32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 207 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 207)
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நிலத் தங்கம் தண்ணீர்.. தண்ணீர்! Running News

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நிலத் தங்கம் தண்ணீர்.. தண்ணீர்!

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஏராளம். அப்போது வெட்டப்பட்ட நீர்நிலைகள்தான் இன்றளவும் விவசாயிகளுக்கும், அனைத்து மக்களின் குடிநீர்த் தேவைகளுக்கும் பயனளித்து வருகின்றன. அதன் பிறகு குறிப்பிடத்தக்க அளவுக்கு நீர்நிலைகள் உருவாக்கப் படவில்லை. அக்காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் தற்போது அழிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட நீர்நிலைகள் 39,202 உள்ளதாக அரசுப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன. மூன்றாவது உலகப் போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என தொலைநோக்குச் […]

June 21, 2015 admin
மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் திரையரங்குகள்! Running News

மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் திரையரங்குகள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையில்லாச் சூழலை உருவாக்கித் தர தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளபோதும், எந்தவொரு திரையரங்கிலும் இதுவரை வசதிகள் செய்யப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலை காரணமாக, அனைவராலும் பாராட்டப்படும் சமூக மாற்றத்துக்கான சிறந்த திரைப்படங்களைக் கண்டுகளிப்பதற்கு இயலாத சூழல் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2011-12 பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தமிழக முதல்வர் 110 விதியின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தடையில்லாச் சூழலை உருவாக்குவதற்கான அறிவிப்பு […]

June 17, 2015 admin
நிலா அது வானத்து மேலே..’பலானது’அதுக்கும் மேலே! – வின்வெளியில் அரங்கேறப் போகும் அந்தரங்கம்! (A) Running News

நிலா அது வானத்து மேலே..’பலானது’அதுக்கும் மேலே! – வின்வெளியில் அரங்கேறப் போகும் அந்தரங்கம்! (A)

திரிசங்கு மகாராஜாவுக்காக விசுவாமித்திர முனிவர் தமது தவ வலிமையால், சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே தனி சொர்க்கத்தை சிருஷ்டிக்க, அது திரிசங்கு சொர்க்கம் என்று பெயர் பெற்றது என்பது புராணக் கதை. ஆனால் அது போன்ற சொர்க்கத்தை இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்கு மேலே மெய்யாலுமே சிருஷ்டிக்க முயன்று வருகிறார்கள். அதன் ஒரு முயற்சியாக முதன் முதலாக வின்வெளிக்கு ஒரு ஜோடியை அனுப்பி செக்ஸ் உறவு மேற்கொள்ள வைக்க திட்டமிடுகிறார்கள். வின்வெளியில் எதுவும் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியாது. வின்வெளி […]

June 11, 2015 admin
உலக யோகா தின  – சூரிய நமஸ்காரம்! – சர்ச்சை Running News

உலக யோகா தின – சூரிய நமஸ்காரம்! – சர்ச்சை

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், யோகா தினத்தில் செய்யும் ஆசனங்களில் ‘சூரிய நமஸ்காரம்’ செய்யப் படுமென்றும், அனைத்து பள்ளிகளிலும் ‘சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்கு அகில இந்தியா முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.இது குறித்து அகில இந்தியா முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய உறுப்பினர் கமல் ஃபருக்கி கூறுகையில், “சூர்ய நமஸ்காரத்தை பள்ளிகளில் கட்டாயப்படுத்தக் […]

June 10, 2015 admin
ஹெல்மெட் எனப்படும் தலைகவசத்தின்  ஸ்தல வரலாறு! Running News

ஹெல்மெட் எனப்படும் தலைகவசத்தின் ஸ்தல வரலாறு!

தமிழகத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவதை அரசு இப்போது கட்டாயமாக்கி விட்டது. தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். விசாரணையின் முடிவில், ”ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த […]

June 8, 2015 admin
மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட கலப்பட உணவுப் பற்றிய கொஞ்சம் டீப் ரிப்போர்ட்! Running News

மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட கலப்பட உணவுப் பற்றிய கொஞ்சம் டீப் ரிப்போர்ட்!

