பலூன் – திரை விமர்சனம்! – புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
பலூன் என்ற வார்த்தையே சகல்ருக்கும் பிடிக்கும் என்று சொன்னால் மிகையல்ல. பிறந்தநாள், திருமணம், திருவிழாக்களில் பலூன்கள் இன்று முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டன. தற்போதைய பலூன்களில் ஹீலியம், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஆக்ஸிஜன், காற்று, நீர் போன்றவற்றை நிரப்பிப் பயன்படுத்துகிறார்கள். ரப்பர், லாடெக்ஸ், நைலான் துணி போன்ற பொருட்களில் இருந்து நவீன பலூன்கள் தயாரிக்கப்படுகின்றன. விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் பொம்மை பலூன்கள் கிடைக்கும் நிலையில் அதே பலூன் என்ற பெயரில் பத்திரிகையாளர் ஞாநி பலூன் என்ற டைட்டிலில் ஒரு நாடகம் உருவாகி அரங்கேற்றி காணாமல் போன நிலையில் தற்போது அதே நேமில் ஒரு சினிமாவை தயார் செய்து ரிலீஸ் செய்திருக்கி றார்கள். இந்த பலூனும் ஸ்கிரீனில் பறக்கத் தொடங்கி இண்டர்வெல் வரை குதூகலத்தை கொடுத்து விட்டு அப்பாலே பலூனுக்கே உரிய ஸ்டைலில் காற்று இறங்கி விடுகிறது.
ஆம்.. வயக்கமான பங்களாவில் வயக்கமான பேய், வயக்கமான லைட் அணைந்து மிரட்டும் சீன்கள், வயக்கமான பிளாஷ் பேக் மற்றும் வயக்கமான விட்டலாச்சார்யா டைப் கதைதான். அதனால்தான் இப்படத்தின் இயக்குனர் சினிஷ் ஸ்ரீதரன் ரொம்ப புத்திசாலிதன்ம் என்று யோசித்து பட ஆரம்பத்திலேயே நான் புதிதாக ஒன்றும் செய்து விடவில்லை …. சமீபத்திய சில ஹாலிவுட் படங்களிலிருந்துதான் நிறைய சுட்டிருக்கிறேன் என பறை சாற்றி படத்தின் சிறப்பை குறைத்து விடுகிறார்.
அதாவது சினிமா டைரக்டராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க் கதையைத் உருவாக்க எண்ணி தன் அண்ணன் மகன் பப்பு, தன் அசிஸ்டெண்ட்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) – எல்லாரோருடன் ஊட்டி போய் ஒரு பங்களாவில் தங்குகிறார்.
அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ரொம்ப மர்மமா சில சாவுகள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்துத் தகவல்களைச் சேகரிக்கிறார் குட்டி. அதே சமயம் இதே குட்டி வசிக்கும் பங்களாவிலேயே சில விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. என்னான்னு பார்த்த இந்த ஜெய் அண்ணன் மவன் உடம்புல ஒரு பேய் வந்து இறங்கிடுச்சுன்னாங்க. அட.. சொல்லும் போதே ஜெய்யோட ஒய்ஃபா வந்த அஞ்சலி உடம்பிலும் பேய் இறங்க அப்பாலே ஹீரோ ஜெய் உடம்பிலும் பேய் இறங்கி ரண களம் பண்ண முயன்று சோர்வடைய வைத்து விட்டது!
எடுத்துக் கொண்ட பேய் கதையை இயக்குநர் மெருக்கேற்றி இருப்பதை விட யுவனின் கை வண்ணமும் ஆர்.சரவணின் கேமராவும்தான் ஒட்டு மொத்த படத்தை தேற்றி இருக்கிறது. கூடவே ரொம்ப மெனக்கெட்டு இருக்கும் எடிட்டர் ரூபனுக்கு இயக்குநர் தாங்க்ஸ் சொல்ல வேண்டும். நடித்தவர்களில் ஜெய்-யை விட அதிகம் பேசி அவ்வப்போது சிரிக்க வைக்க முயலும் யோகிபாபு-வின் சில டயலாக்குகள் எல்லை மீறலாக இருக்கிறது. ஜெய் நேரம் கிடைக்கும் போது நல்ல நடிப்பு கிளாஸூக்கு போனால் அவருக்கு நல்லது.
மத்தபடி படத்தை பற்றி சொல்வதென்றால் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,,!



