’அழகிய கண்ணே’ -விமர்சனம்!
நேஷனல் அவார்ட் வாங்கிய அடைரக்டர் சீனி ராமசாமியின் உடன் பிறந்த விஜயகுமார் என்பவர் இயக்கத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் & சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் படமே “அழகிய கண்ணே”. முதல் படத்திலேயே காதலில் சாதி, சமூகப்போராட்டம், சினிமா இயக்குநராவதன் வலி,, குடும்பத்தில் கணவன் & மனைவிக்குள் நிலவும் சர்ச்சை என்று ஏகப்பட்ட விஷயங்களை சொல்ல முயன்றிருப்பதால் எதையும் புரிந்து கொள்ல முடியாமல் போய் விடுகிறது..!

திண்டுக்கல் டிஸ்டிரிக்கில் லியோ சிவக்குமார் சினிமாவில் டைரக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார்.. அதை ஒட்டி புரட்சிகரமான நாடகங்களெல்லாம் நடத்தும் நாயகன் மீது எதிர் வீட்டில் இருக்கும் அவாளாத்து பெண்ணான சஞ்சிதா ஷெட்டி லவ் செய்கிறார். இதனிடையே டைரக்டர் பிரபு சாலமனிடம் அசிஸ்டெண்ட்டாக சேர லியோ சிவக்குமாரும், ஐடி ஒன்றில் கிடைத்த வேலையை ஒட்டி சஞ்சிதாவும் சென்னைக்கு வருகின்றனர். ஒரு சூழலில் சிலபல எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். குழந்தையும் பிறக்கிறது. கூடவே சென்னையில் சொந்த வீடு ஒன்றை வாங்குகிறார்கள். லியோ சிவக்குமாருக்கும் படம் இயக்கும் வாய்ப்பும் கைகூடி வருகிறது. இப்படி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடந்து வரும் போது, திடீரென்று லியோ சிவக்குமாருக்கு வரும் ஒரு தொலைப்பேசி அழைப்பால், அனைத்தும் தலைகீழாக மாறிவிடுகிறது. அது என்ன? என்பது தான் ‘அழகிய கண்ணே’ படக் கதை.
இன்பா என்ற பெயரில் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் முதல் படத்திலேயே டான்ஸ், ஃபைட், லவ், காமெடி என சகல காட்சிகளிலும் ஸ்கோர் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்.. ஆனால் லியோ சிவகுமார் நடிப்பை இன்னும் கற்றுக் கொள்ளுங்கள்.. ஆக்ஷன் ஹீரோவுக்கெல்லாம் இப்போது ஆசை வேண்டாம். ஆனாலும் அசிஸ்டெண்ட் டைரக்டர் ரோலில் பக்காவாகப் பொருந்திக் கவர்கிறார். சஞ்சிதா வழக்கம்போல் தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை நடிப்பில் கச்சிதமாகப் பிரதிபலித்துச் செல்கிறார். அதிலும் ஒரு கைக்குழந்தைக்கு தாயாக வேலைக்கு போகும் பெண்ணாக முதிர்ச்சியான நடிப்பை தந்து கவர்கிறார். ஒரு டைரக்டரின் பொறுப்பைபிரபு சாலமன் மூலம்காட்டியிருப்பது அட்டகாசம்.. சிங்கம்புலி காமெடி எடுபடவில்லை
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் இருந்தாலும், பின்னணி இசையும் அதற்கேற்ப ஒளிப்பதிவும் படத்தை காத்து விடுகிறது
ஆனால் கோலிவுட்டில் கேட்டு பார்த்து பார்த்து சலித்த கதை .. ஆனால் குழந்தை வளர்ப்பு முறை பேசியிருப்பது புதுசு. ஆனால் அடுத்த காட்சிகளை பார்வையாளனே யூகிக்க கூடிய திரைக்கதையால் ஈர்க்க தவறி விடுகிறது
மொத்தத்தில் அழகிய கண்ணே – ஏமாத்திப்புட்டாய்ங்க
மார்க் 2.75/5.


