32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 197 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 197)
தைப் பிறந்தாச்சு.. ஒரு நம்பிக்கை, ஒரு மகிழ்வு, ஒரு எதிர்பார்ப்பு வந்தாச்சு! Running News

தைப் பிறந்தாச்சு.. ஒரு நம்பிக்கை, ஒரு மகிழ்வு, ஒரு எதிர்பார்ப்பு வந்தாச்சு!

தை புத்தாண்டு பிறந்து பொங்கல் நாளின் போது விவசாய அறுவடைகள் முடிந்துவிடும். விவசாயிகள் அகம் மகிழ்ந்து போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கரி நாள் என்று கொண்டாடி கிராமங்களே மகிழ்ச்சியில் தளைக்கும். எனக்கு நினைவு தெரிந்தவரை கிராமத்தில் சிலம்பாட்டம், கபடி, பின்பு 1960களில் கைப் பந்து (volley ball) என்று விளையாட்டுப் போட்டிகள் நடப்பது வாடிக்கை. ஞாயிறைப் போற்றும் வகையில், அதாவது சூரியன் உதிப்பது உத்ராயணம், தஷ்ணாயணம் என அழைக்கப்படுவது உண்டு. தை மாதம் முதல் […]

January 15, 2016 admin
“எப்படி” இருந்த பொங்கல்  ‘இப்படி’ ஆகி போச்சே! Running News

“எப்படி” இருந்த பொங்கல் ‘இப்படி’ ஆகி போச்சே!

நெருப்பைக் கண்டு மிரண்டு கிடந்த ஆதி மனிதர்கள் அந்த நெருப்பில் வெந்து கிடந்த உணவுகளை உண்ட போது அதன் மென்மையையும் சுவையையும் அறிந்து கொண்டார் கள். அதே நெருப்பு இருட்டில் வெளிச்சம் தருவதை, குளிரில் வெப்பமூட்டுவதை, வனத்தில் பிற விலங்குகள் நெருங்கித் தாக்காமல் தடுப்பதை அனுபவத்தால் புரிந்து கொண்டவர்களாக அதைப் பாதுகாத்தார்கள். பின்னொரு நாளில் நாமே நெருப்பை உண்டாக்க முடியும் என்று கண்டுபிடித்தபோது குதித்தாடிக் கொண்டாடினார்கள். அப்படிக் கொண்டாடியதன் நோக்கம் அந்தக் கணத்தின் வெற்றியில் மகிழ்வது மட்டுமல்ல, […]

January 14, 2016 admin
நமது கல்விமுறையில் உள்ள கோளாறுகள் அம்பலம்! Running News

நமது கல்விமுறையில் உள்ள கோளாறுகள் அம்பலம்!

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளை களையும் தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும் முன்னேற்பாடுகளில் மத்திய அரசு ஈடுபட்டுள் ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இதே முயற்சியில் ஈடுபட்டபோது இதர எதிர்க் கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்போது பா.ஜ.க. அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்லூரி கள், […]

January 13, 2016 admin
சபரிமலை கோயிலுக்கு லேடீஸ் வரப்படாதா..ஏன்? சுப்ரீம் கோர்ட் கொஸ்டின்! Running News

சபரிமலை கோயிலுக்கு லேடீஸ் வரப்படாதா..ஏன்? சுப்ரீம் கோர்ட் கொஸ்டின்!

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக செல்கிறார்கள். சபரிமலை கோவிலுக்குள் 10–ல் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் செல்ல பல ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.அநேகமாக இந்தியாவிலுள்ள பெரும்பாலான கோவில்களில், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பினை வைத்திருக்கிறார்கள்.. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்று கொள்ள தகுதியுடைய எந்த பெண்ணும் கோவிலுக்குள் வரக் கூடாது என்று […]

January 12, 2016 admin
நெசவு தொழிலுக்கு  “பாடை” கட்டறாங்கோ ! – கதறும் கைத்தறியாளர்கள் Running News

நெசவு தொழிலுக்கு “பாடை” கட்டறாங்கோ ! – கதறும் கைத்தறியாளர்கள்

நம்ம இந்தியாவைப் பொருத்தவரையில் கைத்தறி தொழிலில் அரசு புள்ளி விவரங்களின்படி 43 இலட்சம் பேர் பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஜவுளி உற்பத்தியில் 11 சத வீதமும், ஜவுளி ஏற்றுமதி வருவாயில் 11 சதவீதம் துணிகள் பங்கு வகிக்கின்றன. இதில் கைத்தறியின் பங்களிப்பு பிரதானமாக உள்ளது. பட்டு சேலை, பெட்ஷீட் – வேட்டி – லுங்கி – டவல் – திரைச்சீலை -மேட் – தரைவிரிப்பு உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற துணிகளை உற்பத்தி செய்யும் நுண்திறன் வாய்ந்த […]

