32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2454 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 18 / 246
செய்திகள் வரிசை (பக்கம் 18)
இறக்குமதியைக் குறைப்போம்… இந்தியாவை உயர்த்துவோம்: இயற்கை வளங்களின் தற்சார்பு கனவு! Exclusive

இறக்குமதியைக் குறைப்போம்… இந்தியாவை உயர்த்துவோம்: இயற்கை வளங்களின் தற்சார்பு கனவு!

உக்ரைன் – ரஷ்யா போராக இருந்தாலும் சரி, வளைகுடா நாடுகளின் பதற்றமாக இருந்தாலும் சரி, சம்பந்தமே இல்லாத ஒரு போரினால் இந்தியா இன்று பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது. இதற்கு முதன்மையான காரணம், நமது நாட்டின் ‘மூலப்பொருள் பாதுகாப்பு’ (Raw Material Security) இன்னும் உலக நாடுகளின் கைகளிலேயே இருப்பதுதான். கச்சா எண்ணெயில் 90%, தாமிரத்தில் 95%, தங்கத்தில் 99.5% என அடுக்கடுக்கான இறக்குமதிப் பட்டியலை வைத்துக் கொண்டு ‘வளர்ந்த பாரதம்’ என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால், […]

March 10, 2026 admin
‘அன்னபூர்ணா’க்கள் சூரிய ஒளி அடுப்புக்கு மாறாதது ஏன்? Exclusive

‘அன்னபூர்ணா’க்கள் சூரிய ஒளி அடுப்புக்கு மாறாதது ஏன்?

யார் எதைச் சொன்னாலும், அதற்கு ஆயிரம் வியாக்கியானங்களும் தர்க்கங்களும் பேசி, தங்களை மேதாவிகளாகக் காட்டிக்கொள்ளும் அன்னபூர்ணா போன்ற பெரிய உணவகங்கள் கூட, சிலிண்டர் தட்டுப்பாடு என்ற ஒரே நாளில் பாதி ஷட்டரை மூடிவிட்டன. மேற்கு ஆசியாவில் போர் மூண்டால், இங்கே கோயம்புத்தூரிலும், சென்னையிலும் அடுப்பு எரியாது என்பதுதான் இன்றைய யதார்த்தம். ஆனால், இந்த அவலநிலைக்குப் போர் மட்டும்தான் காரணமா? அல்லது நம் உணவகங்களின் அப்டேட் ஆகாத மெத்தனப் போக்கா? தர்க்கம் பேசும் வாய்.. தயங்கும் கை! ஜி.எஸ்.டி […]

March 10, 2026 admin
பெஸ்டியா? பாப்புலர் குரூப்பா?-பதின்ம வயதினரை ஆட்டிப்படைப்பது யார்? Exclusive

பெஸ்டியா? பாப்புலர் குரூப்பா?-பதின்ம வயதினரை ஆட்டிப்படைப்பது யார்?

பதின்ம வயதில் (Adolescence) நுழையும் சிறுவர்களுக்குப் பெற்றோர்களை விட நண்பர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். “யார் சொல்வதைக் கேட்பது?” என்கிற குழப்பம் அவர்களுக்கு ஒருபுறம் இருந்தாலும், உண்மையில் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொருவரைத் தேடுகிறார்கள் என்பதை அமெரிக்காவின் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகம் (FAU) நடத்திய புதிய ஆய்வு நிரூபித்துள்ளது. நட்பு என்பது ஒரே மாதிரியான அழுத்தம் தரும் விஷயம் அல்ல; அது மிகவும் நுணுக்கமானது என்பதை 543 மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு விளக்குகிறது. இருவேறு […]

March 9, 2026 admin
சொந்தச் சொதப்பல்களைக் கண்டு சிரிப்பதே ஆகச்சிறந்த ‘பவர் மூவ்’ Exclusive

சொந்தச் சொதப்பல்களைக் கண்டு சிரிப்பதே ஆகச்சிறந்த ‘பவர் மூவ்’

வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் நம்மைப் பல நேரங்களில் சங்கடத்திற்குள்ளாக்கும். ஒரு பார்ட்டியில் கண்ணாடி கதவை கவனிக்காமல் மோதுவது அல்லது ஒருவரது பெயரைத் தவறாகக் குறிப்பிடுவது எனப் பட்டியல் நீளும். இதுபோன்ற தருணங்களில் நாம் காட்டும் ‘ரியாக்‌ஷன்’தான் நமது ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்கிறது அமெரிக்க உளவியல் சங்கத்தின் (APA) புதிய ஆய்வு முடிவுகள். சங்கடம் VS சிரிப்பு: எது அதிக மதிப்பைத் தரும்? கார்னெல் பல்கலைக்கழகத்தின் ‘எஸ்சி ஜான்சன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ பேராசிரியரான […]

March 6, 2026 admin
பறவைகளின் கீதத்தில் ஒளிந்திருக்கும் மனித மூளையின் வரைபடம் ஆய்வு முடிவுகள்

பறவைகளின் கீதத்தில் ஒளிந்திருக்கும் மனித மூளையின் வரைபடம்

இயற்கையின் இசைக்கலைஞர்களான கனரி (Canary) பறவைகளின் கீச்சொலிகள் வெறும் வசந்த காலத்தின் அழைப்பல்ல; அவை கோடிக்கணக்கான நரம்பணுக்களின் நுட்பமான உரையாடல். மனித மொழியின் ரகசியங்களை உடைக்க, இப்போது ஒரு புதிய சாவி கிடைத்துள்ளது. அதன் பெயர் ‘TweetyBERT’. கூகுளின் தேடல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் அதே ‘BERT’ தொழில்நுட்பத்தை, பறவைகளின் பாடல்களைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் மடைமாற்றியுள்ளனர். இயற்கையின் தரவுத் தொகுப்பு கனரி பறவைகள் ஏன்? மற்ற பறவைகளை விடவும் இவை மிக நீண்ட, சிக்கலான பாடல்களைப் பாடும் திறன் […]

March 6, 2026 admin
புதிய செல்களை உருவாக்கும் ‘நியூரோஜெனெசிஸ்’: உங்கள் மூளையை நீங்களே செதுக்க முடியும்! Exclusive

புதிய செல்களை உருவாக்கும் ‘நியூரோஜெனெசிஸ்’: உங்கள் மூளையை நீங்களே செதுக்க முடியும்!

நமது மூளை ஒருமுறை வளர்ந்து விட்டால் அவ்வளவுதான், அதற்கு மேல் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற பழைய நம்பிக்கையை நவீன அறிவியல் உடைத்தெறிந்துள்ளது. பொதுவாக ‘நியூரோபிளாஸ்டிசிட்டி’ (Neuroplasticity) பற்றிப் பேசும்போது, மூளையில் ஏற்கனவே இருக்கும் செல்களைப் புதுப்பிப்பது அல்லது அவற்றின் இணைப்புகளை மாற்றி அமைப்பது பற்றிப் பேசுகிறோம். இது ஒரு பழைய வீட்டைப் புதுப்பிப்பது (Renovation) போன்றது. ஆனால், ‘நியூரோஜெனெசிஸ்’ (Neurogenesis) என்பது முற்றிலும் மாறுபட்டது; இது இருக்கும் வீட்டில் புதிய அறைகளைக் கட்டுவதற்குச் […]

March 5, 2026 admin
2030 டிஜிட்டல் சிறை: ஈரானை குறிவைக்கும் உலக வங்கி ஆதிக்கக் குழுக்கள்! Exclusive

2030 டிஜிட்டல் சிறை: ஈரானை குறிவைக்கும் உலக வங்கி ஆதிக்கக் குழுக்கள்!

