப்போது இல்லை என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிவார். ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் போன்ற விவாதங்கள் அனைத்தும், உடல் நிலை சரியில்லை என்றால் அப்படியே தலைகீழாக மாறிப்போகும் என்பது ஜெயலலிதா நன்றாக அறிந்ததே. 1984ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை […]

July 12, 2015 admin
பேச்சு பேச்சாவா இருக்குது? Running News

பேச்சு பேச்சாவா இருக்குது?

மனிதர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே திருத்தமான முறையில் பேசி வருகிறார்கள். பேச்சு என்பது செவியால் கேட்கக் கூடிய சப்தம். ஓசை, இசை, ஒலி, அரவம் என்கிறார்கள். சுமார் 10,000 வேறுபட்ட ஒலிகளை மொழியின் வார்த்தைகளாகச் சொல்ல முடியுமென்று கணித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான சொற்கள் கொண்ட மொழிகள் சில இருக்கின்றன. ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான சொற்கள் கொண்ட மொழிகளும் இருக்கின்றன.மொழிகளின் முதன்மையான நோக்கம் பேசுவதுதான். பல மொழிகள் பேச ஆளில்லாமல் மறைந்துவிட்டன. பேசப்படும் மொழிகள், பேசப்படாத மொழிகள் என்று எல்லாவற்றையும் கூட்டி, […]

July 10, 2015 admin
ஊடகம் இல்லா உலகம் Running News

ஊடகம் இல்லா உலகம்

சன் டிவி,விஜய் டிவி ல்லாம் பார்த்தே பல வருடம் ஆச்சு.அவுட்லுக், இந்தியா டுடே சப்ஸ்கிரிப்ஷன் நிறுத்தி சில வருடம் ஆச்சு. டைம்ஸ் நவ், சிஎன்என் ஐபிஎன் எல்லாம் பார்த்து ஒரு வருடம் தாண்டி இருக்கும்.புதிய தலை முறை, தந்தி டிவி கூட பார்ப்பத நிறுத்திட்டேன். ஜூவி,நக்கீரன் எல்லாம் படிச்சு எத்தனையோ யுக காலம் ஆச்சு.குமுதத்தை தூக்கி எறிஞ்சும் பல வருடம் ஆச்சு. இன்னிக்குத்தான் ஞாபகம் வருது, ஆனந்த விகடனையும் மறந்து சில மாதம் ஆகிவிட்டதை. ஏன் ? […]

July 7, 2015 admin
வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கங்க! = ஆண்களுக்கு அட்வைஸ் தரும் ஆய்வு! Running News

வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கங்க! = ஆண்களுக்கு அட்வைஸ் தரும் ஆய்வு!

இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர்.நாட்டில் உள்ள 6.50 கோடி திருமண மாகாத ஆண்களுக்கு 2.38 கோடி மணப்பெண்களே உள்ளனர். அதனால் 5இல் ஒரு ஆண் வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1970கள், 80கள் மற்றும் 90களில் கோடிக் கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் ஆண், பெண் சரிவிகிதம் சமமாக இல்லை என்று கூறப்படுகிறது.இதனிடையே இன்றும் திருமண பருவத்தில் இருக்கும் மகனிடம், ‘உனக்கு பெண் […]

July 5, 2015 admin
தங்க முதலீட்டுத் திட்டத்தில் அப்டேட் செய்ய வேண்டிய அம்சங்கள்! Running News

தங்க முதலீட்டுத் திட்டத்தில் அப்டேட் செய்ய வேண்டிய அம்சங்கள்!

உலகிலேயே தங்கம் அதிகமாக வாங்குவது இந்தியாவில்தான். ஆண்டுக்கு சராசரியாக 850 முதல் 900 டன் வரையிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. துல்லியமாகச் சொல்வ தென்றால், 2014-ஆம் ஆண்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 843 டன். உலக தங்க சபையின் (World Gold Council) இந்தியக் கிளையின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பொதுமக்கள் கையில் 22,000 டன் தங்கம் நகைகளாகவும், நாணயங்களாகவும், பென்டென்ட்களாகவும் (Pendants), தங்கக் கட்டிகளாகவும் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான மக்கள் நகைகளாகத்தான் […]

July 4, 2015 admin
ஆபீஸ்லே கொஞ்ச நேரம் தூங்கினால் பணித் திறன் அதிகரிக்கும்! ஆய்வில் உறுதி Running News

ஆபீஸ்லே கொஞ்ச நேரம் தூங்கினால் பணித் திறன் அதிகரிக்கும்! ஆய்வில் உறுதி

நம்மில் பலர் அலுவலகத்தையும், அலுவலக வேலையையும், வீட்டிற்கு எடுத்து வருவார்கள். அல்லது இரவில் வெகு நேரம் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தொலைபேசியில் பேசியபடியோ அல்லது கணினியில் வேலை செய்துகொண்டோ அல்லது நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டோ இருப்பார் கள். இவ்வாறு செய்வது நமது தூக்கத்தின் பிரதான நேரத்தை விழுங்கிவிடும். அதாவது, முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும், உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை […]

July 1, 2015 admin
கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகும்  காசோலை பரிவர்த்தனை! Running News

கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகும் காசோலை பரிவர்த்தனை!

வங்கிக் கணக்கு மூலமாக பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படும் ஒரு சாதனம் காசோலையாகும் (Cheque). பொருளாதார உலகில் காசோலைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. காசோலை பயன்பாட்டினால், ஒருவருக்கொருவர் இடையேயான கொடுக்கல் வாங்கலில், பண நோட்டுகளின் பரிமாற்றம் குறைகிறது. காசோலை மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளில், பணம் கொடுத்தவர் மற்றும் பெற்றுக் கொண்டவரின் வழித்தடங்களை (Money trail) வங்கிக் கணக்கு மூலமாக எளிதாகக் கண்டறிய முடியும். காசோலை பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதன் மூலம், கருப்புப் பணப் புழக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். சொத்து உரிமை […]

June 27, 2015 admin
நாடாளுமன்ற கேன்டீனில் 60 முதல் 150 சதவீதம் வரை மக்கள் பணத்தில் மானியம்! Running News

நாடாளுமன்ற கேன்டீனில் 60 முதல் 150 சதவீதம் வரை மக்கள் பணத்தில் மானியம்!

அவித்த காய்கறிகளின் விலை ரூ. 4, மட்டன் கறிக்கு விலை ரூ.20 என்றால் நம்பமுடிகிறதா?. நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் நமது நாடாளுமன்ற கேன்டீனில் எம்.பி.க்களுக்குதான் இந்த விலையில் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. உலகில் வேறு எங்கும் கூட இந்த அளவுக்கு தரமான உணவுகள் இவ்வளவு மலிவாக கிடைக்குமா என்பது சந்தேகம்தான். மக்கள் வரிப்பணத்தில் 60 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை மானிய விலையில் இந்த உணவு வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற […]

June 25, 2015 admin
யோகாவுக்கு பல பில்லியன் டாலர் சந்தை!-  அசோசேம் Running News

யோகாவுக்கு பல பில்லியன் டாலர் சந்தை!- அசோசேம்

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் 191 நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக யோகா தினத்தை இந்தியாவில் வெகு சிறப்பான முறையில் மத்திய அரசு கொண்டாடியது. நாடு முழுவதும் சுமார் 650 மாவட்டங்களில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வை, பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் முன்னின்று நடத்தினார். டெல்லி ராஜபாதையில் நரேந்திர மோடி தலைமையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்வலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். ஆர்வலர்கள் அனைவரும் வெள்ளை நிற ஆடை […]

June 22, 2015 admin
உடனடி செய்திகள்