32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 187 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 187)
விசா-வுக்காக  (கள்ள)க் காதல் செய்யும் இலங்கை இளைஞர்கள் ! எடிட்டர் ஏரியா

விசா-வுக்காக (கள்ள)க் காதல் செய்யும் இலங்கை இளைஞர்கள் !

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். இப்படி ஒரு இலங்கை ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற அப்பெண், தனது மனவலியை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அப்பெண்ணின் காதல் கதை இதோ, எங்களுடைய முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை என்னிடம் தெரிவித்தான். எங்கள் சந்திப்பிற்கு […]

October 6, 2016 admin
காவிரி சிக்கலில் மத்தியரசு இனியும் அமைதியாக இருப்பது சரியானதாக இருக்காது! எடிட்டர் ஏரியா

காவிரி சிக்கலில் மத்தியரசு இனியும் அமைதியாக இருப்பது சரியானதாக இருக்காது!

ஒரு முன்னாள் பிரதமர் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக்கண்டித்து உண்ணாநிலை என்கிறார். கர்நாடக அரசு கூட்டுகின்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மூன்று மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். கண்டிக்கத் திராணியற்ற, கையாலாகாத இந்த நாட்டின் பிரதமர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்று என்று தன் கட்சியைச்சேர்ந்த முதலமைச்சருக்குக்கட்டளையிட மறுக்கும் ஊர்சுற்றும் சோனியாவும் ,இராகுலும். தமிழ்நாட்டிற்கு சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக காலில் போட்டு மிதித்திருக்கிறது. காவிரி மேலாண்மை […]

October 2, 2016 admin
நாடாளுமன்றம், சட்டமன்றங்களை விட நமக்கு மிகவும் வேண்டியவை உள்ளாட்சி அமைப்புகளே! எடிட்டர் ஏரியா

நாடாளுமன்றம், சட்டமன்றங்களை விட நமக்கு மிகவும் வேண்டியவை உள்ளாட்சி அமைப்புகளே!

நவீன தொழில்நுட்பம் பற்றி வாயடைத்து பேசும் நாம், மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். ஆனால் அதற்கான உணவை படைக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை. அப்படித்தான், பலவிதமான தேர்தல்களில், இந்த உள்ளாட்சி தேர்தல் பற்றிய பார்வையும். வீடுகட்டுதல், பிள்ளைகள் கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தீர்மானித்துவிட்டு அதற்காக சில காரியங்களை வித்திட்டுவிடுவோம். இருப்பினும், தினந்தோறும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க மாட்டோம். அதுபோலத்தான் நாடாளுமன்றத்தேர்தலும். அதன்மூலம் நமக்கு பெரிய விஷயங்கள் கிடைத்தாலும், நேரடியாக […]

September 28, 2016 admin
பெருகிவரும் தற்போதைய விவாகரத்துக்கள்  எதைக் காட்டுகிறது? எடிட்டர் ஏரியா

பெருகிவரும் தற்போதைய விவாகரத்துக்கள் எதைக் காட்டுகிறது?

திருமண பந்தம் என்பது, நம் சமுதாயத்தில் சில பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலான மனநுட்ப உலகில் எத்தகையதாக இருந்தது! ; இன்றைய தொழில்நுட்ப உலகில் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும் போது… வருத்தமாகத்தான் உள்ளது.எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள்? இவ்வாறு சில நாட்கள் / மாதங்கள்/ வருடங்களுக்குள் பிரிந்து போகவா? முன்பெல்லாம் விவாக ரத்தாகும் அல்லது கணவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண்களைக் கண்டால், கழிவிரக்கம் ஏற்படும்! தவறு பெண்ணிடமா அல்லது ஆணிடமா என்பதெல்லாம் உடனடியாக […]

September 16, 2016 admin
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பெங்களூர் சொர்க்கமாகவும், சென்னை நரகமாகவும் மாறிவிடும்!? எடிட்டர் ஏரியா

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் பெங்களூர் சொர்க்கமாகவும், சென்னை நரகமாகவும் மாறிவிடும்!?

பெங்களூர்-ஓசூர் சாலையில் எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ எம்பசிஸ், ஆரக்கிள், டெல் என பல ஐ.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன. சர்வதேச நிறுவனங்களும் செயல்படுகிறது. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரும் மழை வெள்ளத்தால் பல ஐ.டி நிறுவனங்கள் ஒரு வாரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டன. இதையடுத்து பல ஐ.டி நிறுவனங்கள் பெங்களூருக்கு இடம் மாறின. ஊழியர்களையும் பெங்களூருக்கு இடம் மாற்றியது. புதிதாக வேலையில் சேரும் ஊழியர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் பெங்களூரில் கடும் இட […]

September 14, 2016 admin
கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும் காவிரியே…! எடிட்டர் ஏரியா

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும் காவிரியே…!