உலக அரங்கில் ஈரான் இப்போது ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கிறது. ஈரான் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளோ அல்லது அங்கு நடத்தப்படும் தாக்குதல்களோ வெறும் அணு ஆயுதங்களுக்காகவோ அல்லது கச்சா எண்ணெய் வளத்திற்காகவோ மட்டும் நடப்பவை அல்ல. இதன் பின்னணியில் ‘பேங்கிங் எலைட்ஸ்’ (Banking Elites) எனப்படும் உலகளாவிய நிதி ஆதிக்கக் குழுக்களின் மிகப்பெரிய சதித்திட்டம் ஒளிந்திருக்கிறது. நிழல் உலகத்தை ஆளும் வங்கி முறைமை உலகப் பொருளாதாரத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் சில குறிப்பிட்ட குடும்பங்கள் மற்றும் […]

March 5, 2026 admin
குவாண்டம் அதிரடி:உங்கள் நிகழ்காலம் கடந்த காலத்தை மாற்றுகிறதா? எடிட்டர் ஏரியா

குவாண்டம் அதிரடி:உங்கள் நிகழ்காலம் கடந்த காலத்தை மாற்றுகிறதா?

நேரம் என்பது ஒரு நேர்க்கோடு போன்றது, அது எப்போதும் முன்னால் மட்டுமே ஓடும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) என்ற விந்தையான அறிவியல் உலகம், நாம் இதுவரை காலத்தைப் பற்றி வைத்திருந்த அத்தனை கணிப்புகளையும் தவுடுபொடியாக்குகிறது. சமீபத்திய குவாண்டம் ஆய்வுகள் சொல்லும் ஒரு அதிரடித் தகவல் என்னவென்றால், காலம் என்பது ஒரு நதி போல ஓடுவதில்லை; அது ஒரு காகிதத்தைப் போல தனக்குள்ளேயே மடிந்து கொள்கிறது (Folding) என்பதுதான். இது […]

March 4, 2026 admin
ஊடக வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்:லோகோ திருடர்களுக்கு இனி சிறைதான் வழி Exclusive

ஊடக வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்:லோகோ திருடர்களுக்கு இனி சிறைதான் வழி

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்களின் பெயரையும், அதன் இலச்சினையையும் (Logo) பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் நச்சுக்கருத்துகளைப் பரப்புவதைக் கண்டிக்கிறோம் என்று மட்டும் சொல்வது இன்று சிலருக்குப் பிழைப்பாகவே போய்விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூச்சலிடும் முகமே இல்லாத “சமூக வலைதளப் போராளிகள்”, இன்று எல்லையைக் கடந்து அருவருப்பான சொற்களைப் புழங்கத் தொடங்கியுள்ளனர். இதை வெறும் ‘கண்டனம்’ என்ற ஐந்து எழுத்தில் கடந்து செல்வது மிகப்பெரிய வரலாற்றுத் தவறு. அருவருப்பானச் சொல்லாடல்: […]

March 4, 2026 admin
உறவா? கசப்பா? ராகுல் – ஸ்டாலின் நட்பின் விரிசலும் காங்கிரஸின் பேராசையும்! Exclusive

உறவா? கசப்பா? ராகுல் – ஸ்டாலின் நட்பின் விரிசலும் காங்கிரஸின் பேராசையும்!

அரசியலில் ‘நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை’ என்பது பழமொழி. ஆனால், ‘நிரந்தரப் பாசம்’ என்பது உண்டா என்ற கேள்வி இப்போது தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக உறவுக்கு இடையே எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “திமுக கூட்டணியில் 25 இடங்களையெல்லாம் ஏற்க மாட்டோம்” என்று கறாராகப் பேசியிருப்பது ஒருபுறமெனில், ராகுல் காந்தியின் வாழ்த்தில் தெரிந்த ‘அரசியல் குளிர்ச்சி’ மறுபுறம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 1. ‘சகோதரர்’ டூ ‘முதலமைச்சர்’: ராகுலின் மெளன மாற்றம் […]

March 2, 2026 admin
உடனடி செய்திகள்