நெஸ்லே தயாரிப்பான மேகி நூடுல்ஸின் மீது எழுந்துள்ள புகார் நாடெங்கும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், நம் சந்தைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே பாதுகாப்பானதுதானா என்று பலரும் யோசிக்க அரம்பித்து விட்டார்கள். நம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நமக்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளன. ஆனால், அவைகளும் பல வகையான நச்சுப்பொருட்கள் மற்றும் ரசாயனங்களால் பாதிக்கப் படுவதால், காய்கனிகளிலும் ஆபத்து மறைந்துள்ளது என்பது இப்போதுதான் பலருக்கு நினைவுக்கு வருகின்றது. செயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் […]

June 6, 2015 admin
இந்தாண்டு (ம்)பருவமழை குறையும் வறட்சி அதிகரிக்கும்! ஏன்? ஏன்?? Running News

இந்தாண்டு (ம்)பருவமழை குறையும் வறட்சி அதிகரிக்கும்! ஏன்? ஏன்??

நமது நாட்டில் பருவ மழை குறைவாக இருக்கும். 93 சதவீதம்தான் பருவமழை பெய்யும் என்று கடந்த மாதம் இந்திய வானிலை ஆய்வு துறை கணித்திருந்தது. ஆனால் இப்போது, பருவ மழை மேலும் குறையும் என்று இந்திய வானிலைஆய்வு துறையின் திருத்திய கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதாவது, 93 சதவீத பருவ மழை என்பது 5 சதவீதம் குறைந்து, 88 சதவீத பருவமழைதான் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இது சராசரிக்கும் குறைவாகத்தான் இருக்கும். இதனால் […]

June 4, 2015 admin
திரையுலகத்தில் குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்! Running News

திரையுலகத்தில் குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்!

குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி பெரும் விவாதம் எழுந்துள்ளது. அநேகமாக அனைத்து அரசியல் கட்சிகளும் மசோதா பற்றிய தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன. 14 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வியளிக்கும் திட்டம் ஏற்கெனவே அமலில் இருந்தாலும், குழந்தைத் தொழிலாளர் முறையை முழுவதுமாக ஒழித்துவிட முடியவில்லை. குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துபவர்களைத் தண்டிப்பதற்குரிய சட்டம் வலுவாக இல்லாததே இதற்குக் காரணம். புதிய சட்டத் திருத்தம் மூலமாக […]

June 3, 2015 admin
சூரிய வெப்பத்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏன்? Running News

சூரிய வெப்பத்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏன்?

நடப்பு ஆண்டில், இந்தியா முழுவதும் வெப்ப அலைகளின் பாதிப்பால் சுமார் 1,800-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிக அளவு பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே சுமார் 1,700-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரம், தெலங்கானாவில் மே 21-ஆம் தேதியில் இருந்து நேற்றுவரை வெப்ப அலைகளுக்கு சுமார் 2,600 பேர் இறந்து போயுள்ளதாக “ஈநாடு’ நாளிதழ் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அரசின் கணக்கெடுப்பிலும் சரி, ஈநாடு நாளிதழின் கணக்கெடுப்பிலும் சரி, […]

June 1, 2015 admin
ஃபேஸ்புக் நிறுவனர் படித்த ஹார்வேர்ட் யுனிவர்சிட்டியில்  14 சதவீதம் மாணவிகளுக்க்கு பாலியல் வன்முறை! Running News

ஃபேஸ்புக் நிறுவனர் படித்த ஹார்வேர்ட் யுனிவர்சிட்டியில் 14 சதவீதம் மாணவிகளுக்க்கு பாலியல் வன்முறை!

இன்றைய காலக்கட்டத்தில் சகலரும் பயன்படுத்தும் பேஸ்புக்கானது 2004 ஆம் ஆண்டில், 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், இதற்கான விதை ஊன்றப்பட்டது. பின்னாளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் Thefacebook” என மார்க் ஸக்கர் பெர்க் பெயரிட்டார். 2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் […]

May 28, 2015 admin
உடனடி செய்திகள்