January 10, 2016 admin
பரணில் தூங்கும் தாவணிகள்… Running News

பரணில் தூங்கும் தாவணிகள்…

மழைநாட்களில் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருகரையும் வெள்ளம் வரும். வெள்ளம் வடிந்தபிறகு, ஆற்றங்கரையோரம் கெண்டை, வவுத்தான் கெண்டை போன்ற மீன்கள் துள்ளாட்டம் போடும். நண்பர்களுடன் ஆற்றுக்குச் சென்று மீன் பிடிப்போம். பெரும்பாலும் அக்காக்களின் தாவணிகளே மீன் பிடிக்கப் பயன்படும்.தாவணியை விரித்து, அந்தப்பக்கம் ஒருவனும், இந்தப் பக்கம் ஒருவனுமாக இருகைகளாலும் விரித்து தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் பிடித்துக்கொண்டு, கரையை நோக்கி தாவணியை இழுத்து வருவோம். குட்டி குட்டியாக ஏகப்பட்ட மீன்கள் சிக்கும். அவற்றைக் கரையில் பள்ளம் தோண்டி அந்த நீரூற்றில் […]

January 8, 2016 admin
வங்கிகளை சூறையாடும் வாராக்கடன் பிரச்னை! Running News

வங்கிகளை சூறையாடும் வாராக்கடன் பிரச்னை!

அரசு வங்கிகளின் வாராக்கடன்கள், அளவுக்கு அதிகமாக வளர்ந்து நிற்பது, எளிதாக ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு பொருளாதார நிகழ்வு இல்லை. நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு, ரிசர்வ் வங்கியும் மேற்கொள்ளும் என்று வங்கி நிர்வாகிகளுடனான சமீபத்திய சந்திப்பிற்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தன் கருத்தைக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.அரசு வங்கி கள் வழங்கியுள்ள மொத்த கடன் தொகையில், வாராக்கடன்களின் அளவு, ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில், 5.2 சதவீதத்திலிருந்து, 6 சதவீதத்திற்கு மேல் (சுமார் […]

January 6, 2016 admin
அவர் காரி துப்பவில்லை …..! இளையராஜா அறிவிருக்கா? என கேட்கவில்லை …!?? Running News

அவர் காரி துப்பவில்லை …..! இளையராஜா அறிவிருக்கா? என கேட்கவில்லை …!??

கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் எங்கள் குடும்ப நண்பர். என் சினிமா வாழ்வுக் கான ஆரம்ப புள்ளி இப்ரஹிம் ராவுத்தர் மூலமாக சுதாங்கன் மூலமாக விஜயகாந்த் அலுவலகம்தான்… விஜயகாந்தை 30 வருடங்களாக தெரியும். அவரது பலம் பலவீனம் நற்குணம் நாகரீகம் நியாய வாதம் அறிவு மற்றும் சில விஷயங்களில் அறிவின்மை என எல்லாம் ஓரளவு தெரியும் அவரது வாழ்க்கை தி மு… தி பி என இரண்டு பகுதிகளாக பிரிக்கக் கூடியது. அதே போல சினிமா வாழ்க்கை சினிமா […]

December 28, 2015 admin
ஜல்லிக்கட்டு தடை ஏன்? யாரால்? எப்படி? நடை முறை சாத்தியம் என்ன? Running News

ஜல்லிக்கட்டு தடை ஏன்? யாரால்? எப்படி? நடை முறை சாத்தியம் என்ன?

தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தடை செய்யப் பட்டுள்ளது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி, ‘வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது. அதன் படி பல விலங்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவைகளை பொது இடங்களில் துன்புறுத்துவது குற்றமானது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை சிங்கம்,புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை நாம் நம் பகுதிகளில் ‘சர்க்கஸ்’ […]

December 28, 2015 admin
”காற்று வாங்கலையோ.. காற்று!” – விலை போகும் இயற்கை வளங்கள் Running News

”காற்று வாங்கலையோ.. காற்று!” – விலை போகும் இயற்கை வளங்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள். காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது கனடா வைச் சேர்ந்த ஒரு நிறுவனம். “விட்டாலிட்டி ஏர்’ என்ற அந்த பன்னாட்டு நிறுவனம் கனடாவில் உள்ள பான்ஃப் மலை உச்சி, லூயிஸ் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து தூய்மையான […]

December 27, 2015 admin
உடனடி செய்திகள்