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும் மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும் செங்கனி மேலாடும் மாமரம் யாவும் ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும் அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நற் ஆலயம் அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம் தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம் (ஸ்ரீரங்க….) கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறுவீடு தென்னகமாகும் கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம் மங்கல நீராட முன்வினை தீர்க்கும் நீர்வண்ண எங்கும் மேவிட […]

September 12, 2016 admin
காஷ்மீர்  மக்களை இந்திய குடிமக்களாக உருவாக்கும் முயற்சியில் நாம் தோல்வி கண்டுவிட்டோமா?! எடிட்டர் ஏரியா

காஷ்மீர் மக்களை இந்திய குடிமக்களாக உருவாக்கும் முயற்சியில் நாம் தோல்வி கண்டுவிட்டோமா?!

இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் உற்றுநோக்கி ஆச்சரியப்படும் வகையில் நம் நாட்டின் எல்லை மாநிலமான காஷ்மீரில் 52 நாள்களாக கலவரம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இதுவரையிலும் அம் மாநிலத்தின் எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளும், ஆயுதப்படையினரும் ஊடுருவி தீங்கிழைக்கும் நடவடிக்கைகளையே நாம் கண்டு வந்தோம். இப்போதுதான் முதன்முதலாக காஷ்மீரின் குடிமக்களில் இளைஞர்கள் கொதித்தெழுந்து போலீஸாரையும், ஆயுதப்படையினரையும் தாக்கிப் போராடும் நடவடிக்கைகளை நாம் காண்கிறோம். இவற்றை மத்திய – மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய அதிர்ச்சித் […]

September 9, 2016 admin
கவர்மெண்டை எதிர்த்து கமெண்ட் போட்டா/ சொன்னா   தேச விரோத வழக்கா? – சுப்ரீம் கோர்ட் வார்னிங்! எடிட்டர் ஏரியா

கவர்மெண்டை எதிர்த்து கமெண்ட் போட்டா/ சொன்னா தேச விரோத வழக்கா? – சுப்ரீம் கோர்ட் வார்னிங்!

தேச விரோதம் என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால், தேச விரோத வழக்குகள், தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது தேச விரோத வழக்குகளை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர், கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி, எழுத்தாளர் அருந்ததி ராய், மனித உரிமை ஆர்வலர் விநாயக் சென், ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் ஆகியோருக்கு எதிராக தேசவிரோத வழக்குகள் […]

September 6, 2016 admin
நான் ஏன் “ரௌத்திரம்” படிக்க மாட்டேன்.. ? எடிட்டர் ஏரியா

நான் ஏன் “ரௌத்திரம்” படிக்க மாட்டேன்.. ?

செப்டம்பர் மாத ரௌத்திரம் இதழை நேற்று (4-9-2016) தான் படித்தேன். அதில் இதழாசிரியர் தமிழருவிமணியன் அவர்கள் “அன்பிற்கினிய நண்பர்களுக்கு..” என வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார். அதில் “ரௌத்திரம் இதழின் ஆண்டுச் சந்தாவான ரூ. 180-யை உடனடியாக அனுப்பி வையுங்கள்” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனக்கு வேதனையும் கோபமும் ஒன்றை ஒன்றை முந்திக்கொண்டு எட்டிப்பார்த்தது. தமிழகத்தில் இப்போது பேச்சாளர்களுக்குத்தான் நல்ல வாய்ப்பும் வசதியும். நாடறிந்த நல் அறிஞர். நல்ல பேச்சாளரும்கூட. 108 போற்றி சொல்லி பதவி பெறலாம். ஆளும்கட்சிக்குச் […]

September 5, 2016 admin
இன்ஜினியரிங் காலேஜ் மவுசு குறையுது + இன்ஜி. ஸ்டூடன்ஸ் சூசைட்  எகிறுது! எடிட்டர் ஏரியா

இன்ஜினியரிங் காலேஜ் மவுசு குறையுது + இன்ஜி. ஸ்டூடன்ஸ் சூசைட் எகிறுது!

தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் மீதான மோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கு கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது உள்ளிட்ட சில காரணங்கள் கூறப்படுகின்றன.இந்தியாவில் பொறியியல் எனப்படும் இன்ஜினியரிங் , தொழில்நுட்பத் துறை தனது ஆதிக்கத்தைத் தொடங்கிய 1990-களுக்குப் பிறகு பொறியியல், தகவல் தொழில்நுட்பப்படிப்புகள் படிப்பதற்கு குக்கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் வரத் தொடங்கினர். பட்டி தொட்டிகளில் எல்லாம் புதிது புதிதாக    இன்ஜினியரிங்  கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பம் படித்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களைக் காட்டிலும், […]

September 3, 2016 admin
உடனடி செய்திகள்